சென்னை: உலகின் அதிவேக ரயில்கள் எங்கே ஓடுகிறது என்ற விவரங்களை இங்கு விரிவாக காணலாம். மணிக்கு 400 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் செல்லக்கூடிய ரயில்களை கூட சீனாவில் இயக்கப்படுகின்றன. இந்த லிஸ்டில் வந்தே பாரத் ரயில் இடம்பெறவில்லை.
போக்குவரத்து சேவைதான் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு இன்றியமையாதாக உள்ளது. இதனால், போக்குவரத்து கட்டமைப்பை வலுப்படுத்துவதில் தான் ஒவ்வொரு நாடும் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. அதிலும் பயணிகள் அதிக அளவில் பயன்படுத்தக்கூடிய ரயில் சேவையை நவீனமாகவும் விரைவு சேவையாகவும் மாற்றுவதில் சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் போட்டி போடுகின்றன.
மணிக்கு 400 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் செல்லக்கூடிய ரயில்களை கூட சீனா இயக்கி வருவதாக சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியாகி அவ்வப்போது வியக்க வைக்கும். இதே வேகத்தை நம்ம ஊருடன் ஒப்பிட்டு பார்த்தால் சென்னையில் இருந்து மதுரைக்கு ஒரு மணி நேரத்தில் சென்றுவிட முடியும். அதாவது காலை டீ குடித்துவிட்டு சென்னையில் ஏறினால் அதன் இனிப்பு நாவை விட்டு நீங்கும் முன்பாக மதுரையில் போய் டிஃபன் சாப்பிட்டுவிடலாம்.. அந்த அளவு அதிவேக ரயில்கள் சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் இயக்கப்படுகின்றன. சரி இங்கே விஷயத்திற்கு வருவோம். உலகின் அதிவேக ரயில்கள் எதெல்லாம்.. இதில் நமது ஊரில் வந்தே பாரத் ரயில் எந்த இடத்தில் வருகிறது என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம். சீனாவின் ஷாங்காய் விமான நிலைய ரூட்டில் ஓடும் மக்லேவ் ரயில் மணிக்கு 431 கிலோ மீட்டர் வேகம் வரை இயக்கப்படுகிறது. காந்தசக்தி தொழில் நுட்பம் கொண்டு இயக்கப்படும் இந்த ரயில், டிராக்கில் சக்கரம் சுழற்சி மூலம் இயக்கப்படாது. மாறாக காந்த தொழில் நுட்பத்தால் டிரக்கின் மேல் மிதந்து செல்வதை போல இயங்கும். உலகின் அதிவேக கமர்ஷியல் ரயிலாக இதுவே உள்ளது. தண்டவளாங்களில் தடக் தடக் சத்தத்துடன் இயங்கும் வழக்கமான ரயிலான சிஆர் 400 ஏப் ரயில் மணிக்கு 350 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படுகிறது. சீனாவின் பல முக்கிய நகரங்கள் வழியாக இத்தகைய ரயில்கள் இயக்கப்படுகின்றன. பீஜிங், ஷாங்காய் போன்ற பெருநகரங்களுக்கு இடையே இந்த ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான இத்தாலியில் இயக்கப்படக் கூடிய Frecciarossa 1000 ரயில் மணிக்கு 300 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படுகிறது. உலகில் அதிவேகமாக இயங்கக்கூடிய ரயில்கள் பட்டியலில் இந்த ரயில் 3 வதுஇடத்தில் உள்ளது. இத்தாலியில் இயங்கக்கூடிய இந்த ரயில் சோதனை ஓட்டத்தின் போது மணிக்கு 350 கிலோ மீட்டர் வரை இயக்கப்பட்டது. ஆனாலும் பயன ரூட்டில் 300 கிலோ மீட்டர் வரையே இயக்கப்படுகிறது. ஐரோப்பிய நாடுகளில் மிகவும் அதிவேகமாக இயக்கப்படக்கூடிய ரயில்களில் ஒன்றாக இதுவே உள்ளது. ஜெர்மனியில் இயக்கப்படும் ICE 3 ரயில், உலகில் அதிவேகமாக இயங்கக்கூடிய ரயில்களில் ஒன்றாக உள்ளது. ஜெர்மனி மற்றும் ஐரோப்பிய நாடுகளை இணைக்கும் விதமாக இயக்கப்படும் இந்த ரயில்கள் அதி நவீன சொகுசு வசதிகளுக்கும் பெயர் பெற்றது. இந்த ரயில் அதிகபட்சமாக 300 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படுகிறது. அதிவேக ரயில்களுக்கு ஷிங்க்ன்சேன் என்.700 எஸ் ஜப்பானின் புல்லெட் ரயில்கள் உலக அளவில் பெயர் பெற்றதாக உள்ளது. பாதுகாப்பு, துல்லியமான பயண நேரம், பூகம்பத்தை தாங்கும் தொழில் நுட்பம் என பல சிறப்புகள் இந்த ரயிலுக்கு உள்ளன. இந்த ரயில்கள் மணிக்கு 300 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படுகின்றன. ஜப்பானின் பல்வேறு நகரங்களுக்கு இடையே இந்த ஹை ஸ்பீடு ரயில்கள் உள்ளன. இந்தியாவில் மும்பை - அகமதாபாத் இடையே புல்லெட் ரயில் இயக்குவதற்கான கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஜப்பான் தொழில் நுட்ப உதவியுடன் இந்த ரயிலுக்கான டிராக் அமைக்கும் பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது இந்தியாவில் ஒடக்கூடிய அதிவேக ரயிலாக வந்தே பாரத் ரயில் உள்ளது. வந்தே பாரத் ரயிலை பொறுத்தவரை மணிக்கு 130 -160 கிலோ மீட்டர் வேகம் வரையே இயக்கப்படுகிறது. இதன் ஹை ஸ்பீடு திறன் 180 கிலோமீட்டர் என்றாலும் டிராக் கண்டிஷன்கள் மற்றும் சிக்னலிங் சிஸ்டம் காரணமாக குறைந்தபட்ச வேகத்திலேயே இயக்கப்படுகிறது. மணிக்கு 250 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் செல்லக்கூடிய ரயில்களே அதிவேக ரயில்கள் என்று வரையறுக்கப்படுகிறது. அந்த வகையில் பார்த்தால் வந்தே பாரத் ரயில் அந்த லிஸ்டில் வராது. செமி ஹை ஸ்பீடு ரயில் என்ற வரிசையில் மட்டுமே வந்தே பாரத் ரயில்கள் வருகின்றன. வந்தே பாரத் ரயிலின் வடிவமைப்பு மற்றும் சொகுசு வசதிகள் உள்ளிட்டவைகள் இந்த பயணிகளை பெரிதும் கவர்வதாக அமைந்துள்ளது.ஷாங்காய் மக்லேவ் (சீனா)
சிஆர்400 ஏப் ஃபக்ஸிங் - சீனா
பிரெச்சியாரசோ 1000 - இத்தாலி
ICE 3 - ஜெர்மனி
ஷிங்க்ன்சேன் என்.700 எஸ் - ஜப்பான்
வந்தே பாரத் லிஸ்டில் உள்ளதா?