திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து

  • சென்னை: திமுக கூட்டணியில் இருந்து சட்டமன்ற தேர்தலை சந்தித்திருந்த மதிமுக, தனது சொந்த சின்னத்தில் நிற்பதற்கு எவ்வளவோ மன்றாடியது என்றும், ஆனால் திமுகவின் நிர்பந்தத்தின் பேரில்தான் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டதாகவும் துரை வைகோ கூறியிருக்கிறார்.

    Advertisement

    சட்டமன்ற தேர்தலில் தனி சின்னத்தில் போட்டியிட்ட திமுக கூட்டணியில் இருந்த கட்சிகளான காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக மற்றும் ஐயுஎம்எல் தற்போது தவெக பக்கம் தாவியிருக்கின்றன. ஒருவேளை மதிமுகவும் தனி சின்னத்தில் போட்டியிட்டு இருந்தால், அக்கட்சிக்கும் அமைச்சராகும் வாய்ப்பு கிடைத்திருக்கும். ஆனால், திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டதால் இந்த வாய்ப்பு தவறியுள்ளது.

    Advertisement

    இதன் வெளிப்பாடாக, திமுக சின்னத்தில் போட்டியிட்டது குறித்து மிகவும் அப்செட்டாக பேசி வருகிறார் மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ. இன்று இது குறித்து அவர் கூறியிருக்கும் கருத்துக்கள் திமுகவை டார்கெட் செய்திருக்கிறது.

    துரை வைகோ பேசியது

    "எங்களுடைய சொந்த சின்னத்தில் போட்டியிடுவதற்காக, நாங்கள் திமுகவிடம் எவ்வளவோ முறையிட்டோம், மன்றாடினோம். ஆனால், வேறு வழி இன்று நிர்பந்தத்தின் காரணமாக நாங்கள் எங்கள் சின்னத்தின் நிற்காமல், திமுக சின்னத்தில் போட்டியிட்டோம். இந்த நெருக்கடியை எதிர்கொண்டு கூட்டணியில் இருந்து வெளியே வந்திருக்கலாமே என்று கேள்விகள் எழலாம்.

    தேர்தலுக்கு 2 வாரங்களுக்கு முன்புதான் எங்களுக்கு இந்த நெருக்கடி கொடுக்கப்பட்டது. அப்படி இருக்கும்போது எப்படி கூட்டணியில் இருந்து வெளியே வர முடியும். கடந்த 10 ஆண்டுகளாக திமுகவுடன் கூட்டணி தொடர்கிறது. எந்த காரணத்துக்காக கூட்டணி வைத்தோமோ, அந்த காரணமும் அப்படியே இருக்கிறது. இருந்தும் சின்னம் பிரச்சனைக்காக கூட்டணியில் இருந்து வெளியேறி அதன் மூலம் சலசலப்புகளை உருவாக்கி விடக் கூடாது என்று நாங்கள் பொறுமை காத்தோம்." என்று துரை வைகோ கூறியுள்ளார்.

    முன்னதாக கடந்த 2 நாட்களுக்கு முன்னர் இதேபோல திமுக சின்னத்தில் போட்டியிட்டது துர்திஷ்டவசமானது என்று பேசியிருந்தார். "கடைசி நேரத்தில் ஏற்பட்ட நிர்ப்பந்தமே இதற்குக் காரணம். தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் மனவேதனை எங்களின் துரதிர்ஷ்டவசமான செயல் என்பதை ஆயிரம் முறை சொல்வேன்" என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Durai Vaiko has stated that the MDMK, which contested the Assembly elections as part of the DMK alliance, had pleaded earnestly to run under its own symbol but ultimately contested under the 'Rising Sun' symbol due to pressure from the DMK.