கார் கேட்ட விசிக ஜோதிமணியின் சொத்து மதிப்பு எவ்வளவு? அதிலும் இன்னோவா கேட்டவரிடம் பென்ஸே இருக்கே!

  • சென்னை: காட்டுமன்னார்கோவில் விசிக எம்எல்ஏ, தவெக எம்எல்ஏக்கள் பெரியகுளம் சபரி ஐங்கரன், மொடக்குறிச்சி டி சண்முகம் ஆகியோர் கார் கேட்டிருந்த நிலையில் அவர்களது சொத்து மதிப்பை பார்த்தால் தலையே சுத்திவிடும் போல!

    Advertisement

    காட்டுமன்னார்கோவில் எம்எல்ஏ ஜோதிமணி சட்டசபையில் ஒரு கோரிக்கை வைத்திருந்தார். அதில் "நான் 250 கி.மீ. தொலைவில் இருந்து நான் சட்டசபைக்கு வருகிறேன். எனக்கு சொந்தமாக வண்டி, வாகனம் கிடையாது.

    Advertisement

    வாடகை வண்டியில்தான் வருகிறேன். தொகுதி மக்களை சந்தித்து மக்களுக்கு பணி செய்ய வேண்டிய அளவிற்கான வாகன வசதி இல்லை. ஒரு செயலாளரை உடன் வைத்துக் கொண்டு ஊதியம் கொடுக்கவும் வசதி இல்லை.

    இப்படித்தான் முக்கால்வாசி சட்டசபை உறுப்பினர்கள் இருக்கிறார்கள். எனவே வாகன வசதியும் மற்ற வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும் என கோரியிருந்தார்.

    இந்த நிலையில் நேற்றைய தினம் சட்டசபையில் விதி எண் 110-இன் கீழ் அனைத்து எம்எல்ஏக்களுக்கும் கார், காருக்கு டிரைவர், வாகன படி ரூ 75 ஆயிரம், அலுவலக பணிகளில் உதவி செய்ய உதவியாளரை நியமித்துக் கொள்ள மாதம் 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்திருந்தார்.

    Advertisement

    இந்த அறிவிப்புக்கு பல எம்எல்ஏக்கள் நன்றி தெரிவித்தனர். அதிலும் குறிப்பாக மொடக்குறிச்சி தவெக எம்எல்ஏ சண்முகன் பேசுகையில், கார் கொடுப்பது என்றாகிவிட்டது. இன்னோவா கார் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்றார்.

    அது போல் பெரியகுளம் தவெக எம்எல்ஏ சபரி ஐங்கரன் பேசுகையில், "கல்லூரியில் காதல் தோல்வியடைந்த எனக்கு வேலையும் இல்லை, காரும் இல்லை. முதல்வர் எனக்கு வேலை வழங்கிவிட்டார். கார் இல்லாததால் ஆட்டோவில் வருகிறேன். இப்போது காரும் வழங்கியுள்ளார்." என்றார்.

    இவ்வாறு கார் கேட்ட விசிக எம்எல்ஏ ஜோதிமணி, இன்னோவா கார் கேட்ட சண்முகன், ஆட்டோவில் வருவதாக சொன்ன சபரி ஐங்கரன் ஆகியோர் தேர்தல் பிரமாண பத்திரத்தில் தாக்கல் செய்த சொத்து மதிப்பு குறித்த விவரங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

    Advertisement

    விசிக எம்எல்ஏ ஜோதிமணி தனது பிரம்மாண பத்திரத்தில் டொயோட்டா எட்டியோஸ் கார் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் அதன் மதிப்பு 9 லட்சம் ஆகும். அசையும் சொத்து ரூ 35 லட்சம் மதிப்பிலும் அசையா சொத்து ரூ 50 லட்சம் மதிப்பிலும் ஆக மொத்தம் 85 லட்சம் மதிப்பிலான சொத்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அதில் தனது மனைவி பெயரில் 25 லட்சம் மதிப்புள்ள நகைகள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    அது போல் இன்னோவா கேட்ட சண்முகனிடம் ரூ 5 லட்சம் மதிப்புள்ள வோல்ஸ்வேகன் ஆமியோ, ரூ 10 லட்சம் மதிப்பிலான டொயோட்டோ இன்னோவா, 12 லட்சம் மதிப்புள்ள பென்ஸ் ஏ கிளாஸ் கார், 30 லட்சம் மதிப்புள்ள மற்றொரு பென்ஸ் GLE250 ரக கார் உள்ளன. அவரிடம் அசையும் சொத்து ரூ 6 கோடியே 49 லட்சம் இருப்பதாகவும் அசையா சொத்து ரூ 31 கோடி மதிப்பில் இருப்பதாகவும் ஆக மொத்தம் 37 கோடியே 52 லட்சத்து 73 ஆயிரத்து 21 ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன.

    Advertisement

    அது போல் சபரி ஐங்கரனிடம் ரூ 5 லட்சம் மதிப்பிலான டாடா டிகோர் காரும் அசையும் சொத்து ரூ 71,70,620 மதிப்பிலும், அசையா சொத்து ரூ 1,04,000 மதிப்பிலும் மொத்த சொத்து மதிப்பு ரூ 72 லட்சத்து 74 ஆயிரத்து 620 ஆகும்.

    English Summary

    Do you know the asset value of the MLAs Jothimani, Shanmugan, Sabari Ingaran who need cars in Assembly?