Vijay: உங்கள் வீடியோவை பார்த்திருக்கிறேன் லண்டனில் விஜய் பாராட்டிய தமிழ் பெண் யார் தெரியுமா?

  • லண்டன்: "உங்கள் வீடியோவை பார்த்திருக்கிறேன்" என லண்டனில் ஒரு பெண்ணை முதல்வர் விஜய் புகழ்ந்தாரே அவர் யார் என்பதை பார்க்கலாம். அரசு முறை பயணமாக விஜய் லண்டன் சென்றுள்ளார்.

    Advertisement

    தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி சென்னையில் இருந்து புறப்பட்டு துபாய் வழியாக லண்டன் சென்றார். இந்த பயணத்தை முடித்துக் கொண்டு வரும் 17ஆம் தேதி சென்னை திரும்புகிறார்.

    Advertisement

    இங்கிலாந்தின் சர்வதேச அளவில் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார் பந்தய களத்தில் இந்த ஆண்டுக்கான மிச்செலின் லீ மான்ஸ் கப் எனும் கார் பந்தயம் நடைபெற்று வருகிறது.

    இந்த பந்தயத்தின் 5ஆவது சுற்றின் நேற்று நடந்தது. இதில் ஆசிய பிரதிநிதியாகவும் சிறப்பு அழைப்பாளராகவும் பங்கேற்ற முதல்வர் விஜய் பச்சைக் கொடியை அசைத்து விளையாட்டு பந்தயத்தை தொடங்கி வைத்தார்.

    திரைத்துறையில் 34 ஆண்டுகளுக்கும் மேலாக இரு துருவங்களாக கருதப்பட்ட விஜய்யும் அஜித்தும் சர்வதேச விளையாட்டுக் களம் ஒன்றில் இணைந்து இருப்பது இரு ரசிகர்களிடமும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    இந்த கார் ரேஸ் போட்டியில் 44 பந்தயக் கார்கள் பங்கேற்றன. முன்னதாக அஜித்தை பார்க்க ரேஸ் நடக்கும் மைதானத்திற்கு வந்த விஜய், அஜித்தை பார்த்ததும் ஓடிச் சென்று கட்டியணைத்து முத்தமிட்டார்.

    இதையடுத்து அஜித் குமார் இயக்கும் LMP3 Pro/Am பிரிவில் Ajith RedAnt by Virage அணியின் சார்பில் 16 ஆம் எம் கொண்ட Ligier என்ற பந்தயக் காரை இயக்குகிறார். இந்த போட்டியில் அஜித்துடன் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பந்தய வீரர் ரோமைன் வோஸ்னியாக் பங்கேற்றார். அப்போது அஜித்தின் ரேஸ் காரில் அமர்ந்து விஜய் போஸ் கொடுத்தார். அஜித்திற்கு கை கொடுத்து வாழ்த்துகளை தெரிவித்தார்.

    Advertisement

    இந்த போட்டியை பார்வையிடுவதற்காக மைதானத்திற்கு வந்த விஜய்க்கு அங்கிருந்த வெளிநாடு வாழ் தமிழர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர். அப்போது அங்கிருந்தவர்கள் விஜய்யுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். ஆட்டோகிராஃப்பையும் போட்டுக் கொடுத்துள்ளார்.

    அப்போது அங்கிருந்த பெண் ஒருவருக்கு விஜய் கொடுத்து, "நான் உங்கள் வீடியோக்களை பார்த்திருக்கிறேன்" என ஆங்கிலத்தில் கூறினார். அதற்கு அந்த பெண் "என் வீடியோக்களை பார்த்திருக்கிறீர்களா? என விஜய்யிடம் கேட்டார்.

    இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. இந்த பெண் யார் என்பதை பார்க்கலாம். அவர் ஒரு இன்ஸ்டாகிராம் இன்ப்ளூயன்சர், யூடியூப் சேனலும் வைத்துள்ளார். தர்ஷினி லண்டன் டைரீஸ் என்ற பெயரில் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். யூடியூப்பில் 1.1 மில்லியன் பாலோயர்களை கொண்டிருக்கிறார். இவர் பெரும்பாலும் சாரி, சுடிதார் குறித்த வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

    Advertisement

    லண்டனில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு சென்று வீடியோவாக பதிவிட்டுள்ளார். அந்த வகையில் லண்டனில் அஜித்தின் கார் பந்தயத்தை நேரில் காண இருப்பதாகவும் அவர் வீடியோவில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இவரது வீடியோக்களை விஜய் பார்ப்பதாக கூறியது அவருக்கு பெரும் உற்சாகத்தை கொடுத்துள்ளது. அவரது பெயர் பிரியதர்ஷினி சக்திவேல். இவர் சென்னையை சேர்ந்தவர்.

    அது போல் விஜய்யுடன் லண்டன் வாழ் இலங்கைத் தமிழர்களும் சந்தித்து புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர். கார் ரேஸ் மைதானத்தில் விஜய்யை நோக்கி ஓடி வந்த ஒரு குழ்நதையை விஜய் தூக்கி கொஞ்சினார், அந்த குழந்தை கேட்டதற்கிணங்க அவரது சட்டையில் ஆட்டோகிராப் போட்டு கொடுத்தார்.

    English Summary

    CM Vijay praised a girl in London by saying he liked her videos. Do you know who is that girl?