ஆட்சியதிகாரத்திற்கு அண்ணா! பேத்தி திருமணத்திற்கு ஆரியமா? துரைமுருகன் மீது ஆக்ஷன்? கொதிக்கும் தி.க.

  • சென்னை: திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனுக்கு, ஆட்சி அதிகாரத்திற்கு மட்டும் அறிஞர் அண்ணா வேண்டும், ஆனால் தனது பேத்திக்கு, புரோகித பார்ப்பனர்களின் வேத மந்திரம் முழங்க திருமணம் நடத்துவதா என திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச் செயலாளர் விடுதலை ராஜேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

    Advertisement

    இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: புரோகித பார்ப்பனர்களின் வேத மந்திரம் முழங்க அஷ்டலட்சுமிகள் வரவேற்க திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் பேத்திக்கு "விவாஹ சுப முகூர்த்தம்" ஷேமகரமாய் மங்களத்துடன் தேவாதி தேவர்களின் அருள் ஆசியுடன் நடந்து முடிந்து இருக்கிறது.

    Advertisement

    இந்த "கன்னிகாதானத்"தை நேரில் ஆசீர்வதிக்க அண்ணாவும், கருணாநிதியும் இல்லையே என்று துரைமுருகனின் இதயம் கண்ணீர் வடித்திருக்கும்.

    அண்ணா இருந்திருந்தால் " நான் கொண்டு வந்த சுயமரியாதை திருமண சட்டத்தையே இப்படி அவமதிக்கிறாயே! நீ தான் எனக்கு தம்பியா?" என்று நிச்சயம் கேட்டிருப்பார்.

    கருணாநிதி இருந்திருந்தால்..

    கருணாநிதி இருந்திருந்தால் "வடமொழியான சமஸ்கிருதத்தை எதிர்த்து நான் எவ்வளவு எழுதி இருப்பேன்; பேசி இருப்பேன் ; அதை நீ தேவ பாஷை என்று ஏற்றுக் கொண்டு உன் வீட்டு திருமணத்தில் ஓத வைத்திருக்கிறாயே; இதுதான் நீ எனக்கு காட்டும் மரியாதையா?" என்று உரத்த குரலில் கேட்டிருப்பார்.

    Advertisement

    அண்ணாவும், கருணாநிதியும் "உனக்கு அதிகாரத்திற்கு வருவதற்கு மட்டும்தான் நாங்கள் தேவை; கொள்கைக்கு வேண்டாமா?" என்று நிச்சயமாக கேட்டிருப்பார்கள்.

    ஒரு கழகத்தின் பொதுச் செயலாளராக இருந்து கொண்டு கழகத்திற்கு ஊறு விளைவிக்கும் என்று தெரிந்திருந்தும், கொள்கை உணர்வுள்ள கழகத் தோழர்கள் இதை ஏற்க மாட்டார்கள் என்பதை உணர்ந்திருந்தும், இப்படி ஒரு வைதீகக் கூத்தை அரங்கேற்றியே தீருவேன் என்று பிடிவாதம் பிடித்து நிகழ்த்திக் காட்டிவிட்டார் தமிழை "உயிர்மூச்சாக "க் கொண்டு வாழும் மதிப்புக்குரிய துரைமுருகன்.

    ரூ.100 கோடி நகை, ரூ.25,000 பத்திரிகை, வைதீக திருமணம்.. துரைமுருகன் பேத்தி கல்யாணத்தில் ஏன் சர்ச்சை?
    Advertisement

    பெரியார் கொள்கை

    அவரிடம் பெரியார் கொள்கையை நாம் நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை. அண்ணா, கருணாநிதி கொள்கைகளுக்காவது துரோகம் செய்யாமல் இருந்திருக்கக் கூடாதா? அவர்களின் வழியாக கிடைத்த அதிகாரத்தை ஆரியத்திடம் அடமானம் வைப்பது வரலாற்றுத் துரோகம் அல்லவா? என்ற கேள்வியை திராவிட இயக்க கொள்கைப் பற்றாளர்கள் ஒவ்வொருவரும் கேட்கத்தான் செய்வார்கள்.

    துரைமுருகன் மீது நடவடிக்கை

    கட்சி கட்டுப்பாட்டை மீறியவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் அறிவிப்பை ஒவ்வொரு நாளும் "முரசொலி"யில் துரைமுருகன் தான் அறிவித்து வருகிறார். இப்போது துரைமுருகன் அவர்கள் செய்திருப்பது கழகக் கட்டுப்பாட்டை காப்பாற்றும் செயல் தானா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

    Advertisement

    கதிர் ஆனந்த் மகள்

    திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனின் பேத்தியும் வேலூர் எம்பியுமான கதிர் ஆனந்தின் மகளுமான செந்தாமரைக்கும், பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கண்ணன் ரவியின் மகன் தீபக் ரவிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

    துரைமுருகன் வீட்டு திருமணத்தில் ஒலித்த சமஸ்கிருத மந்திரம்.. வலிக்கிறது இதயம்! சுப வீரபாண்டியன் வேதனை

    வேத மந்திரங்கள்

    நேற்றைய தினம் இவர்களது திருமணம் நடந்தது. இதில் வைதீக முறைப்படி வேத மந்திரங்கள் முழங்க இவர்களது திருமணம் நடந்ததற்கு பெரும் விவாதங்கள் எழுந்துள்ளன. திமுக தலைவர்களின் வீடுகளில் வழக்கமாக சுயமரியாதைத் திருமணங்கள் நடைபெறும் நிலையில் துரைமுருகனின் பேத்தி திருமணம் மட்டும் சமஸ்கிருத மந்திரங்கள் முழங்க நடந்தது பல்வேறு விமர்சனங்களை கிளப்பியுள்ளது.

    Advertisement

    சுப.வீ கண்டனம்

    இதுகுறித்து திராவிட இயக்க தமிழ் பேரவையின் நிறுவனர் சுப வீரபாண்டியன் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், என் பெருமதிப்பிற்குரிய, என்னிடம் பேரன்பு காட்டும் திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர், அண்ணன் துரைமுருகன் இல்லத் திருமணத்தில் பார்ப்பனர்களின் சமஸ்கிருத மந்திர ஒலி கேட்டு, இப்போதும் வலிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

    English Summary

    Dravidar Kazhagam criticises Duraimurugan's house marriage function with prohitar's veda manthiram chanting.