சென்னை: தமிழகம் முழுவதும் சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.18.96 லட்சம் ரொக்கம் உட்பட மொத்தம் ரூ.38.99 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கிடமான வகையில் ரூ.20.02 லட்சம் மதிப்பிலான ஜிபே பரிவர்த்தனைகளும் சிக்கியுள்ளது. அதிர்ச்சி தரும் விதமாக திருப்பூர் மாவட்ட குன்னத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் மட்டும் மொத்தம் ரூ. 6,82,205 கணக்கில் வராத பரிவர்த்தனைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு அலுவலகங்களில் லஞ்சப் பணம் கைமாறுவதைத் தடுக்கும் வகையில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஹமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அதன் ஒரு பகுதியாக, நேற்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது அலுவலகத்தில் உள்ள ஆவணங்கள், ஊழியர்களிடம் வைத்திருந்த பணம், அவர்களது செல்போன்களில் உள்ள ஜிபே பரிவர்த்தனை விவரங்கள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்ததில் பலர் சிக்கியதாகச் சொல்லப்படுகிறது. இதன் மூலம், தமிழகம் முழுவதும் சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய திடீர் சோதனையில், கணக்கில் காட்டப்படாத ரூ.18.96 லட்சம் ரொக்கம் என மொத்தம் ரூ.38.99 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கிடமான வகையில் ரூ.20.02 லட்சம் மதிப்பிலான ஜி-பே பரிவர்த்தனைகள் கண்டறியப்பட்ட நிலையில், ரொக்கம், ஜிபே என மொத்தம் ரூ.38.99 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உசிலம்பட்டி சார் பதிவாளர் அலுவலகத்தில் 4 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அதிரடி சோதனையில், விவசாய நிலத்தை வீட்டுமனையாக முறை கேடாக பத்திர பதிவு செய்ய வந்த நபர்கள் உட்பட 6 பேரிடமிருந்து சுமார் ரூ 7,65,000 ரொக்க பணத்தை பறிமுதல் செய்துள்ளனர் மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார். அதிர்ச்சி தரும் விதமாக திருப்பூர் மாவட்ட குன்னத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் மட்டும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மேற்கொண்ட அதிரடி சோதனையில் செல்போன் ஜிபே கணக்கில் சார்பதிவாளர் ராமதிலகம் கணக்கில் ரூ.2,21,540, டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்கள் இருவரது கணக்கில் ரூ. 3,21,910 மற்றும் ஜூனியர் அசிஸ்டன்ட் கணக்கில் ரூ. 1,38,755 என மொத்தம் ரூ. 6,82,205 கணக்கில் வராத பரிவர்த்தனைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கருங்கல்மேடு ரோடு பகுதியில் அமைந்துள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையின் துணை காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் இன்று மாலை 03.30 மணிக்கு திடீர் சோதனையில் ஈடுபட்டனர். குன்னத்தூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் சார் பதிவாளராக ராமதிலகம் என்பவர் பணியாற்றி வருகிறார். அவருடன் சேர்த்து மொத்தம் ஐந்து அலுவலர்கள் பணியில் உள்ளனர். சுமார் ஆறு மணி நேரத்துக்கும் மேலாக இரவு 11 மணி வரை நடைபெற்ற இந்த அதிரடி சோதனையில் செல்போன் ஜி பே கணக்கில் சார்பதிவாளர் ராமதிலகம் கணக்கில் ரூ.2,21,540, டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்கள் இருவரது கணக்கில் ரூ. 3,21,910 மற்றும் ஜூனியர் அசிஸ்டன்ட் கணக்கில் ரூ. 1,38,755 என மொத்தம் ரூ. 6,82,205 கணக்கில் வராத பரிவர்த்தனைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து விசாரணைக்குப் பிறகு மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் லஞ்ச ஒழிப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.லஞ்ச ஒழிப்புத்துறை
அதிரடி சோதனை
சார்பதிவாளர் அலுவலகம்
திடீர் சோதனை
ஜிபே பரிவர்த்தனை