கூகுள் பே யூஸ் பண்றீங்களா?.. ரூ.6 ஆயிரம் பரிசு மழை லிங்க்.. ஒரு சின்ன தவறு தரும் பெரிய இழப்பு.. ஏன்

  • சென்னை: சென்னை நகரில் இப்போது டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரித்து வரும் நிலையில், கூகுள் பே செயலியை குறிவைத்து சைபர் குற்றவாளிகள் அரங்கேற்றி வரும் மோசடிகள் அம்பலமாகி வருகின்றன.. புது புது டிசைன்களில் இந்த மோசடிகள் நடந்து வருவது கலக்கத்தை தந்து வருகிறது.. அதனால்தான், பொதுமக்கள் பலரும் விழிப்புடன் இருக்க வேண்டும் என மாநில சைபர் குற்றத்தடுப்புப் பிரிவு போலீசார் தீவிர எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.

    Advertisement

    கூகுள் பே மூலம் அறிமுகம் இல்லாத நபர் ஒருவர் ரூ.5000 போன்ற சிறிய தொகையை அனுப்பிவிட்டு, அதை தவறுதலாக அனுப்பியதாக சொல்லி, மறுபடியும் திருப்பி அனுப்புமாறு கேட்கும் புதிய வகை மோசடி குறித்து சைபர் கிரைம் போலீசார் பலமுறை எச்சரித்திருக்கிறார்கள்.

    Advertisement

    கூகுள் பே மோசடி

    அவசரப்பட்டு உண்மையான UPI PIN-ஐ பயன்படுத்தி பணத்தைத் திருப்பி அனுப்பினால், மோசடி கும்பல் அந்த PIN-ஐ பயன்படுத்தி, உங்களது வங்கிக் கணக்கில் உள்ள மொத்த பணத்தையும் சுருட்டிவிடும்.. அதனால் தெரியாத நபரிடம் இருந்து பணம் வந்தால் உடனடியாகத் திருப்பி அனுப்பாமல், வங்கியை தொடர்புகொண்டு புகார் அளிக்க வேண்டும் என்றும் தேவைப்பட்டால் போலீசிலும் அல்லது 1930 சைபர் கிரைம் உதவி எண்ணிலும் புகார் அளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்திக் கொண்டே உள்ளது.. ஆனாலும் மோசடிகள் நிற்கவில்லை..

    இப்போதுள்ள சூழலில், பெரும்பாலானோர் தங்களது தினசரி பணப் பரிவர்த்தனைகளுக்கு ஸ்மார்ட்போன்களையே நம்பியிருக்கிறார்கள்.. எனவேதான் இந்த ஆப்கள் மூலமாக பணத்தை பரிமாற்றம் செய்யும்போது பயனாளிகளை ஊக்கப்படுத்தி உற்சாகப்படுத்தம் நோக்கில், சிறு தொகைகள் கேஷ்பேக் சலுகைகளாக கிடைப்பது வழக்கமாக உள்ளது..

    Advertisement

    கேஷ்பேக், பரிசு மழை

    இந்த முறையைத்தான், தங்களுக்கு சாதகமாக சைபர் குற்றவாளிகள் கையிலெடுத்துள்ளார்கள். ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்றவற்றின் வழியே குற்றவாளிகள் இந்த மோசடி நடவடிக்கைகளை அதிகப்படுத்தி வருகிறார்கள்.. இதற்காக கூகுள் பே செயலியை பயன்படுத்தும் அனைவருக்கும் 6000 ரூபாய் வரை பரிசு மழை காத்துக்கொண்டிருப்பதாக சோஷியல் மீடியாவில் விளம்பரங்களை வெளியிட்டு கொண்டிருக்கிறார்கள்.

    இந்த விளம்பரத்தை பார்த்துவிட்டு அப்பாவி பொதுமக்களும், அந்த விளம்பரங்களில் உள்ள லிங்க்குகளை தொடும்போது, அவர்களின் வங்கிக் கணக்குகள் ஆபத்தில் சிக்குகின்றன. ஆனால், வழக்கமாக வரும் சாதாரண கேஷ்பேக் தொகைகளுக்கும், இப்போது மோசடி கும்பல் ஆசை காட்டும் 6,000 ரூபாய் பரிசுத் தொகைக்கும் எந்தவித தொடர்பும் இல்லை..

    Advertisement

    தொட்டால் ஆபத்து

    இப்படி விளம்பரமாகும் லிங்குகளை தொடவே கூடாது. அப்படித் தொட்டால் பயனாளிகளின் மொபைல் போன்களில் உள்ள தரவுகள் அல்லது வங்கி விவரங்கள் சைபர் குற்றவாளிகளின் கட்டுப்பாட்டிற்கு செல்லும் ஆபத்து உள்ளது என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.

    கவர்ச்சிகரமான விளம்பரங்களையும், சந்தேகத்திற்குரிய இணைப்புகளையும் எக்காரணம் கொண்டும் தொட வேண்டாம் எனத் தெளிவாக மீண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, தங்களது ஒரு முறை பாஸ்வேர்டு, ஏடிஎம் கார்டு விவரங்களை யாரிடமும் போன் மூலமாகவும் சொல்லக்கூடாது, இணையம் மூலமாகவோ பகிர்ந்துகொள்ளக் கூடாது.

    1930 நம்பரை குறித்து கொள்ளுங்கள்

    ஒருவேளை இதுபோன்ற மோசடி இணைப்புகள் வந்தால் பொதுமக்கள் உடனடியாக விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். சைபர் குற்றங்களில் ஏதேனும் பாதிக்கப்படுபவர்கள் உடனடியாக மத்திய மற்றும் மாநில அரசுகளின் கூட்டு முயற்சியால் இயங்கும் கட்டணமில்லா உதவி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

    Advertisement

    குறிப்பாக, 1930 என்ற பிரத்யேகக் கட்டணமில்லா தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு தங்களது புகார்களைப் பதிவு செய்து பண இழப்பைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். டிஜிட்டல் உலகத்தில் பாதுகாப்பான முறையில் பணப் பரிவர்த்தனை செய்யப் பொதுமக்கள் அனைவரும் கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதே சைபர் குற்றப்பிரிவு அதிகாரிகளின் முக்கிய அறிவுறுத்தலாகும்.,,!!

    English Summary

    Do You Use Google Pay?.. Rs 6,000 Prize Link.. One Small Mistake Could Lead to a Big Loss.. Why?