பல வருடம் முன்பு நிலம் வாங்கியவர்கள்.. இந்த வேலையை செய்யவில்லை என்றால் சொத்து காலி

  • சென்னை: இன்றைக்கு 10, 15 ஆண்டுகளுக்கு முன்பு நிலத்தை வாங்கியிருப்பீர்கள். அப்படி வாங்கிய நிலத் பத்திரப்பதிவு செய்த பின்னர், பட்டாவை உங்கள் பெயர் மாற்றம் செய்யாமல், நீங்கள் மறந்து விட்டுவிட்டீர்கள் என்றால், அந்த நிலம் கடைசியில் உங்களுக்கு சிக்கலாகவும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஏனெனில் அனுபவத்தின் அடிப்படையிலோ அல்லது முந்தைய ஆவணங்களின் அடிப்படையிலோ அல்லது உங்களுக்கு விற்ற அதே நபரிடம் இருந்து மீண்டும் ஆவணங்களை பெற்றுள்ளாரா என்பதை பாருங்கள்.. அதேபோல் நீங்கள் நிலத்தை வாங்கினீர்கள் அல்லவா.. அவருக்குத்தான் அந்த சொத்தின் முழு உரிமை உள்ளதா என்பதை பாருங்கள்.. அவர் பெயரில் தான் முந்தைய பட்டா உள்ளதா என்பதை நிச்சயம் பார்த்துவிட்டு தான் பட்டா மாற்றம் செய்ய உங்கள் பெயரில் விண்ணப்பிக்க வேண்டும்.

    Advertisement

    அப்படி விண்ணப்பம் செய்த பின்னர் வேறுஏதாவது பிரச்சனைகள் இருக்கிறது என்றால், நீங்கள் வருவாய் கோட்டாட்சியரிடம் (ஆர்டிஓ) மனு அளித்து, உங்களுக்கு விற்பனை செய்த உரிமையாளருக்கு, சொத்தும், பட்டாவும் பூர்வீகமும், அனுபவமும், உரிமையாக இருந்தால் நீங்கள் பட்டா கோரி விண்ணப்பிக்கலாம். தொடர்ந்து கோட்டாட்சியர் விசாரணை நடத்தி, பட்டாவை உங்கள் பெயரில் மாற்றம் செய்து கொடுக்க உதவி செய்வார். அதிலும் ஏதாவது சிக்கல் எழுந்தால் தமிழ்நாடு ரியல் எஸ்டேட் அசோசியேஷனில் புகார் அளிக்கலாம். அவர்கள் உதவி செய்வார்கள். சட்டப்பூவர்மாக நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலை உள்ளது என்றால், வழக்கறிஞரையும் நாடலாம்.

    Advertisement

    இன்றைக்கு நீங்கள் பத்திரப்பதிவு செய்தால் பட்டா உங்களுக்கு கையோடு மாற்றம் செய்து வழங்கப்படும். அப்படித்தான் இன்றைக்கு நடைமுறைகள் உள்ளது. ஆனால் 10, 15 ஆண்டுகளுக்கு முன்பு அல்லது அந்த காலத்தில் பலரும் பத்திரப்பதிவு மட்டும் செய்துவிட்டு பல ஆண்டுகளாக வசித்து வருகிறார்கள். இதில் பல நிலங்கள் கூட்டுப்பட்டாவில் வந்த நிலங்களாக கூட இருக்கும். சில நிலங்களின் உரிமையாளர் ஒன்றுக்கும் மேற்பட்டோருக்கு ஒரே சர்வே எண்ணில் சில அடி இடங்களை தவறுதலாக பத்திரப்பதிவு செய்திருப்பார். அல்லது பட்டாவில் உள்ள அளவும், பத்திரத்தில் உள்ள அளவும் தவறாக இருக்கும். இப்படி தவறுதலாக இருந்தால், பட்டா பெறுவது கடினமாகிவிடும். அப்படி இருந்தால் மீண்டும் நிலத்தை அளந்து பட்டா வாங்க வேண்டும்..

    Advertisement

    அதேபோல் உங்களுக்கு இந்த நிலத்தை விற்ற முந்தைய உரிமையாளரை நீங்கள் நேரில் அழைத்து வர வேண்டும். அவரிடம், "நீங்கள் விற்ற பத்திரத்தில் அளவு கூடுதலாக விழுந்துவிட்டது, அந்த இடம் எனக்கு சொந்தமில்லை. ஆகவே அளவைக் குறைத்து பிழை திருத்தம் செய்து தாங்கள் கையெழுத்திட வேண்டும்" என்று கேட்டு, அவரைச் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு அழைத்து வர வேண்டும். அளவைக் குறைப்பதற்குக் கூடுதல் முத்திரைத் தாள் கட்டணம் எதுவும் வாங்கமாட்டார்கள். மிக எளிதாக முடிந்துவிடும்.

    ஒருவேளை உங்களுக்கு நிலம் விற்றவர் இப்போது உயிரோடு இல்லை அல்லது அவரைத் தொடர்பு கொள்ள முடியாத நிலையும் ஏற்பட்டிருக்கலாம். அப்படியான நிலையில், நீங்கள் புதிய கிரையப் பத்திரத்தில் தான் சரி செய்ய வேண்டும். நீங்கள் தாசில்தார் அலுவலகம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அரசு சர்வேயரை வரவழைத்து உங்கள் நிலத்தை அளக்க வைக்க வேண்டும்.

    Advertisement

    உங்களுக்குச் சொந்தமான எல்லைகளை மட்டும் அளந்து, அவரிடம் ஒரு புதிய FMB/Sketch வாங்க வேண்டும். பின்னர் நிலத்தை புதிய நபருக்கு விற்பதற்கான ஏற்பட்ட தவறை பத்திரத்தில் தெளிவாக எழுத வேண்டும்: அத்துடன் புதிய பத்திரத்தைப் பதிவு செய்யும்போது, அரசு சர்வேயர் கொடுத்த வரைபடத்தையும், பட்டாவையும் அதனுடன் இணைத்துச் சார்பதிவாளரிடம் நீங்கள் சமர்ப்பிக்க வேண்டியதிருக்கும். இது சற்று சிக்கலானது ஆகும்.

    English Summary

    How can those who purchased land many years ago obtain a patta (land deed/record) now? What are the consequences of failing to obtain a patta for land purchased years ago? What kind of issues do those who bought property 15 years ago face regarding the patta?