கோயிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை! புதியதாக முளைத்த சிக்கல்.. அறநிலையத்துறை புது அறிவிப்பு

  • சென்னை: செப்.1ம் தேதி முதல் தமிழகத்தின் முக்கியமான 52 கோயில்களில் செல்போனை கொண்டு செல்ல இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவில் புதிய சிக்கல்கள் எழுந்த நிலையில் தற்போது புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

    Advertisement

    கோயில்களில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது என்பதற்காக, கோயிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டிருந்தது. இந்த தடை உத்தரவு செப்.1ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. 52 முதன்மை கோயில்களில் ரூ.5 டோக்கன் கொடுத்து செல்போன்களை பாதுகாக்கும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.

    Advertisement

    ஆனால், இதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் எழுந்தன. குறிப்பாக வயதானவர்கள், கர்ப்பிணிகள் செல்போன்களை கையில் வைத்திருப்பது, அவர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருந்தது. இப்படி இருக்கையில் செல்போனை கட்டாயமாக ஒப்படைக்க வேண்டும் என்று கோயில் பணியாளர்கள் வற்புறுத்த.. பக்தர்களுக்கும், பணியாளர்களுக்கும் இடையில் பிரச்சனைகள் வெடித்தன. இதனையடுத்து இந்த உத்தரவில் சில மாற்றங்களை தற்போது இந்து சமய அறநிலையத்துறை அறிவித்திருக்கிறது.

    அதன்படி, கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள், கைக்குழந்தைகளுடன் வருவோரிடம் செல்போனை ஒப்படைத்துவிட்டு செல்லுங்கள் என்று கட்டாயப்படுத்த வேண்டாம் என்று அமைச்சர் ரமேஷ் அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. துறை சார்ந்த அதிகாரிகளிடம் இது குறித்து அமைச்சர் ஆலோசனை மேற்கொண்டிருந்தார். இந்த ஆலோசனையின் அடிப்படையில்தான் அறிவுறுத்தல்கள் வெளியாகியுள்ளன.

    Advertisement

    புதிய அறிவுறுத்தல்களின்படி பக்தர்கள் தங்கள் செல்போனை லாக்கரில் வைக்கும்படி வற்புறுத்த வேண்டாம். தானாக முன்வந்து வைப்பர்களிடம் மட்டும் வாங்கிக்கொள்ளலாம் என்றும்.. செல்போனை ஒப்படைப்பதற்காக நீண்ட நேரம் வரிசையில் நிற்பதால் தேவையற்ற சலசலப்புகள் ஏற்படுவதாகவும்.. எனவே யாரை கட்டாயப்படுத்த வேண்டாம் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உட்பட அனைத்து கோயில்களுக்கும் இந்த அறிவுறுத்தல்கள் பொருந்தும்.

    English Summary

    HR&CE: The Hindu Religious and Charitable Endowments Department had previously issued an order regarding the carrying of mobile phones in 52 major temples across Tamil Nadu. Following the emergence of new complications regarding that order, a fresh directive has now been issued.