ரூ.1,020 கோடி முறைகேடு? கே.என்.நேரு உள்ளிட்ட 13 பேர் மீது வழக்குப்பதிவு.. வெளியானது FIR..!

  • சென்னை: நகராட்சி நிர்வாகத் துறையில் ரூ.1,020 கோடி டெண்டர் முறைகேடு தொடர்பாக, திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, அவரது சகோதரர்கள் கே.என்.மணிவண்ணன், என்.ரவிச்சந்திரன், உதவியாளர் கவி பிரசாத், திமுக முன்னாள் எம்.எல்.ஏக்கள் மாதவரம் சுதர்சனம், எபினேசர் உள்ளிட்ட 13 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இதன் FIR விவரங்கள் வெளியாகியுள்ளன.

    Advertisement

    தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 2021 முதல் 2025 வரை நடைபெற்ற அரசு டெண்டர்கள் ஒதுக்கீட்டில் ரூ.1,020 கோடி முறைகேடு மற்றும் பணி நியமனங்களுக்கு லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. முன்னாள் அமைச்சர் கே.என். நேரு வீடு மற்றும் அலுவலகங்களில், லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.

    Advertisement

    திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, அவரது சகோதரர்கள் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட 13 பேர் மீது லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறை (DVAC) முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. ​ அதோடு, நகராட்சி நிர்வாகத்துறை, குடிநீர் வழங்கல் துறையின் பெயர் தெரியாத அதிகாரிகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    அமலாக்கத்துறையின் அளித்த தகவல்கள் மற்றும் 258 பக்க அறிக்கையின் அடிப்படையில், தமிழக அரசின் முன் அனுமதியுடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    ​
    லஞ்ச ஒழிப்புத் துறை வெளியிட்டுள்ள எஃப்.ஐ.ஆர் அறிக்கையின்படி,

    1. கே.என்.நேரு (முன்னாள் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர்)
    ​2. கே.என்.மணிவண்ணன் (கே.என்.நேருவின் சகோதரர்)
    ​3. என்.ரவிச்சந்திரன் (கே.என்.நேருவின் சகோதரர்)
    ​4. கவி பிரசாத் (கே.என்.நேருவின் நெருங்கிய உதவியாளர்)
    5. ​டி.ரமேஷ் (டி.வி.எச் குழுமம்)
    ​6 டி.பிரபு (டி.வி.எச் குழுமம்)
    7. ​ஆர்.சசிப்ரியா (முன்னாள் நகரமைப்பு அலுவலர், கோவை)
    8. ​ஜி.பாலச்சந்திரன் (முன்னாள் மண்டல பொறியாளர், திருப்பூர்)
    ​9. ஜி.முருகேசன் (முன்னாள் மண்டல பொறியாளர், திருப்பூர்)
    ​10. எஸ்.சுதர்சனம் (மாதவரம் முன்னாள் எம்.எல்.ஏ)
    ​11. ஜே.ஜே.எபினேசர் (ஆர்.கே.நகர் முன்னாள் எம்.எல்.ஏ)
    ​12. சி.டி.கான்ஸ்ட்ரக்ஷன்ஸ் (சென்னை)
    ​13. கே.சதீஷ் குமார் (காண்ட்ராக்டர்)

    Advertisement

    ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. மேலும், நகராட்சி நிர்வாகத்துறை, குடிநீர் வழங்கல் துறையின் பெயர் தெரியாத அதிகாரிகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளனர். கட்சி நிதி என்ற பெயரில் டெண்டரில் 7.5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை லஞ்சம் பெற்றதாக விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மீது 14 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    English Summary

    DVAC has registered a case against 13 individuals-including former DMK Minister KN Nehru, his brother, his aide Kavi Prasad, and former DMK MLAs Madhavaram Sudharsanam and Ebenezer-in connection with a tender irregularity worth ₹1,020 crore in the Municipal Administration Department.