சென்னை: 2016க்கு முன்னர் தயாரிக்கப்பட்ட வாகனங்களில் E20 பெட்ரோலை அடிப்பது, வாகனத்தின் மைலேஜை குறைக்கும். மட்டுமல்லாது மேலும் சில பிரச்சனைகளும் வரும். இதை சமாளிக்க என்னென்ன ஸ்பேர் பார்ட்ஸை மாற்றலாம் என்பதை பார்க்கலாம்.
கடந்த 2005ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் 2016 ஆண்டுவரை அறிமுகப்படுத்தப்பட்ட வாகனங்களில் E20 பெட்ரோலை பயன்படுத்துவதால் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே சில பாகங்களை மாற்ற வேண்டும்.
இந்த வாகனங்களில் உள்ள சில ரப்பர் பாகங்கள் மற்றும் கேஸ்கட்களை மாற்ற வேண்டும். இவற்றை மாற்றுவது பெரிய வேலை கிடையாது. வழக்கமாக பைக்கை சர்வீஸ் விடும்போது இவற்றை எளிதாக மாற்றிக்கொள்ள முடியும். இது தவிர கார்கள் மற்றும் பைக்குகளின் என்ஜின்களில் எந்த மாற்றத்தையும் செய்ய வேண்டியதில்லை என்று இந்திய ஆயில் கார்ப்ரேஷன் மற்றும் பிற நிறுவனங்கள் நடத்திய ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. அதேபோல பழைய வாகனங்களில் E20 பெட்ரோலை பயன்படுத்துவதால், வாகனங்களை ஸ்டார்ட் செய்வதில், அல்லது உலோக பாகங்களின் தன்மையில் அல்லது ஓட்டும்போது ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் இல்லை. E20 பெட்ரோலை பயன்படுத்துவதால் வாகன ஓட்டிகள் பயப்படும் மற்றொரு விஷயம் மைலேஜ் அடிவாங்கும் என்பதுதான். ஆனால் மைலேஜ் என்பது வெறுமென E20 பெட்ரோலால் மட்டும் குறையாது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன என்று ஆட்டோமொபைல் நிறுவனங்கள் கூறுகின்றன. சுருக்கமாக சொல்வதெனில், பழைய வாகனங்களை வைத்திப்பவர்கள், வாகனங்களின் ரப்பர் மற்றும் கேஸ்கட்களை மாற்றினால் மட்டும் போதுமானதாகும் என்று சொல்லப்படுகிறது. எத்தனால் ரப்பரின் கெட்டி தன்மையை குறைத்து.. சீக்கிரத்தில் நெகிழ்வடைய வைத்து அதை உடைக்க செய்யலாம் என்பதால்தான் மாற்ற சொல்கிறார்கள். ஈரான் போர் காரணமாக இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் வரத்து முன்பு போல இல்லை. மிக குறைந்த அளவுதான் எண்ணெய் வருகிறது. இதனால் விலை உயர்ந்திருக்கிறது. எனவே இதை சமாளிக்க சாதாரண பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனாலை கலந்து, E20 பெட்ரோலாக விற்க மத்திய அரசு முடிவெடுத்திருக்கிறது. ஆனால், இந்த E20 பெட்ரோல் அடித்தால் மைலேஜ் குறையும் என்பதும், மற்ற பாகங்கள் பாதிக்கப்படும் என்பதும் பொதுமக்களின் அச்சமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.E20 பெட்ரோல்