பொதுமக்கள் சேவைக்கு லஞ்சமா.. அரசு அலுவலகங்களில் ஒரே நேரத்தில் 40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு

  • சென்னை: தமிழ்நாடு முழுவதும் 40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஒரே நேரத்தில் ரெய்டு செய்து வருகின்றனர். பொதுமக்களுக்கு சேவை வழங்க அதிகாரிகள் சிலர் லஞ்சம் கேட்பதாக புகார் எழுந்த நிலையில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, வட்டாட்சியர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு மேற்கொண்டு வருகின்றனர்.

    Advertisement

    தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதை தடுக்கும் வகையில் அவ்வப்போது லஞ்ச ஒழிப்புத்துறையினரால் ரெய்டு நடத்தப்படுவது வழக்கமானது. தவெக ஆட்சி அமைந்த பின் அரசு அலுவலகங்களில் லஞ்சம் குறைந்துவிட்டதாகவும், ஊழல் குறைந்துவிட்டதாகவும் அக்கட்சியினர் பேசி வருகின்றனர். ஒருவேளை லஞ்சம் வாங்கினால், வாட்ஸ் அப் எண் மூலமாக புகார் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

    Advertisement

    அதேபோல் மக்கள் பணத்தை தொட்டவர்களையும் விட மாட்டேன் என்று முதல்வர் விஜய் அறிவித்திருந்தார். இதனால் முன்னாள் அமைச்சர் எவ வேலு, செந்தில் பாலாஜி, கே.என்.நேரு, அன்பில் மகேஷ் உள்ளிட்டோரின் வீடுகளில் ரெய்டு நடத்தப்பட்டது. இதற்கான விசாரணை ஒரு பக்கம் இருக்க, இன்று லஞ்ச ஒழிப்புத்துறை 40 இடங்களில் ஒரே நேரத்தில் ரெய்டு நடத்தி இருக்கிறது.

    பொதுமக்களுக்கு சேவை வழங்க அதிகாரிகள் சிலர் லஞ்சம் கேட்பதாக புகார் எழுந்தது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களிலும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, வட்டாட்சியர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ரெய்டு மேற்கொண்டு வருகின்றனர். ஒரே நேரத்தில் இப்படியொரு ரெய்டு நடத்தி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    Advertisement

    கடந்த மாதத்தில் வட்டாட்சியர் அலுவலகங்கள், வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள், பதிவுத்துறை அலுவலகங்கள் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டு பணம் பிடிபட்டது. இதனால் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு துறை அலுவலகங்களில் சோதனை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறை முடிவு செய்திருப்பதாக பார்க்கப்படுகிறது.

    English Summary

    DVAC Raid: DVAC Conducts Simultaneous Raids Across 40 Locations in Tamil Nadu Over Corruption Complaints