டிரைவிங் லைசென்ஸ், RC-க்கு இனி தபால் வேண்டாம்.. இன்று முதல் புதிய வசதி.. இனி என்ன நடக்கும் தெரியுமா?

  • சென்னை: டிரைவிங் லைசென்ஸ் மற்றும் வாகனங்களின் ஆர்.சி. சான்றிதழை பெறுவதில் தமிழ்நாட்டில் முக்கியமான மாற்றம் இன்று முதல் அதாவது செப்டம்பர் 12 முதல் கொண்டுவரப்பட்டுள்ளது. இனி இந்த ஆவணங்களுக்காக ஸ்மார்ட் கார்டு தபாலில் வரும் என்று காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏன் தெரியுமா? இதில்தான் தமிழக அரசு சூப்பரான வசதியை கொண்டு வரப்போகிறது.. இதற்கான அரசாணையும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

    Advertisement

    தமிழ்நாட்டில் மத்திய மோட்டார் வாகனச் சட்டம் 1988 மற்றும் தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகள் 1989-ன் கீழ் ஓட்டுநர் உரிமம் வழங்குதல், புதுப்பித்தல், முகவரி மாற்றம், வாகனப் பதிவு, பெயர் மாற்றம், வரி செலுத்துதல் உள்ளிட்ட போக்குவரத்து பணிகள் ஆன்லைன் முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    Advertisement

    டிரைவிங் லைசென்ஸ்

    டிரைவிங் லைசென்ஸ் பெற விரும்புவோர் மத்திய அரசின் பரிவாஹான் வெப்சைட்டில் விண்ணப்பித்து, முதலில் ஓட்டுநர் பயிற்சி உரிமத்தை பெற்று, அதன்பிறகு ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இதுவரை டிஜிட்டல் உரிமம் இருந்தாலும், சிப் மற்றும் போட்டோவுடன் கூடிய ஸ்மார்ட் கார்டு வடிவிலான அசல் லைசென்ஸ் தபால் மூலம் வீட்டுக்கு அனுப்பப்பட்டு வந்தது. இதற்காக ரூ.250 கட்டணமும் வசூலிக்கப்பட்டு வந்தது. 2019-ம் ஆண்டு முதல் இந்த நடைமுறை அமலில் இருந்தது.

    அதேபோல், புதிதாக வாகனம் வாங்கி பதிவு செய்தவர்களுக்கும் வாகனப் பதிவு சான்றிதழான ஆர்.சி. கார்டு வடிவில் வீட்டுக்கு அனுப்பப்பட்டு வந்தது. இனிமேல் இந்த முறையிலும் மாற்றம் செய்யப்படுகிறது.

    Advertisement

    இன்று அதாவது செப்டம்பர் 12 முதல் புதிய வாகனம் வாங்கி, அதற்கான பதிவு பணிகளை முடித்தவுடன், டிஜிட்டல் ஆர்.சி.யை இணையம் வழியாக பொதுமக்களே நேரடியாக டவுன்லோடு செய்து கொள்ளலாம். இதற்காக தபாலில் ஆர்.சி. கார்டு வரும் வரை காத்திருக்க வேண்டியதில்லை.

    ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி

    இதேபோல், ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்களுக்கு தேர்வு முடிந்த அன்றே டிரைவிங் லைசென்ஸ் டிஜிட்டல் முறையில் வழங்கப்படும்.

    லைசென்ஸ் வழங்கப்பட்ட தகவல் விண்ணப்பதாரரின் மொபைல் எண்ணுக்கு வந்த பிறகு, பரிவாஹான் இணையதளம் அல்லது எம்-பரிவாஹான் ஆப் மூலம் அதை டவுன்டு செய்து பயன்படுத்த முடியும். அதுமட்டுமல்ல, டிஜிட்டல் லைசென்ஸ் மற்றும் ஆர்.சி. உள்ளிட்ட ஆவணங்களில் க்யூ ஆர் இடம்பெறும். அதை ஸ்கேன் செய்தால் அந்த ஆவணம் உண்மையானதா என்பதை அரசு அலுவலகங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ அமைப்புகள் மின்னணு முறையில் எளிதாக சரிபார்க்க முடியும்.

    Advertisement

    இன்று முதல் தமிழக அரசு வசதி

    இந்த டிஜிட்டல் சான்றிதழ்களை ஒரு ஆண்டுக்கு இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதியும் வழங்கப்படுகிறது. இதனால் லைசென்ஸ் அல்லது ஆர்.சி. கார்டு தொலைந்து விட்டால் என்ன செய்வது என்ற கவலை குறையும். செல்போனிலேயே டிஜிட்டல் ஆவணத்தை வைத்துக் கொண்டு தேவைப்படும் நேரத்தில் பயன்படுத்த முடியும்.

    ஏற்கனவே டிஜிட்டல் ஆவணங்களை பயன்படுத்தும் நடைமுறை இருந்தாலும், இப்போது ஸ்மார்ட் கார்டை தபால் மூலம் அனுப்பும் முறைக்கு பதிலாக பொதுமக்களே நேரடியாக பதிவிறக்கம் செய்து கொள்ளும் வகையில் நடைமுறை மாற்றப்பட்டுள்ளது.

    இந்த மாற்றம் வாகன உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்களுக்கு நேரத்தையும் அலைச்சலையும் குறைக்கும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. முக்கியமாக, புதிய லைசென்ஸ் பெறுபவர்கள் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு அன்றே டிஜிட்டல் லைசென்ஸை பெற முடியும் என்பதால், கையில் ஸ்மார்ட் கார்டு வரும் வரை காத்திருக்க வேண்டிய நிலை இருக்காது. அதேபோல் புதிய வாகனம் வாங்குபவர்களும் பதிவு முடிந்ததும் டிஜிட்டல் ஆர்.சி.யை பெற்றுக் கொள்ளலாம்.. சூப்பர் வசதில்ல..!!

    English Summary

    Driving Licence and RC Documents New Digital Facility from today Sep 12.. No More Postal Cards in Tamil Nadu