E20 பெட்ரோல்.. மத்திய அரசு சொல்வது பொய்யா? வெளிவந்த முக்கிய உண்மை!

  • சென்னை: E20 பெட்ரோல் என்று கூகுளில் தேடினால், ஏதோ சுற்றுச்சூழலுக்கு ஆபத்தே இல்லாத பெட்ரோல் என்றுதான் போட்டோக்கள் வருகின்றன. மத்திய அரசு கூட, காற்று மாசை குறைக்கவே E20 பெட்ரோலை கொண்டு வருகிறோம் என சொல்கிறது. ஆனால், E20 பெட்ரோலால்தான் பெரிய மாசு ஏற்படுவதாக சூழலியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.

    Advertisement

    அரபு நாடுகளில் இப்போ நிலைமை சரியில்லை. எனவே பெட்ரோல், டீசல் கிடைப்பது குறைந்திருக்கிறது. இதை காரணமாக சொல்லி ரேட் ஏற்றினால், மக்கள் போராட்டம் வெடிக்கும். இதை சமாளிக்கதான் E20 பெட்ரோல் அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும் இந்த காரணம் மட்டும் போதாது என்று.. சுற்றுச்சூழல் குறித்த காரணத்தையும் சேர்த்துக்கொண்டிருக்கிறது.

    Advertisement

    1. எண்ணெய் இறக்குமதி குறையும்
    2. சுற்றுச்சூழல் மாசு ஏற்படாது

    பாதி உண்மை

    E20 பெட்ரோலுக்காக மத்திய அரசு சொன்ன இந்த இரண்டு காரணங்களும் பாதி அளவுக்குதான் உண்மை என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். முதல் விஷயத்திற்கு வருவோம். பெட்ரோலில் எத்தனால் கலப்பதால், கச்சா எண்ணெய்யின் பயன்பாடு குறையும் என்று பாஜக தலைமையிலான மத்திய அரசு சொல்கிறது. ஆனால், E20 பெட்ரோல் அடித்தால் மைலேஜ் குறையும். இதனால் இன்னும் கூடுதலாக பெட்ரோல் அடிக்க வேண்டி வரும். அப்படி பார்த்தாலும் கச்சா எண்ணெய் தேவை அதிகரிக்கதான் செய்யும் என்கிறார்கள் வாகன பயன்பாட்டாளர்கள்.

    Advertisement

    சிறிய உதாரணம்

    இன்னும் புரியும்படி சொல்ல வேண்டும் எனில், மவுண்ட் ரோடு அண்ணா சிலை தொடங்கி தாம்பரம் வரை போக வேண்டும். சாதாரணமாக காருக்கு ரூ.200க்கு பெட்ரோல் அடித்தால் போதும்.. இந்த தூரத்தை கடந்துவிடலாம். ஆனால், E20 பெட்ரோல் எனில் ரூ.250க்கு அடிக்க வேண்டும். அதாவது கூடுதலாக பெட்ரோல் இருந்தால்தான் போக வேண்டிய இடத்திற்கு போய் சேர முடியும். அப்படியெனில் கச்சா எண்ணெய்யையும் கூடுதலாக வாங்க வேண்டி வரும். இருப்பினும், எத்தனால் 20% பயன்படுத்தப்படுவதால், கூடுதலாக வாங்கும் எண்ணெய்யில் 20% குறையும். இது மட்டும்தான் ஒரே பிளஸ் பாயிண்ட்.

    Advertisement

    காற்று மாசு

    இப்போ 2வது பாயிண்ட்டுக்கு வருவோம். காற்று மாசு குறைக்கவே E20 பெட்ரோல் பயன்படுத்தப்படுவதாக மத்திய அரசு கூறுகிறது. ஆனால், கரும்பு, தானியம் உள்ளிட்டவற்றிலிருந்து எத்தனாலை தயாரிப்பது குறித்து மத்திய அரசு பேச மறுக்கிறது. காரணம், எத்தனாலை தயாரிக்கும்போது அதிக அளவு நச்சு வாயுக்கள் வெளியாகிறது என்பதுதான்.

    உண்மை இதுதான்

    தானியங்களை நொதிக்க வைக்க வேண்டும். அப்போதுதான் எத்தனால் கிடைக்கும். இந்த செயல்முறையின்போதும், சுத்திகரிப்பின்போதும் அசிடால்டிஹைட், ஃபார்மால்டிஹைட், அக்ரோலின், ஹெக்ஸேன் போன்ற வாயுக்கள் வெளியாகும். இது மனிதர்களுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும். இது தவிர தோல் சார்ந்த அலர்ஜி, நுரையீரலில் கடுமையான எரிச்சல், வாந்தி மற்றும் மூச்சுத் திணறலை ஏற்படுத்தும்.

    Advertisement

    சுத்தமா செட் ஆகாது

    இதுபோக கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடு, சல்ஃபர் டை ஆக்சைடு, கார்பன் டை ஆக்சைடு, நுண்துகள்களும் காற்றில் கலக்கும். இதெல்லாம் கடுமையான சுற்றுச்சூழல் மாசை ஏற்படுத்தும். எனவேதான் பல நாடுகளில் எத்தனால் தயாரிக்கும் உற்பத்தி ஆலைகளை சிவப்பு வகை அதிக மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளாக வகைப்படுத்தப்பட்டிருக்கிறது.

    ஆக மொத்தத்தில்.. E20 பெட்ரோல் சுற்றுச்சூழலுக்கு நல்லது கிடையாது என்று அறிவியலாளர்கள் அடித்து சொல்கிறார்கள். பெட்ரோல் அடிக்கும் நீங்கள் என்ன சொல்கிறீர்கள் மக்களே!

    English Summary

    E20 Petrol: If you search for E20 gasoline on Google, you will get pictures of gasoline that is not harmful to the environment. Even the central government says that they are bringing in E20 petrol to reduce air pollution. But environmentalists have warned that E20 petrol is the biggest polluter.