வெட்கமில்லையா துரைமுருகனுக்கு? பேத்தி திருமணத்தில் வேத மந்திரங்கள்.. திராவிடர் பெரியார் கழகம் கண்டனம்!

  • சென்னை: திமுக பொது செயலாளர் துரைமுருகனின் குடும்பத் திருமண விழா வேத மந்திரங்களுடன் நடந்தது இப்போது அரசியல் களத்தில் விவாதமாக மாறியுள்ளது. பல்வேறு தரப்பினரும் இது தொடர்பாக கேள்வி எழுப்பி வருகிறார்கள். சுயமரியாதைத் திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் பெற்றுத் தந்த திமுகவின் பொதுச் செயலாளர் வீட்டிலேயே வைதீகச் சடங்குகள் நடைபெற்றிருப்பது ஏன் என திராவிடர் பெரியார் கழகம் கேள்வி எழுப்பியுள்ளது.

    Advertisement

    இந்தியாவிலேயே சுயமரியாதை திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரத்தை முதலில் வழங்கிய மாநிலம் தமிழ்நாடு தான். அண்ணா முதல்வராக இருந்தபோது திமுக ஆட்சியில் தான் வேத மந்திரங்கள், அக்னி சாட்சி இல்லாமல் நடக்கும் சுயமரியாதை திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்பட்டது.

    Advertisement

    சமஸ்கிருத மந்திரங்கள்

    இதற்கிடையே அதே திமுகவின் பொதுச்செயலாளராக இருக்கும் மூத்த தலைவர் துரைமுருகன் பேத்தி திருமணம் வேத மந்திரங்களுடன் நடந்துள்ளது. அதாவது துரைமுருகனின் பேத்தியும், வேலூர் லோக்சபா எம்பி கதிர் ஆனந்தின் மகளுமான செந்தாமரைக்கும், திரைப்பட தயாரிப்பாளர் கண்ணன் ரவியின் மகன் தீபக் ரவிக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது. இந்த திருமணம் வைதீக முறைப்படி, சமஸ்கிருத வேத மந்திரங்கள் ஓதப்பட்டு நடத்தப்பட்டது.

    ஆட்சியதிகாரத்திற்கு அண்ணா! பேத்தி திருமணத்திற்கு ஆரியமா? துரைமுருகன் மீது ஆக்ஷன்? கொதிக்கும் தி.க.

    கடும் கண்டனம்

    திராவிட இயக்கத்தின் சுயமரியாதை திருமண கொள்கையை முன்னிறுத்தி வரும் திமுகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான துரைமுருகனின் குடும்ப விழாவில் வைதீக சடங்குகள் இடம்பெற்றிருப்பது அரசியல் களத்திலும் விவாதத்தை கிளப்பியது. திமுக தலைவர்களின் குடும்ப திருமணங்களில் பொதுவாக சுயமரியாதை திருமணமே நடக்கும் நிலையில், இந்த திருமணம் பேசுபொருள் ஆகியுள்ளது. திராவிட இயக்கத்தை சேர்ந்த பலரும் இது குறித்து கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

    Advertisement

    இந்த விவகாரம் குறித்து திராவிட இயக்க தமிழர் பேரவையின் நிறுவனர் சுப. வீரபாண்டியன் தனது கண்டனத்தை தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "என் பெருமதிப்பிற்குரிய, என்னிடம் பேரன்பு காட்டும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர், அண்ணன் துரைமுருகன் இல்லத் திருமணத்தில் பார்ப்பனர்களின் சமஸ்கிருத மந்திர ஒலி கேட்டு, இப்போதும் வலிக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

    துரைமுருகன் வீட்டு திருமணத்தில் ஒலித்த சமஸ்கிருத மந்திரம்.. வலிக்கிறது இதயம்! சுப வீரபாண்டியன் வேதனை

    வெட்கமில்லையா?

    அதேபோல திராவிடர் பெரியார் கழகத்தின் தலைவர் மணி அமுதனும் இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சுயமரியாதை திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் பெற்று தந்த திமுகவின் பொது செயலாளர் வீட்டிலேயே வைதீகச் சடங்குகள் நடைபெற்றிருப்பது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    Advertisement

    இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், "சுயமரியாதை திருமண அங்கீகாரத்தை பெற்று தந்தது திமுக. இன்று திமுக பொது செயலாளர் இல்ல திருமணத்தில் பார்ப்பன சடங்குகள்! மந்திரங்கள்.. வெட்கமில்லையா துரைமுருகனுக்கு? இதை வேடிக்கை பார்க்கிறதா திமுக?" என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

    English Summary

    Wedding in DMK General Secretary Duraimurugan's family, conducted with Sanskrit Vedic chants and traditional rituals(துரைமுருகன் இல்ல திருமணத்தால் எழுந்த விவாதம்): Duraimurugan Family Wedding with Vedic Rituals.