பள்ளி தேர்வில் மாநில அளவில் முதலிடம்.. ஐஐடியில் படித்தவர்! ஞானேஷ் குமார் பின்னணி பற்றி தெரியுமா?

  • சென்னை: ஞானேஷ் குமாருக்கு தொடர்ந்து எதிர்ப்புகள் கிளம்பி வரும் நிலையில் அவர் யார் என்பது குறித்த பின்னணி தகவலும் வெளியாகி உள்ளது. உத்தர பிரதேசத்தை சேர்ந்த இவர் உத்தரப் பிரதேச மாநில உயர்நிலைத் தேர்விலும், 1981 ஆம் ஆண்டு நடைபெற்ற மேல்நிலைத் தேர்விலும் ஞானேஷ் குமார் முதலிடம் பெற்று இருந்தாராம். 1985 ஆம் ஆண்டு சிவில் இன்ஜினீயரிங் பட்டம் பெற்ற ஞானேஷ் குமார், அதே ஆண்டில் குடிமைப் பணித் தேர்வுக்குத் தயாராகத் தொடங்கியிருக்கிறாரார்.

    Advertisement

    தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவரது முடிவுகள் தன்னிச்சையாக இருந்ததாக சக தேர்தல் ஆணையர்கள் அதிருப்தி தெரிவித்தது ஞானேஷ் குமாருக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    ஞானேஷ் குமார்

    ஏற்கனவே, பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக ஞானேஷ் குமார் மீது எதிர்க்கட்சிகள் விமர்சனம் வைத்த நிலையில், இந்த விவகாரம் பெரும் புயலை கிளப்பியுள்ளது. ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக எதிர்க்கட்சிகள் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கரப்பான் பூச்சி ஜனதா கட்சியும் களத்தில் இறங்கியுள்ளது.

    நாளுக்கு நாள் ஞானேஷ் குமாருக்கு நெருக்கடிகள் அதிகரித்து வரும் நிலையில், அவரை பற்றிய பல்வேறு தகவல்களும் பரவி வருகின்றன. தன்னை பாஜகவில் இணைந்து எம்பி தேர்தலில் போட்டியிடுமாறு அறிவுறுத்தியதாக கேரள முன்னாள் தலைமை செயலாளர், ஞானேஷ் குமார் மீது குற்றச்சாட்டு வைத்தார். அதேபோல, ஞானேஷ் குமார் தொடர்பு முறைகேட்டு வழக்கு ஒன்றையும் 20 ஆண்டுகளுக்கு பிறகு கேரள அரசு கையில் எடுத்துள்ளது.

    Advertisement

    தேர்வில் முதலிடம்

    இப்படி ஞானேஷ் குமாரை பற்றிய பின்னணியை பலரும் தோண்ட ஆரம்பித்துள்ள நிலையில், அவரது கல்வித்தகுதி பற்றிய ஒரு தகவலும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியாவின் 26 வது தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் பதவியேற்றார். 1988 ஆம் ஆண்டு ஐஏஸ் பேட்ச் அதிகாரி ஆவார். இவர் ஐஐடி கான்பூரில் உயர் கல்வியை பயின்றுள்ளார்.

    உத்தர பிரதேசம் இவரது சொந்த மாநிலம் ஆகும். 1964 ஆம் ஆண்டு பிறந்த ஞானேஷ் குமார் தனது ஆரம்பக் கல்வியை கோரக்பூர், லக்னோ மற்றும் கான்பூர் ஆகிய நகரங்களில் பயின்றுள்ளார். 1979 ஆம் ஆண்டு நடைபெற்ற உத்தரப் பிரதேச மாநில உயர்நிலைத் தேர்விலும், 1981 ஆம் ஆண்டு நடைபெற்ற மேல்நிலைத் தேர்விலும் ஞானேஷ் குமார் முதலிடம் பெற்று இருந்தாராம்.

    Advertisement
    இன்னொரு விக்கெட்டா ஞானேஷ் குமார்? போராட்டம் அத்தோடு ஒய்ந்து விடுமா? டாக்டர்.கிருஷ்ணசாமிக்கு டவுட்!

    கல்லூரி படிப்பை படித்துக்கொண்டே

    உயர்கல்வியை பொறுத்தவரை கான்பூரில் உள்ள ஐஐடியில் சிவில் இன்ஜினீயரிங் பிரிவில் இளங்கலை தொழில்நுட்பப் பட்டம் பெற்றுள்ளார். 1985 ஆம் ஆண்டு சிவில் இன்ஜினீயரிங் பட்டம் பெற்ற ஞானேஷ் குமார், அதே ஆண்டில் குடிமைப் பணித் தேர்வுக்குத் தயாராகத் தொடங்கியிருக்கிறாராம். அதேநேரத்தில் கல்லுரி படிப்பையும் கைவிடாமல் இருந்துள்ளார்.

    இந்தியாவில் உள்ள ஐசிஎஃப்ஏஐ கல்வி நிறுவனத்தில் வணிக நிதி குறித்தும், அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் ஹார்வர்டு சர்வதேச மேம்பாட்டு நிறுவனத்தில் சுற்றுச்சூழல் பொருளாதாரம் குறித்த படிப்பையும் ஞானேஷ் குமார் படித்துள்ளார். இன்னொரு பக்கம் குடிமை பணிகளுக்கான தேர்வுக்கு தீவிரமாக தயாராகி வந்த ஞானேஷ் குமார் 1988-ல் பாஸ் ஆகியுள்ளார்.

    Advertisement
    ஞானேஷ் குமாரை மோடி விடமாட்டார்.. எதாவது செய்து காப்பாற்றிவிடுவார்.. கரப்பான் பூச்சி கட்சி தாக்கு

    இதுவரை வகித்துள்ள பதவிகள்

    கேரள கேடர் ஐஏஎஸ் அதிகாரியான ஞானேஷ் குமார், கேரளாவில் கொச்சி மாநகராட்சி ஆணையர், கேரள மாநில கூட்டுறவு வங்கியின் நிர்வாக இயக்குநர், எர்ணாகுளம் மாவட்ட ஆட்சியர், கோஷ்ரீ தீவுகள் மேம்பாட்டு ஆணையத்தின் செயலாளர், திருவனந்தபுரம் விமான நிலைய மேம்பாட்டு சங்கத்தின் நிர்வாக இயக்குநர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை அவர் வகித்துள்ளார். டெல்லியில் உள்ள கேரளா இல்லத்தின் ஆணையராகவும் பணியாற்றியிருக்கிறார்.

    English Summary

    Gyanesh Kumar bio: Amidst the ongoing opposition to his appointment, background details regarding Gyanesh Kumar have emerged. Hailing from Uttar Pradesh, he reportedly secured the top rank in the state's high school and intermediate examinations in 1981. After obtaining a degree in Civil Engineering in 1985, he began preparing for the Civil Services examination that same year.