டிரைவிங் லைசென்ஸ் எடுக்க போறீங்களா? செப்டம்பர் 15 முதல் வரப்போகும் செம மாற்றம்.. இனி அலைச்சல் இல்லை

  • சென்னை: டிரைவிங் லைசென்ஸ் எடுக்கணுமா? வாகனம் வைத்திருப்பவர்களுக்கு மிகவும் முக்கியமான ஆவணங்களில் டிரைவிங் லைசென்ஸ் மற்றும் RC புக் எனப்படும் வாகனப் பதிவு சான்றிதழும் அடங்கும். இதுவரை இந்த ஆவணங்களை பெறுவதற்கு விண்ணப்பித்து, அதற்கான அட்டையை தபால் மூலம் வீட்டிற்கு வரும் வரை காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. ஆனால், இனி அந்தக் காத்திருப்பு குறைய உள்ளது. எப்படி தெரியுமா?

    Advertisement

    தமிழகத்தில் வாகன ஓட்டுநர்கள் மற்றும் வாகன உரிமையாளர்களுக்கான சில முக்கிய போக்குவரத்து சேவைகள் வரும் செப்டம்பர் 15, 2026 முதல் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்பட உள்ளன. இதை முதல்வர் ஜோசப் விஜய் சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் அறிவித்துள்ளார்.

    Advertisement

    தமிழ்நாட்டில் டிரைவிங் லைசென்ஸ் மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழை டிஜிட்டல் முறையில் பெற்றுக்கொள்ளும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த நடைமுறை செப்டம்பர் 15, 2026 முதல் மாநிலம் முழுவதும் செயல்பாட்டுக்கு வர உள்ளது.

    டிரைவிங் லைசென்ஸ்

    இப்போது டிரைவிங் லைசென்ஸ் அல்லது RC பெறுவதற்கு விண்ணப்பதாரர்களிடம் இருந்து ரூ.250 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதன் பிறகு சிப் பொருத்தப்பட்ட அட்டை தயாரிக்கப்பட்டு, தபால் மூலம் முகவரிக்கு அனுப்பப்படுகிறது. இதனால் சிலருக்கு ஒரு வாரம் முதல் ஒரு மாதம் வரை கூட காத்திருக்க வேண்டியுள்ளது.

    Advertisement

    இந்த தாமதத்தை தவிர்ப்பதற்காகத்தான் டிஜிட்டல் முறையை அரசு கொண்டு வருகிறது. அதன்படி, தேவையான ஆவணத்தை ஆன்லைன் வழியாகவே டவுன்லோடு செய்து செல்போனில் வைத்துக்கொள்ள முடியும். தேவையென்றால் அதன் நகலை பிரிண்ட் எடுத்தும் பயன்படுத்தலாம்.

    டிரைவிங் டெஸ்ட் பாஸ் செய்தால்?

    அதேபோல, புதிதாக டிரைவிங் லைசென்ஸுக்கு விண்ணப்பிப்பவர்கள் இனிமேல் குறிப்பாக இந்த வசதியால் பயனடைய உள்ளனர். டிரைவிங் டெஸ்டில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, அன்றைய தினமே டிஜிட்டல் லைசென்ஸ் வழங்கும் நடைமுறை கொண்டுவரப்படுகிறதாம்..

    இதனால் லைசென்ஸ் கார்டு, போஸ்டலில் வரும் வரை காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது. லைசென்ஸ் தொடர்பான தகவலை டிஜிட்டல் வடிவில் பெற்றுக்கொள்ள முடியும்.

    Advertisement

    புது வண்டி வாங்குபவர்களுக்கும் செம வசதி

    புதிதாக வாகனம் வாங்குபவர்களும் இந்த வசதியை பயன்படுத்தலாம். வாகனப் பதிவு முடிந்த பிறகு, Digital RC-யை இணையம் வழியாக பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

    மேலும், இந்த டிஜிட்டல் ஆவணங்களில் இருக்கும் QR Code மூலம் அவை உண்மையான ஆவணங்களா என்பதை அரசு அலுவலகங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எளிதாகச் சரிபார்க்க முடியும். இதன் மூலம் போலி ஆவணங்களைப் பயன்படுத்துவதையும் கட்டுப்படுத்த முடியும்.

    ஆவணம் தொலைந்தால்?

    டிஜிட்டல் முறையின் இன்னொரு பிளஸ் பாயிண்ட்,லைசென்ஸ் அல்லது RC ஆவணம் தொலைந்துவிட்டாலும், சேதமடைந்தாலும் மறுபடியும் டவுன்லோடு செய்துகொள்ள முடியும்..

    Advertisement

    அதுமட்டுமல்ல, இனி லைசென்ஸ், வாகனப் பதிவு உள்ளிட்ட போக்குவரத்து தொடர்பான சேவைகளுக்கு "Anywhere Registration / Licensing" முறையும் படிப்படியாக கொண்டு வரப்பட உள்ளது. அதாவது, எந்த ஒரு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திலும் தேவையான சேவைகளுக்கு விண்ணப்பிக்க முடியும்.

    இந்த புதிய வசதிக்கான அதிகாரப்பூர்வ வெப்சைட் முகவரி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அது வெளியான பிறகு பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான டிஜிட்டல் லைசென்ஸ் மற்றும் RC-யை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

    English Summary

    Driving Licence Update.. Major Change From September 15! No More Waiting for Your Licence Card