2017 டூ 2026 .. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு இது எத்தனையாவது தோல்வி தெரியுமா?

  • சென்னை: "அம்மாவின் இரட்டை இலை சின்னத்தைக் காப்பாற்ற நினைத்தது தவறா அல்லது உங்களைப் போல் சாதாரண குடும்பத்தில் பிறந்தது என் தவறா..? அ.தி.மு.கவை விமர்சனம் செய்யும் த.வெ.கவிற்குக்கூட கரூர் விவகாரத்தில் நாம் நல்லதுதானே செய்தோம்.. அதுதான் நாம் செய்த குற்றமா..?" என்று உருக்கமாக வீடியோ வெளியிட்டு இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு இது எத்தனையாவது தோல்வி தெரியுமா? அதுபற்றி விரிவாகப் பார்ப்போம்.

    Advertisement

    ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின், எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்று வழிநடத்தி வருகிறார். இவரது தலைமையில் அதிமுக தமிழ்நாட்டில் வரிசையாக 13 தேர்தல்களில் தோல்வியடைந்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

    Advertisement

    கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக தோற்றது. அப்போது அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து, 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் 38 தொகுதிகளில் அதிமுக கூட்டணி தோல்வியடைந்தது. அதே ஆண்டில் நடைபெற்ற 22 சட்டசபைத் தொகுதிகளின் இடைத்தேர்தலில் திமுக 13 தொகுதிகளில் வென்றது; அதிமுக 8 இடங்களில் மட்டுமே வென்றது. இதன் மூலம் பெரும்பான்மையைத் தக்கவைத்து எடப்பாடி பழனிசாமி அரசு தப்பித்தது.

    தாம்பரம் சென்ற ஓடும் மின்சார ரயிலில் வடமாநில வாலிபரின் அநாகரிக செயல்.. பயணிகள் ஷாக்
    Advertisement

    அடுத்ததாக, 2020 ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பல பகுதிகளில் அதிமுக தோல்வியைச் சந்தித்தது; அங்கு பெரும்பான்மையான இடங்களில் திமுகவே வென்றது. 2021 சட்டசபைத் தேர்தலில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. 2021 தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக கூட்டணி தோற்றாலும் 75 இடங்களில் வென்றது. இதில் அதிமுக மட்டுமே 66 இடங்களில் வெற்றி பெற்றது.

    அடுத்ததாக, 2021-ஆம் ஆண்டு நடந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் பல இடங்களில் அதிமுக தோற்றுப்போனது. 2022-ஆம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், 2023-ஆம் ஆண்டு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் ஆகியவற்றிலும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக தோல்வியைச் சந்தித்தது. ஈரோடு கிழக்குத் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில், 66,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. மேலும், கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலிலும் அதிமுக தோல்வியைத் தழுவியது.

    Advertisement

    அடுத்ததாக, 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவுடனான கூட்டணியை எடப்பாடி பழனிசாமி முறித்துக் கொண்டு தனியாகக் களம் கண்டார். அப்போது தேமுதிகவைத் தவிர வேறு முக்கியக் கட்சிகள் கூட்டணியில் இணையவில்லை. அந்தத் தேர்தலில் அதிமுக கூட்டணி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை; பல தொகுதிகளில் 3-ஆம் இடத்திற்குத் தள்ளப்பட்டது.

    சோழிங்கநல்லூர் தவெக எம்எல்ஏ ஈசிஆர் சரவணனை களம் எட்டில் புரட்டி எடுக்கும் தவெகவினர்.. என்ன காரணம்?

    அடுத்ததாக, 2026 சட்டசபைத் தேர்தலிலும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக தோல்வியைத் தழுவி 3-ஆம் இடத்திற்குத் தள்ளப்பட்டது. 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற காரணத்தால் முதன்முறையாக எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்தது. 2026 தேர்தலில் முதன்முறையாக 108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெக, திமுகவின் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மதிமுக ஆகியவற்றை மொத்தமாகத் தன் பக்கம் இழுத்து ஆட்சியமைத்து வருகிறது. அதிமுகவின் சில எம்.எல்.ஏக்களும் அடுத்தடுத்து ராஜினாமா செய்து தவெகவிற்கு ஆதரவளித்து வருகின்றனர்.

    Advertisement

    அந்த வகையில், காலியான மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்குக் கடந்த 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலிலும் அதிமுக தோல்வியைத் தழுவி 3-ஆம் இடத்தையே பிடித்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக இதுவரை தொடர்ச்சியாக 13 முறை தோல்வியைத் தழுவியுள்ளது.

    English Summary

    Do you know which defeat this is for AIADMK General Secretary Edappadi Palaniswami, who campaigned in the by-election by releasing an emotional video? Let us look at this in detail.