வந்தே பாரத் ரயில் ஒரு கிலோ மீட்டர் தூரம் போக எவ்வளவு செலவு ஆகும் தெரியுமா?

  • சென்னை: நம் நாட்டில் அதி நவீன வசதிகளுடன் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் நம் நாட்டிலேயே தயாரிக்கப்படும் இந்த ரயில்களில் டிக்கெட் கட்டணம் அதிகம் இருப்பது ஒரு குறையாக உள்ளது. அதற்கு மிக முக்கிய காரணமாக அந்த ரயிலை இயக்க தேவைப்படும் அதிகப்படியான ஆபரேஷனல் செலவு என ரயில்வே வட்டார தகவல்கள் கூறுகின்றன. வந்தே பாரத் ரயில்களை தயாரிக்கவும், அதனை ஒரு கிலோ மீட்டர் இயக்கவும் எவ்வளவு செலவு ஆகும் என்ற விவரங்களையும் இங்கே பார்க்கலாம்.

    Advertisement

    இந்தியாவில் அதிநவீன ரயில்களாக வந்தே பாரத் ரயில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த ரயிலின் வடிவமைப்பு, உள்புற வசதிகள் என அனைத்துமே பயணிகளை கவரும் வகையில் உள்ளது.

    Advertisement

    வந்தே பாரத் ரயில்கள்

    சொகுசு இருக்கைகள், பாதுகாப்பு அம்சங்கள், தானியங்கி கதவு என வந்தே பாரத் ரயில்களில் உள்ள வசதிகள் பிரீமியமாக இருப்பதால் பயணிகள் ஆர்வத்துடன் இந்த ரயில்களில் செல்கிறார்கள். கட்டணம் கொஞ்சம் அதிகம் என்றாலும் அதிவேகத்தில் செல்வதோடு, உணவு உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படுவதால் பயணிகள் விரும்பி செல்கிறார்கள். வந்தே பாரத் ரயில்களில் உள்ள பெரிய மைனஸ் என்னவென்றால் அதன் கட்டணம் என்றே சொல்லலாம்.

    சென்னையில் இருந்து நெல்லைக்கு எக்ஸ்பிரஸ் ரயில்களில் சுமார் 400 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்றால் வந்தே பாரத் ரயிலில் இரு மடங்குக்கு மேல் வசூல் செய்யப்படுகிறது. இவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படுவதற்கு அந்த ரயிலை இயக்க தேவைப்படும் அதிகப்படியான ஆபரேஷனல் செலவும் ஒரு காரணம் என்று ரயில்வே வட்டார தகவல்கள் கூறுகின்றன. வந்தே பாரத் ரயில்களை தயாரிக்கவும், அதனை ஒரு கிலோ மீட்டர் இயக்கவும் எவ்வ்ளவு செலவு ஆகும் என்ற விவரங்களை பார்க்கலாம்.

    Advertisement

    ஒரு கிமீ தூரம் செல்ல 12 லட்சம் செலவு

    வந்தே பாரத் ரயில்களுக்கான கட்டுமான பணிகள் சென்னை ஐசிஎப் உள்ளிட்ட ரயில் பெட்டி தொழிற்சாலையில் நடைபெறுகின்றன. மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தயாரிக்கப்படும் இந்த வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க மொத்தம் ரூ.130 கோடிக்கும் மேல் செலவு ஆகிறதாம். இந்த ரயில்களில் உள்ள நவீன வடிவமைப்புகள் மற்றும் கட்டமைப்புகளே இவ்வளவு செலவு பிடிப்பதற்கு ஒரு காரணம் என்கிறார்கள்.

    வந்தே பாரத் ரயில்களை பொறுத்தவரை முழுக்க மின்சாரத்தில் இயங்கும் திறன் கொண்டது. ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த ரயில் செல்வதற்கு ரூ.2,000 முதல் 2,5000 வரை செலவு ஆகிறதாம். அதாவது வந்தே பாரத் ரயில்கள் சுமார் 500 கிலோ மீட்டர் செல்ல வேண்டும் என்றால் மின்சார செலவு மட்டும் ரூ. 10 லட்சம் முதல் 12 லட்சம் வரை பிடிக்கும்.

    Advertisement

    ஆண்டுக்கு 12 கோடி ரூபாய்

    உதாரணத்திற்கு சென்னையில் இருந்து நெல்லை செல்ல வேண்டும் என்றால் ரூ.15 லட்சத்திற்கு மேல் மின்சார செலவு ஆகும். அதுபோக வந்தே பாரத் ரயில் ஊழியர்கள், மேலாண்மை செலவு போன்றவை ஆண்டுக்கு இரண்டு முதல் மூன்று கோடி செலவு பிடிக்கும். எனவே ஒரு வந்தே பாரத் ரயிலை பராமரிக்க மட்டும் ஆண்டுக்கு 10 முதல் 12 கோடி ரூபாய் வரை தேவைப்படும்.

    பழுது பார்க்கும் செலவு, பராமரிப்பு செலவு, டெக்னிக்கல் பணிகள் ஆகியவையும் இதில் அடங்கும். வந்தே பாரத் ரயில்கள் மூலம் ரயில்வேக்கும் கணிசமான வருவாய் கிடைக்கிறது. வந்தே பாரத் ரயில்கள் மூலம் கிடைக்கக் கூடிய வருவாயை தனியாக ரயில்வே வெளியிடவில்லை. எனினும், பல முக்கிய ரூட்களில் வந்தே பாரத் ரயில்கள் எப்போதும் ஃபுல் ஆகவே செல்கின்றன.

    English Summary

    Vande Bharat train: Here are the details regarding the costs involved in manufacturing Vande Bharat trains and operating them for a distance of one kilometer. Railway sources indicate that the higher fares charged for Vande Bharat trains are due to factors such as the significant operational costs required to run them.