ஊரான் பலத்தில் வந்தவருக்கு.. இவ்வளவு கர்வம் கூடாது! முதலமைச்சர் விஜய்க்கு துரைமுருகன் அட்வைஸ்!

  • சென்னை: பேச்சில் கண்ணியம் இருக்க வேண்டும் என்றும், எடுத்தோம் கவுத்தோம் என்று பேசுவது முதலமைச்சருக்கு அழகில்லை என்றும் திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் முதலமைச்சர் விஜய்யை விமர்சித்திருக்கிறார். மேலும், ஊரான் பலத்தில் வந்தவருக்கு இவ்வளவு கர்வம் கூடாது என்றும் அவர் பேசியிருப்பது விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

    Advertisement

    கரூரில், நெரிசலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி, அவர்களுக்கு அரசு பணிக்கான ஆணையை முதலமைச்சர் விஜய் நேரில் வழங்கியிருந்தார்.

    Advertisement

    என்னை தடுத்திருக்கலாம்

    பின்னர் பேசிய அவர், முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக குறித்து சரமாரியாக விமர்சித்திருந்தார். அவர் பேசியிருந்ததாவது, "என் வாழ்வில் எந்த உயரத்தை எட்டியிருந்தாலும், கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் எனக்கு ஒரு ஆழமான வடு. அன்று எதிர்பார்த்ததைவிட கூட்டம் அதிகமாக இருந்தபோது காவல்துறை என்னை எச்சரித்திருக்கலாம். நாமக்கல்லில் இருந்து வரும்போதே என்னை தடுத்திருக்கலாம்.

    ஆனால், என்னை கரூர் வரை அழைத்து வந்தார்கள். அன்றைய கரூர் காவல்துறையினரின் நடகத்தை நம்பி நான் ஏமாந்துவிட்டேன். நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் நினைவாக நினைவு சின்னம் அமைக்கப்படும்.

    Advertisement

    ஓடி ஒளிந்த தலைவர்கள்

    திமுக ஊழலின் வெண்டிங் மெஷின். விபத்து நடந்தபோது நான் ஓடி ஒளிந்துக்கொண்டதாக திமுகவினர் தொடர்ந்து என் மீது பழிசுமத்துகின்றனர். இங்க கரூர் கம்பெனி ஓனர் ஒருத்தர் இருக்காரு. எங்க இருக்கார்னு தெரியாம.. ஓடு ஓடுனு ஓடுறாரு. மற்றொருவர் சிங்கபூருக்கு போய் செக்-அப் என்கிற பெயரில் ஒளிந்துக்கொண்டார்.

    கமிஷன் கரப்ஷன்

    திமுக ஆட்சி எப்படி இருந்தது? 10 அடி நிலத்தில் கட்டிடம் கட்ட வேண்டும் என்றாலும், ஆயா வேலைக்கு சேர வேண்டும் என்றாலும் கூட லஞ்சம் கொடுக்க வேண்டும். ஆனால், இப்போது தவெக ஆட்சியில் கட்டிங், கரப்சன், கமிஷன் ஒழிக்கப்பட்டுவிட்டது." என பேசியிருந்தார். இந்த பேச்சுக்கு திமுகவினர் கடுமையாக எதிர்வினையாற்றி வருகின்றனர்.

    Advertisement

    கண்ணியம் வேண்டும்

    குறிப்பாக திமுக முன்னாள் எம்பி துரைமுருகன், "பேச்சிலே கண்ணியம் இருக்க வேண்டும். எதிர்க்கட்சிகளையும் அரவணைக்கும்படிதான் இதற்கு முன் இருந்த முதலமைச்சர்கள் பேசியதை நான் கேட்டிருக்கிறேன். ஆனால், எடுத்தோம் கவிழ்த்தோம் என்று பேசுவது முறையல்ல. வெற்றி பெற்றவர்கள் எல்லாம் வீரர் அல்ல. எனவே இந்த வெற்றி நிலையானதா? என்பதை நீடித்துதான் பார்க்க வேண்டும். அப்படித்தான் ஒரு காலத்தில் எங்களை விட்டால் வேறு ஆள் இல்லை என்று காங்கிரஸ் சொன்னது. ஆனால் அது ஒர்க் ஆகாமலா போனது? அதிமுகவும் அப்படித்தான் சொன்னது. ஆனால் காணாமலா போய்விட்டது?

    ஊரான் பலம்

    அரசியலில் வெற்றி தோல்வி சகஜம். இரண்டையும் ஒன்றாக பாவித்து அடுத்தமுறை மக்களின் மனதை கவர்பவர்தான் அரசியல்வாதி. ஆனால் ஏதோ வந்துவிட்டோம், என்பதற்காக.. அதுவும் சொந்த பலம் கிடையாது. ஊரான் பலத்தில் வந்தவருக்கு இவ்வளவு கர்வம் கூடாது" என்று விமர்சித்திருக்கிறா

    English Summary

    Duraimurugan: Former DMK Minister Duraimurugan has criticized Chief Minister Vijay, stating that one’s speech should be dignified and that speaking rashly or impulsively does not befit a Chief Minister. His remarks—specifically noting that someone who rose to power relying on another's strength should not display such arrogance—have sparked a debate.