பள்ளி, கல்லூரிகளை சினிமா மேடையாக்காதீர்கள்! புதிய தமிழகம் கிருஷ்ணசாமி கண்டனம்

  • சென்னை: பள்ளி, கல்லூரிகள் - கல்விக் கூடங்களை அரசியல் - சினிமா மேடைகளாக்காதீர்!
    அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிஞ்சு உள்ளங்கள் பயிலும் பள்ளிகளிலும்; கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் நடைபெறும் ஆண்டு விழாக்கள் மற்றும் பட்டமளிப்பு விழாக்கள், அரசியலுக்கு அப்பாற்பட்ட நிகழ்ச்சிகளாகவே இருக்க வேண்டும்.

    Advertisement

    கோவில் விழாக்களில் சினிமா பாடல்களுக்கு அனுமதி மறுக்கப்படும் பொழுது, பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழக விழாக்களில் சினிமா பாடல்கள் எப்படி அனுமதிக்கப்படுகின்றன?
    21.06.2026 அன்று மேலூர் அரசுப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் சினிமா பாடலை ஒலிக்கவிட்டு குத்தாட்டம் போடுகிறார்;

    அமைச்சர்கள் அருண்ராஜ், சம்பத், விக்னேஷ் ஆகியோர் கலந்து கொண்ட கோவை அரசு மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் தவெக கட்சியின் பிரச்சாரப் பாடல் ஒலிபரப்பப்பட்டுள்ளது; தவெக நிர்வாகி ஒருவர் பள்ளி வகுப்பறைக்குள் புகுந்து மாணவர்களை "tvk, tvk, tvk, tvk" எனக் கூறச் சொல்லி ரீல்ஸ் வீடியோ எடுக்கிறார்.

    Advertisement

    புதிதாகப் பொறுப்புக்கு வந்த சில சட்டமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களுமே தங்களது பொறுப்புகளையும் தகுதிகளையும் மறந்துவிட்டு, சினிமா பாடல்களை இசைப்பதும், குத்தாட்டம் போடுவதும் எவ்விதத்திலும் ஏற்புடையதல்ல.

    'சாதி மதச்சார்பற்ற அரசு' என்பதன் உண்மைப் பொருள்; சாதி, மதம் மட்டுமல்ல; அரசியல், சினிமா, ஆபாசம், போதையற்ற அரசு மற்றும் நிர்வாகம் என்பதே அதன் அர்த்தம் ஆகும். எனவே, அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் தங்கள் பொறுப்பை உணர்ந்து பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களில் அரசியல் பேசுவதையும், சினிமாவைக் காட்சிப்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும். இதுபோன்ற செயல்களைத் தடுக்கும் வகையில் தமிழக அரசு உரிய ஆணையை உடனடியாகப் பிறப்பிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
    டாக்டர் க.கிருஷ்ணசாமி MD,Ex.MLA,
    நிறுவனர் & தலைவர்
    புதிய தமிழகம் கட்சி.

    English Summary

    New Tamilagam leader Dr. Krishnasamy criticized the use of educational institutions for political and cinema-related events and urged ministers and MLAs to act responsibly.