டபுள் டென்ஷனில் சத்தியமூர்த்தி பவன்.. யாரந்த கருப்பு ஆடு? செல்வப்பெருந்தகைக்கு ஜூன் 22ல் அறிவிப்பு?

  • சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சியின் தேர்தல் படுதோல்விக்கு காரணமான துரோகிகளைக் கண்டுபிடிக்க உண்மை கண்டறியும் குழுவின் அதிரடி விசாரணை இன்று தொடங்குகிறது. மறுபக்கம், கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை விரைவில் மாற்றப்படப் போகிறார் என்ற உறுதிப்படுத்தப்படாத தகவல் சத்தியமூர்த்தி பவனை அதிர வைத்துள்ளது... இதனால் முன்னெப்போதும் இல்லாத வகையில், டபுள் டென்ஷனில் சிக்கித் தவித்து வருகிறதாம் தமிழக காங்கிரஸ் கட்சி!

    Advertisement

    தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்குள் இப்போது நடந்து கொண்டிருக்கும் சம்பவங்களை பார்த்தால், "அடுத்து என்ன நடக்குமோ?" என்ற பரபரப்புதான் தொற்றிக் கொண்டுள்ளது.

    Advertisement

    தமிழக காங்கிரஸ் தோல்வி

    நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஷாக் தோல்வி கிடைத்துள்ளது. போட்டியிட்ட 28 இடங்களில் வெறும் 5 இடங்களில் மட்டும்தான் காங்கிரஸ் வென்றது. இதனால் அதிருப்தி அடைந்த டெல்லி தலைமை, தேர்தல் தோல்விக்கு யார் காரணம், கட்சிக்குள் இருந்து கொண்டே துரோகம் செய்தது யார்? யாரந்த கருப்பு ஆடு? என்பதைக் கண்டுபிடிக்க டாக்டர் ஜெயக்குமார் தலைமையில் 5 பேர் கொண்ட ஒரு ரகசிய விசாரணைக் குழுவை அமைத்துள்ளது.

    இந்தக் குழுவானது, இன்று முதல் அதாவது ஜுன் 11ம் தேதி முதல் சென்னை சத்தியமூர்த்தி பவனில் தனது விசாரணையை தொடங்குகிறது. முதல் கட்டமாக ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகளை வரவழைத்து கருத்துக்களை கேட்க போகிறதாம்.. தப்பு செய்தவர்கள் யாராக இருந்தாலும்சரி, அவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று இந்த குழு ஏற்கனவே கறாராக சொல்லிவிட்டது.

    Advertisement

    செல்வப்பெருந்தகை பதவி தப்புமா

    இதனிடையே, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையின் பதவி தப்புமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதற்கு முக்கியமான காரணம், வரும் ஜூன் 18ம் தேதி செல்வப்பெருந்தகையின் மகள் திருமணம் நடைபெற உள்ளது.

    இந்த கல்யாணத்துக்கு முதலமைச்சர் விஜய், முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எனப் பலருக்கும் நேரில் சென்று பத்திரிகை வைத்துள்ளார். மகள் திருமணம் நல்லபடியாக முடியட்டும் என்று டெல்லி தலைமை காத்திருப்பதாகவும் சொல்கிறார்கள்.

    திருமணம் முடிந்ததும், அதாவது ஜூன் 22ம் தேதியே செல்வப்பெருந்தகை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படலாம் என்று கட்சி வட்டாரங்கள் மிகவும் உறுதியாக சொல்கின்றன.

    Advertisement

    விசாரணைக் குழுவின் அறிக்கை

    ஆனால், இந்த விசாரணைக் குழுவின் அறிக்கைக்கும் செல்வப்பெருந்தகை மாற்றப்படுவதற்கும் சம்பந்தமில்லை என்று குழுவின் தலைவர் ஜெயக்குமார் ஒரு சேனலுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் விளக்கியுள்ளார்.

    செல்வப்பெருந்தகை தேர்தலுக்கு முன்பே தனது பதவியை ராஜினாமா செய்ய விருப்பம் தெரிவித்துக் கடிதம் கொடுத்திருந்தார். தனக்குச் சொந்த தொகுதிப் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டதால், இந்த மாற்றம் அவரது சொந்த விருப்பத்தின் பேரிலேயே நடப்பதாகவும் கூறப்படுகிறது.

    திமுகவினர் செம கோபம்

    இந்த உட்கட்சிப் பூசலுக்குப் பின்னால் ஒரு பெரிய அரசியல் பின்னணியும் இருப்பததாக சொல்லப்படுகிறது.. அதாவது கடந்த தேர்தலின் போது திமுகவினர் காங்கிரஸை கடுமையான சொற்களால் விமர்சனம் செய்தார்கள். இதனால் அதிருப்தி அடைந்த காங்கிரஸ், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிரடியாக முடிவெடுத்து, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக ஆட்சிக்கு முதன்முதலாக ஆதரவு தந்தது.

    Advertisement

    இப்போது விஜய்யின் அமைச்சரவையிலும் காங்கிரஸ் இடம் பெற்றுள்ளது. இதனால் திமுகவினர் காங்கிரஸ் மீது கடுமையான கோபத்தில் இருக்கிறார்கள். இந்த அரசியல் குழப்பங்களுக்கு நடுவில்தான், காங்கிரஸ் கட்சிக்குள் இருக்கும் துரோகிகளைக் கண்டுபிடிக்க இந்தக் குழுவின் விசாரணை இன்று முதல் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது... அடுத்து என்ன நடக்க போகிறது என தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்...!!!

    English Summary

    Double Tension at Sathyamurthy Bhavan… Who Is the ‘Black Sheep’? Big Announcement for Selvaperunthagai on June 22?