தவெக ஆட்சியில் செம மாற்றமாம்.. ஓபன் கூட்டத்தில் புகழ்ந்தது, திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு

  • சென்னை: ஒரு காலத்தில், சட்டமன்றத்தில் தலைவர்கள் என்ன பேசினார்கள் என்பது.. அடுத்த நாள் நியூஸ் பேப்பரை பார்த்தால்தான் தெரியும். ஆனால், இப்போது லைவ் டெலிகாஸ்ட் செய்யப்படுகிறது. இதை குறிப்பிட்டு புகழ்ந்து பேசியிருக்கிறார் திமுக எம்எல்ஏ எ.வ.வேலு.

    Advertisement

    அவர் பேசியதாவது, "ஒரு காலத்தில் சட்டமன்றத்தில் நாங்கள் என்ன பேசினோம் என்பதை.. நாங்களே சொல்லி வந்தோம். இப்போது அந்த காலம் மாறியிருக்கிறது. கேட்டால் லைவ் என்கிறார். காலையில் 8.30க்கு சட்டமன்றத்திற்குள் சென்றேன். நிகழ்வுகளை முடித்துவிட்டு வெளியே வரும்போது மணி 5.02 ஆகிவிட்டது.

    Advertisement

    சட்டமன்றத்தில் நான் என்னவெல்லாம் பேசினேனோ! அதையெல்லாம் அப்படியே கட் செய்து.. பேஸ்புக், இன்ஸ்டாகிரம், வாட்ஸ்அப் என சோஷியல் மீடியாக்களில் ரீல்ஸாக போட்டுவிட்டார்கள். நான் இதை பார்த்துவிட்டு.. எப்படிங்க என்று கேட்டேன்! அண்ணா எல்லாம் லைவாக போய்விட்டது.. நம்மாட்கள் அதை கட் செய்து போட்டுவிட்டார்கள் என சொன்னார்கள். இப்படியாக எல்லாமும் உங்களுக்கு தெரிந்துவிடுகிறது. எனவே நான் என்ன பேசினேன் என்பதை பற்றி என்ன சொல்ல?" என கூறினார்.

    சட்டமன்றத்தில் பேசப்படுவது நேரலையாக ஒளிபரப்பப்படும் என்று தவெக கூறியிருந்தது. சொன்னது மாதிரியே அனைத்து நிகழ்ச்சிகளையும் நேரலையில் கொண்டு வந்துவிட்டது. இதைத்தான் எ.வ.வேலு பேசியிருக்கிறார். வேலுவின் வீடியோவை ஷேர் செய்து.. பார்த்தீங்களா தவெக சொன்னதை செய்துவிட்டது. தவெக ஆட்சியில் மாற்றத்தை உணர்ந்த எ.வ.வேலு என்று தகெவின் கூறி வருகின்றனர்.

    Advertisement

    சட்டமன்ற நேரலை விவகாரம்

    நாங்கள் ஆட்சிக்கு வந்தால், சட்டமன்றத்தின் நிகழ்ச்சிகளை ஒன்றுவிடாமல் லைவ் செய்வோம் என்று திமுக கடந்த 2021ல் வாக்குறுதி கொடுத்திருந்தது. இருப்பினும், இந்த வாக்குறுதியை 2021-2026 காலங்களில் திமுக நிறைவேற்றவில்லை. பேரவை நிகழ்வுகள் முழுமையாக நேரலை செய்யப்படும் என்று வாக்குறுதி கொடுக்கப்பட்டிருந்தாலும், ஆளுங்கட்சிக்கு விரும்பத்தக்க விவாதங்கள், பேச்சுகள் மட்டுமே எடிட் செய்யப்பட்டு ஒளிபரப்பப்பட்டன. இது எதிர்க்கட்சியினர் மத்தியில் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது.

    இதனை தொடர்ந்துதான் தவெக தனது தேர்தல் அறிக்கையில் சட்டமன்றம் லைவ் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தது. சட்டமன்றத்தின் முதல் கூட்டம் நடந்தபோது லைவ் பாதியில் கட் ஆனது. இது எதிர்க்கட்சிகள் மத்தியில் விமர்சனங்களை கிளப்பியிருந்தது. தவெக தனது வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று திமுக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்தன. இந்நிலையில், திமுக எம்எல்ஏ எ.வ.வேலு சட்டமன்ற லைவ் குறித்து பாசிட்டிவாக பேசியிருப்பது கவனம் பெற்றிருக்கிறது.

    English Summary

    E.V.Velu Hails Assembly Broadcast: In the past, one would only learn what leaders said in the Legislative Assembly by checking the newspaper the following day; however, proceedings are now broadcast live. DMK MLA E.V. Velu has praised this development.