ஒட்டுமொத்த திமுகவுக்கு குறி? நேருவின் வீட்டில் மட்டுமல்ல.. மாஜி எம்எல்ஏக்கள் வீட்டிலும் DVAC ரெய்டு!

  • சென்னை: திமுக முதன்மை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கேஎன் நேருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டுள்ளனர். கேஎன் நேரு வீடு மட்டுமல்லாமல், அவரது சகோதரர் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திமுக முன்னாள் எம்எல்ஏக்களான அணைக்கட்டு நந்தகுமார், நாமக்கல் ராமலிங்கம் ஆகியோர் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

    Advertisement

    கடந்த திமுக ஆட்சியில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சராக கேஎன் நேரு இருந்தபோது அந்த துறையில் பணி நியமனம் செய்வதற்கு லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்படுவதாக தெரிகிறது.

    Advertisement

    இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்ய உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில். அதற்கு எதிராக கே என் நேரு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கி விசாரித்த உயர்நீதிமன்றம் கடந்த திங்கள் கிழமை லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்து விசாரிக்கலாம் என தீர்ப்பு வழங்கியது.

    அன்பில் மகேஸ் வழக்கில் திடீர் திருப்பம்.. துணிக்கடை உரிமையாளர் சண்முகப்பிரியா வீட்டில் திடீர் ரெய்டு

    இந்த நிலையில் இன்று காலை கேஎன் நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை போலிசார் திடீர் சோதனை நடத்தினர். கடந்த மாதம் டெண்டர் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கேஎன் நேரு வீட்டில் சோதனை செய்த நிலையில், தற்போது மீண்டும் சோதனை நடத்தப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் கேஎன் நேருவின் சகோதர்கள் வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது.

    Advertisement

    இந்நிலையில், கேஎன் நேரு வீடு மட்டுமல்லாது திமுக முன்னாள் எம்எல்ஏக்களான அணைக்கட்டு நந்தகுமார், நாமக்கல் ராமலிங்கம் ஆகியோர் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மோகனூர் எம்.ஜி.நகரில் முன்னாள் திமுக எம்.எல்.ஏ ராமலிங்கம் வீட்டில் நாமக்கல், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தி வருகின்றார்.

    முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு

    ராமலிங்கம் வீடு, SS கன்ஸ்ட்ரக்சன் உட்பட 4 இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 2021 முதல் 2026 வரை நாமக்கல் திமக எம்.எல்.ஏ வாக ராமலிங்கம் இருந்து வந்தார். மேலும், காலை 7 மணி அளவில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட வந்த போது அவர் வீடு பூட்டிய நிலையில் இருந்ததால் அவரை தொடர்பு கொண்டு வீட்டிற்கு வரவழைத்து தற்போது சோதனையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    Advertisement

    இதேபோல், காட்பாடி காந்தி நகரில் உள்ள திமுக வேலூர் தெற்கு மாவட்ட செயலாளரும், அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதி முன்னாள் உறுப்பினருமான ஏ.பி.நந்தகுமார் வீட்டில் வேலூர் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதே போல் காட்பாடி பகுதியை சேர்ந்த சேகர் என்பவருது வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனைகளில் ஈடுபட்டுள்ளனர்.

    English Summary

    Tamil Nadu DVAC conducts searches at former minister KN Nehru’s locations and properties linked to former DMK MLAs over alleged corruption cases.