உதயநிதியை கட்டி அணைத்த துர்கா! கையை இறுகப் பற்றிய செல்வி! மகிழ்ந்த இன்பா! வாட்டத்துடன் ஸ்டாலின்!

  • சென்னை: நடிகை திரிஷாவை அவதூறாக பேசிய விவகாரத்தில் விடுவிக்கப்பட்ட உதயநிதி ஸ்டாலினை, அவரது தாய் துர்கா, கட்டி அணைத்து ஆறுதல் தெரிவித்தார். அது போல் அத்தை செல்வி, அவரது கையை இறுக பற்றிக் கொண்ட உருக்கமான காட்சிகள் ஆழ்வார்பேட்டை வீட்டில் நடந்தது.

    Advertisement

    தஞ்சாவூரில் நடந்த திமுக ஆர்ப்பாட்டத்தின் போது தொண்டர்கள் திரிஷாவின் பெயரை சொல்ல அதற்கு உதயநிதி இரட்டை அர்த்தத்தில் ஒரு வார்த்தையை கூறி சர்ச்சையில் சிக்கினார்.

    Advertisement

    இதை கண்டித்து தவெகவினர் தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் 9 பிரிவுகளின் கீழ் உதயநிதி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. அவரை கைது செய்ய போலீஸார் சென்றனர்.

    இந்த விவகாரம் அறிந்த திமுகவினர் உதயநிதியின் நீலாங்கரை வீட்டு வாசலில் குவிந்தனர். அவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து உதயநிதியை தஞ்சாவூருக்கு விசாரணைக்கு அழைத்துச் செல்வதாக போலீஸார் தெரிவித்தனர்.

    ஆனால் வழக்கறிஞர்கள் வராமல் அனுப்பமாட்டோம் என முன்னாள் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, எ.வ.வேலு, கே.என்.நேரு உள்ளிட்டோர் வாக்குவாதம் செய்தனர்.

    Advertisement

    இதனிடையே உதயநிதி கைதை தடுக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து அவரை கைது செய்ய பகல் 12 மணி வரை தடை விதிக்கப்பட்டது. ஆனால் அது போன்ற எந்த தடையும் தங்களுக்கு கோர்ட்டில் இருந்து வரவில்லை என கூறிய போலீஸார், உதயநிதியை போலீஸ் வாகனத்திலேயே தஞ்சாவூருக்கு அழைத்துச் சென்றனர்.

    கிழக்கு கடற்கரை சாலை, விழுப்புரம், விக்கிரவாண்டி வழியாக போலீஸ் வாகனம் சென்றது. தமிழகம் முழுக்க உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் போராட்டங்களை நடத்தியிருந்தனர். இதையடுத்து உதயநிதி சென்ற போலீஸ் வாகனத்தை வழிமறித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். அவர்களை போலீஸார் விலக்கி விட்டனர்.

    Advertisement

    இதையடுத்து ஒலக்கூர் காவல் நிலையத்தில் உதயநிதிக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. அதை சாப்பிட்டு முடித்ததும் வாகனம் தஞ்சை நோக்கி புறப்பட்டது. இந்த நிலையில் உதயநிதி கைதானதால் முன்ஜாமீன் மனுவாக விசாரிக்க நீதிமன்றம் மறுத்து, அவரை விசாரணை முடித்ததும் விடுவிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் உத்தரவிட்டார்.

    இதையடுத்து உதயநிதியை அழைத்துச் செல்லப்பட்ட போலீஸ் வாகனம் நேற்றைய தினம் 6 மணிக்கு மேல் தஞ்சைக்கு செல்லாமல் செங்கிப்பட்டி காவல் நிலையத்திற்கு சென்றது. அங்கு அவரிடம் விசாரணை நடத்தியது.

    இதையடுத்து அவரை விடுவித்தது. திருச்சி விமான நிலையத்தில் உதயநிதி செய்தியாளர்களை சந்தித்தார். பிறகு சென்னைக்கு வந்த அவர், நேராக ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்டாலினின் வீட்டிற்கு சென்றார்.

    Advertisement

    அங்கு மகனை பார்த்ததும் தாய் துர்கா கட்டி அணைத்தார். மருமகனை பார்க்க கோபாலபுரம் இல்லத்தில் இருந்து வந்த அத்தை செல்வி, உதயநிதியின் கையை பற்றிக் கொண்டார். மகனுக்காக காத்திருந்த ஸ்டாலின், உதயநிதியை கட்டி அணைத்து வரவேற்றார். தந்தையை பார்த்ததும் இன்பநிதி மகிழ்ந்தார். இப்படியாக ஆழ்வார்பேட்டை இல்லத்தில் உருக்கமான காட்சிகள் நடந்தது.

    English Summary

    What happened in Alwarpet house, when Udhayanidhi released from police custody?