DVAC: விமலா சஸ்பெண்ட் வழக்கில் திடீர் ட்விஸ்ட்.. சென்னை ஐகோர்ட்டுக்கு போன தமிழக அரசு

  • சென்னை: லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளர் விமலா சஸ்பெண்ட் தொடர்பான வழக்கில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. விமலா பணியிடை நீக்கத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடைக்கு எதிராக தமிழக அரசு தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Advertisement

    சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறை தலைமை அலுவலகத்தில் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் விமலா. இவர் சென்னை பெருநகரக் காவல்துறையில் பாலியல் தடுப்பு பிரிவு காவல் ஆய்​வாள​ராக பணியாற்​றிய ராஜலட்​சுமி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தார். இந்த வழக்கின் ஆரம்பகட்ட கண்காணிப்பு விசாரணை மேற்கொண்டபோது, அவரிடம் லஞ்சம் கேட்டதாக உள்துறை கண்காணிப்பில் தெரியவந்ததாக சொல்லப்படுகிறது.

    Advertisement

    நீதிமன்றத்தில் வழக்கு

    இதையடுத்து இந்த விவகாரம் டிஐஜி என். தேவராணி, லஞ்ச ஒழிப்பு துறை இயக்குநர் அருணின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணை அடிப்படையில், கடந்த 17 ஆம் தேதி ஆய்வாளர் விமலா இடைநீக்கம் செய்யப்பட்டார். மேலும், இந்த விவகாரத்தில் தொடர்பு உள்ளதாக சந்தேகம் இருந்ததால், டிஎஸ்பி ஜாய் நீலகிரி மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்த நிலையில், விமலா இந்த விவகாரம் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    அதில், "காவல் ஆய்வாள​ராக பணியாற்​றிய ராஜலட்​சுமி என்பவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்​தேன் என்ற காரணத்​துக்​காக, லஞ்சஒழிப்​புத் துறை அதிகாரிகள் உள்​நோக்​கத்​துடன் தன்னை இடைநீக்​கம் செய்து உத்​தர​விட்​டுள்​ள​னர்" என்று சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் விமலா மனு தாக்​கல் செய்​தார். இந்த மனுவானது, நீதிபதி பிடி ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இரு தரப்பினரும் தங்களது வாதங்களை முன் வைத்தனர்.

    Advertisement

    விமலா இடைநீக்கத்திற்கு இடைக்காலத் தடை

    இருதரப்பு வாதங்​களை​யும் கேட்ட நீதிபதி ஆஷா, "நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​யப்​பட்டுள்ள ஆவணங்​களை வைத்து பார்க்கும் போது, காவல் ஆய்​வாளர் ராஜலட்​சுமி மீது எஃப்​ஐஆர் பதிவு செய்ய லஞ்ச ஒழிப்​புத் துறை இயக்​குநர் கடந்த ஜனவரி மாதம் 6 ஆம் தேதியே உத்தரவிட்டு இருக்கிறார். அதன்​படியே மனு​தா​ரர் விமலா, சம்​பந்​தப்​பட்ட ஆய்​வாள​ருக்கு எதி​ராக வரைவு எஃப்​ஐஆர் தயாரித்​து, இயக்​குநரின் ஒப்​புதலுக்​காக அனுப்பி வைத்​து இருக்கிறார்.

    அந்த வரைவு எஃப்ஐஆரில், லஞ்ச ஒழிப்​புத் துறை எஸ்​.பி. சில திருத்​தங்​களை செய்து ஒப்புதல் அளித்த பிறகே மனு​தா​ரர் அந்த எஃப்​ஐஆரை கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி பதிவு செய்​து இருக்கிறார். எனவே சக காவல் ஆய்​வாளர் மீது எஃப்​ஐஆர் பதிவு செய்​தார் என்ற காரணத்​துக்​காக மனு​தா​ரரை இடைநீக்​கம் செய்​திருப்​பது உள்​நோக்​கம் கொண்​ட​தாகவே தெரி​கிறது. இதனால் விமலா இடைநீக்கத்துக்கு வரும் ஜூலை 9 ஆம் தேதி வரை இடைக்காலத் தடை விதித்து உத்தரவிடுகிறேன் என்று உத்தரவிட்டார்.

    Advertisement

    தமிழக அரசு மேல் முறையீடு

    மேலும், இந்த வழக்​கில் லஞ்ச ஒழிப்​புத் துறை அதி​காரி​கள் பதில் அளிக்க வேண்​டும் எனவும் உத்தரவிட்டு விசாரணையை நீதிபதி தள்ளி வைத்தார். இந்த நிலையில் தான் இன்று தமிழக அரசு சார்பில், விமலா இடைநீக்கத்துக்கு இடைக்கால தடை விதித்த நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை விரைவில் நடைபெறும் என கூறப்படுகிறது.

    English Summary

    DVAC Inspector Vimala Suspension Case: The Tamil Nadu government has appealed against the Madras High Court interim stay on the suspension of DVAC Inspector Vimala. The appeal was filed by the Additional Advocate General, challenging last week's order that temporarily restrained the suspension.