இனி முகமது பர்வேஸ் வாலை ஆட்ட முடியாது.. புதுக்கோட்டை தவெகவை கண்ட்ரோல் எடுக்கும் விஜயபாஸ்கர்!

  • சென்னை: தமிழ்நாடு சட்டசபை தேர்தல் முடிந்ததில் இருந்தே பல்வேறு கட்சி நிர்வாகிகளை தவெக தங்கள் பக்கம் இழுத்து வருகிறது. திமுக தவிர மற்ற கட்சி நிர்வாகிகள் பெருவாரியாக தவெகவில் இணைந்து வருகிறார்கள். முக்கியமாக அதிமுகவினர் பலர் தவெகவில் இணைந்து வருகிறார்கள். அந்த வகையில் சி.விஜயபாஸ்கர் தவெகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வருகின்றன. அவர் இணையும் பட்சத்தில் புதுக்கோட்டையில் தவெக முகமாக உள்ள பர்வேஸ் பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.

    Advertisement

    அதிமுகவில் இருந்து விலகி, தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்துள்ள விராலிமலை 'ஹேவி வெயிட்' அரசியல்வாதி சி.விஜயபாஸ்கர், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு (ஜூன் 22) அக்கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணையவுள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. இந்த மெகா அரசியல் மூவ், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் அதே வேளையில், புதுக்கோட்டை மாவட்ட தவெகவின் தற்போதைய முகமும், அரந்தாங்கி தொகுதி எம்.எல்.ஏ-வுமான ஜெ. முகமது பர்வேஸ் (Feros Mhd Farvace) தரப்பை கடும் அதிர்ச்சியிலும், கலக்கத்திலும் ஆழ்த்தியுள்ளது.

    Advertisement

    2026 சட்டமன்றத் தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் தவெக தடம் பதித்ததில் முகமது பர்வாஸுக்கு முக்கிய பங்குண்டு. கார்ப்பரேஷன் கவுன்சிலராக இருந்து, அரந்தாங்கி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை வீழ்த்தி எம்.எல்.ஏ-வாக உயர்ந்த பர்வேஸ் , தற்போது புதுக்கோட்டை மாவட்ட தவெகவின் அசைக்க முடியாத சக்தியாக, மாவட்டத்தைக் கட்டுப்படுத்தும் முழு அதிகார மையமாகத் தன்னை நிலைநிறுத்திக்கொண்டுள்ளார்.

    மாவட்ட ஆதிக்கப் போட்டி: பர்வேஸ் Vs விஜயபாஸ்கர்

    இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்ட அரசியலின் 'பிக் ஹேண்ட்' என்று வர்ணிக்கப்படும் சி.விஜயபாஸ்கரின் தவெக என்ட்ரி, மாவட்டத்தின் அதிகாரப் படிநிலையை (Power Dynamics) தலைகீழாக மாற்றப் போகிறது என்பதுதான் தற்போதைய ஹாட் டாபிக்.

    Advertisement

    அதிகாரப் பகிர்வில் மோதல்: பர்வேஸ் வளர்ந்து வரும் இளம் தலைவர் என்றால், விஜயபாஸ்கர் மாவட்டத்தின் மூலை முடுக்கெல்லாம் தனக்கென அசைக்க முடியாத வாக்கு வங்கியையும், பிரம்மாண்ட கேடர் பலத்தையும் வைத்துள்ள சீனியர் புலி.

    முழு ஆதிக்கம் யாருக்கு?: விஜயபாஸ்கர் தவெகவில் இணைந்ததும் ஒட்டுமொத்த புதுக்கோட்டை மாவட்ட தவெகவின் கட்டுப்பாடும், தலைமைத்துவமும் இயல்பாகவே அவரிடம்தான் செல்லும். இது, இதுவரை மாவட்டத்தின் ஒரே பவர் சென்டராக வலம் வந்த முகமது பர்வாஸின் அரசியல் செல்வாக்கை தவெகவிற்குள் கணிசமாகக் குறைக்கும் என அவரது ஆதரவாளர்கள் அஞ்சுகின்றனர்.

    வாரிசு அரசியலை வீழ்த்திய பர்வேஸ் ... 'சீனியர்' வருகையால் முடங்குவாரா?
    சட்டம் பயின்று, மிக இளம் வயதிலேயே (31 வயது) அரந்தாங்கியில் காங்கிரஸ் கோட்டையைத் தகர்த்து தவெகவிற்குப் பெருமை சேர்த்தவர் பர்வேஸ் . ஆனால், நான்கு முறை விராலிமலையில் வென்று, முன்னாள் சுகாதார அமைச்சராக மாநில அளவில் அசாத்திய செல்வாக்கு பெற்றுள்ள விஜயபாஸ்கர் போன்ற ஒரு 'பிக் ஷாட்' உள்ளே வரும்போது, பர்வாஸின் சீனியாரிட்டி மற்றும் மாவட்டக் கட்டுப்பாடு கேள்விக்குறியாகும்.

    Advertisement

    "மாவட்டத்தின் முக்கிய முடிவுகள், கட்சி நிர்வாகி நியமனங்கள், நிதி மேலாண்மை என அனைத்திலும் இனி விஜயபாஸ்கரின் கையே ஓங்கும். இதனால் பர்வேஸ் தனது சொந்த மாவட்டத்திலேயே ஓரங்கட்டப்படும் சூழல் உருவாகலாம்" என்கிறார்கள் புதுக்கோட்டை அரசியல் விமர்சகர்கள்.

    தவெகவிற்குள் வெடிக்கும் 'Conflict of Interest'

    தலைவர் விஜய்யின் பிறந்தநாளில் இந்த இணைப்பு நிகழும்போது அது தவெகவிற்குப் பெரிய மாஸ் இமேஜைக் கொடுக்கும் என்றாலும், உள்ளூர் மட்டத்தில் இது கடுமையான 'Conflict of Interest' (முரண்பாடுகளை) உருவாக்கும். ஏற்கனவே அதிமுக வட மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட விஜயபாஸ்கர், தன் பின்னோடு ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்களை தவெகவிற்குள் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளார்.

    Advertisement

    அப்படி ஒரு பெரும் கூட்டம் உள்ளே நுழையும்போது, தவெகவை ஆரம்ப காலத்தில் இருந்து கட்டமைத்த முகமது பர்வாஸின் ஆதரவாளர்களுக்கும், விஜயபாஸ்கரின் புதிய வருகையாளர்களுக்கும் இடையே மாவட்டப் பதவிகளைக் கைப்பற்றுவதில் மிகப்பெரிய உட்கட்சிப் பூசல் வெடிப்பது உறுதி.

    விஜய்யின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் ஒருபுறம் தவெகவினரால் வரவேற்கப்பட்டாலும், புதுக்கோட்டை மாவட்டத்தைப் பொறுத்தவரை இந்த 'விஜயபாஸ்கர் என்ட்ரி' முகமது பர்வாஸின் அரசியல் எதிர்காலத்திற்குப் பெரும் சவாலாகவும், அவர் தவெகவிற்குள் கடுமையாகப் போராட வேண்டிய சூழலையும் உருவாக்கியுள்ளது என்பது மட்டும் நிதர்சனம்!

    English Summary

    Dr C Vijayabaskar to Join TVK on Vijay's Birthday; Power Struggle Looms in Pudukkottai TVK