உங்கள் மண்டையில் ஏதாவது இருக்குதா! விஜய்யின் பெரம்பூர் தொகுதியில் வெடித்து பேசிய மேயர் பிரியா!

  • சென்னை: உங்கள் மண்டையில் ஏதாவது இருக்குதா? என முதல்வரின் பெரம்பூர் தொகுதியில் மேயர் ஆர்.பிரியா கடுமையாக விமர்சித்திருந்தார். விஜய் முதல்வராக பொறுப்பேற்றது முதல் இதுவரை அவரை மரியாதை நிமித்தமாக கூட மேயர் என்ற முறையில் பிரியா சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    Advertisement

    இதுகுறித்து மேயர் ஆர்.பிரியா கூறியிருப்பதாவது: தவெக ஆட்சிக்கு வந்து இத்தனை நாட்களாகியும் இதுவரை எந்த திட்டத்தையும் புதிதாக செய்யவில்லை. ஸ்டிக்கர் ஆட்சியும் சோஃபா ஆட்சியும்தான் தற்போது வரை நடந்து வருகிறது.

    Advertisement

    ஆனால் தங்கள் தவறுகளை அவர்கள் ஒப்புக் கொள்ளாமல், திமுகதான் காரணம் என சொல்லி வருகிறார்கள். ஆட்சிக்கு வருவதற்கு முன்பு பொதுக் கூட்டங்களில் திமுகவை விமர்சித்து வந்தனர்.

    தற்போது முதல்வராக இருக்கும் விஜய், மேடைகளில் பேசிய போது திமுகவை தீய சக்தி, அந்த சக்தி, இந்த சக்தி என பேசினார். திருச்சியில் விஜய் பேசிய போது ஸ்கிரிப்ட் திடீரென மறந்துவிட்டது. உடனே அவர் பார்த்து படிக்கிறார். யாரோ எழுதி கொடுத்த ஸ்கிரிப்டை படிக்கிறீர்கள் சரி! அதை காரில் செல்லும் போதாவது படித்திருக்கலாமே!

    பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்ற முதல்வர் விஜய், அங்கு அந்த மக்களை சந்தித்து நன்றி தெரிவித்துவிட்டு, அவர்களுக்கு என்ன திட்டங்களை தவெக ஆட்சி செய்ய போகிறது என்பதை எடுத்துக் கூறுவதுதான் நல்ல தலைவருக்கு அழகு.

    Advertisement

    ஆனால் ஸ்டாலினோ, தேர்தல் முடிவுகள் வந்த அடுத்த நாளே தொகுதி மக்களை சந்தித்து நன்றி தெரிவித்தார். அப்போது மக்கள் தன்னை தோற்கடித்த நிலையிலும் அது குறித்து மக்களிடம் ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை. வெறும் சோசியல் மீடியாவில் மட்டுமே அரசியல் செய்யக் கூடியவர்கள்தான் இந்த தற்குறி கூட்டம் என சொல்லலாம்.

    ஆவூன்னா முதல்வர் விஜய் விர்ச்சுவர் வாரியர்ஸ் என பேசி வருகிறார். நான் அவர்களை பார்த்து கேட்கிறேன், ஏம்ப்பா விர்ச்சுவர் வாரியர்ஸ்களா, திமுகவை விமர்சித்து கன்டென்ட் போடுகிறீர்களே! அது உண்மையா, பொய்யா என்பதை கூட பார்க்க மாட்டீர்களா! உங்களுக்கு மூளை இருக்கிறதா.

    Advertisement

    அரசியல் ஒன்றும் சினிமா இல்லை, 3 மணி நேரம் படத்தை பார்த்துவிட்டு ரிவ்யூ கொடுப்பதற்கு, இது தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மக்களின் வாழ்வாதாரம் குறித்த விஷயமாகும்.

    இதுவரை வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் எத்தனை பேர் அவரவர் தொகுதிகளுக்கு போய் பொதுமக்களை சந்தித்து அவர்களது கோரிக்கைகளை கேட்டிருப்பார்கள்? அமைச்சர்கள் துறை சார்ந்த ஆய்வு கூட்டங்களை நடத்துகிறார்கள், அதை தாண்டி எந்த மக்களை அவர்கள் சந்தித்திருக்கிறார்கள்.

    ஆட்சிக்கு வருவதற்கு முன்பு நாங்கள் திமுகவை போல் இருக்க மாட்டோம் என சொன்னார்கள். ஆனால் இவர்கள் எத்தனை பேரை சந்தித்து குறைகளை கேட்டறிந்தனர்? ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் திமுக என்றும் மக்களுடன் இருக்கும். மக்களும் திமுகவுடன் இருப்பார்கள் என பிரியா விமர்சித்தார்.

    English Summary

    Chennai Mayor R. Priya has come under the spotlight after making a sharp remark, asking, “Do you have any sense in your head?” during an interaction in Perambur, the constituency represented by Chief Minister Vijay. The comment has triggered political discussions and drawn attention amid ongoing civic and public service concerns in the area.