மின்வாரிடத்தில் நடந்த முறைகேடு.. போலி நிறுவனம், டெண்டர் ஆவணங்களை தூக்கிய லஞ்ச ஒழிப்புத்துறை!

  • சென்னை: மின்வாரியத்தில் அலுமினிய மின்கடத்தி கொள்முதல் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை 60 இடங்களில் நடத்திய சோதனையில் முக்கிய ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனையில் டெண்டர் தொடர்பான ஆவணங்கள், டிஜிட்டல் ஆதாரங்கள் மற்ரும் போலி நிறுவன ஆவணங்கள் சிக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    தமிழ்நாடு முழுவதும் இன்று டிரான்ஸ்ஃபார்மர் கொள்முதல் முறைகேடு வழக்கு தொடர்பாக 60 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறஒ சோதனை நடத்தியது. சென்னையில் மட்டும் 27 இடங்களிலும், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களிலும் இந்த சோதனை நடத்தப்பட்டது. அதேபோல் 10க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

    Advertisement

    மேட்ரூட் அருகே சிட்கோ, குஞ்சாண்டியூர், கோனூர் ஆகிய 3 இடங்களில் செயல்பட்டு வரும் தனியார் கண்டர்டர்ஸ் நிறுவனங்களில் இருந்து டிரான்ஸ்ஃபார்மருக்கு தேவையான பொருட்கள் கடந்த ஆட்சி காலத்தில் விநியோகம் செய்யப்பட்டது. இதனால் இந்த 3 நிறுவனங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்டது.

    ஒவ்வொரு தனியார் நிறுவனங்களிலும் காவல் ஆய்வாளர்கள் நரேந்திரன், நல்லாம்மாள், ரவிக்குமார் தலைமையில் 15க்கும் மேற்பட்டோர் ரெய்டு நடத்தினர். காலை 8 மணியளவில் தொடங்கிய சோதனை மாலை 6.30 மணி வரை தொடர்ந்தது. இந்த நிலையில் 60 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட ரெய்டு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை விளக்கம் கொடுத்துள்ளது.

    Advertisement

    அதில், தமிழ்நாடு மின் வாரியத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக 60 இடங்களில் சோதனை செய்யப்பட்டது. அரசு ஊழியர்கள், தனியார் ஒப்பந்ததார்கள், விநியோகிப்பவர்களுடன் கூட்டு சேர்ந்து சதியில் ஈடுபட்டு நம்பிக்கை மோசடி மற்றும் குற்றவியல் முறைகேட்டில் ஈடுபட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    2021 முதல் 2023 காலக்கட்டத்தில் 2.7 கிமீ அலுமினிய மின் கடத்திகளை கொள்முதல் செய்வதற்காக நடந்த ஒப்பந்த புள்ளியின் இறுதி விலையில், அரசின் இணையதளத்தில் குறிப்பிட்ட விலைகளை காட்டிலும், அதே காலத்தில் நடைபெற்ற கொள்முதல் பரிவர்த்தனையில் அதிக விலை இருந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    Advertisement

    இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்களும், முக்கிய ஆதாரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், டிஜிட்டல் ஆதாரங்கள் மற்றும் போலி நிறுவன ஆதாரங்கள், டெண்டர் தொடர்பாக ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் போலி நிறுவனம் மூலமாக டெண்டர் எடுத்து ரூ.1,000 கோடி மோசடி நடந்திருப்பதாக குறிப்பிடத்தக்கது.

    English Summary

    DVAC Raid: Crucial Evidence Seized in DVAC Raids Across 60 Locations in TNEB Aluminum Conductor Procurement Case