மதுராந்தகம், தாராபுரம் சட்டசபை தொகுதிகளுக்கு அக்.6-ல் இடைத்தேர்தல்! அக்.9-ல் வாக்கு எண்ணிக்கை!

  • சென்னை: மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரு தொகுதிகளுக்கும் வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 9-ஆம் தேதி நடைபெறுகிறது.

    Advertisement

    தமிழகத்தில் காலியாக உள்ள 7 தொகுதிகளில் 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நீதிமன்ற வழக்கு காரணமாக மற்ற 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை. அது போல் புதுவையில் தட்டாஞ்சாவடிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் மரகதம் குமரவேல், சத்தியபாமா ஆகியோர் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இந்த நிலையில் அவர்கள் இருவரும் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இதனால் அந்த தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டுவிட்டது.

    • செப்டம்பர் 9ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடக்கம்
    • செப்டம்பர் 16ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள்
    • செப்டம்பர் 17ஆம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும்
    • 19ஆம் தேதி வேட்புமனுக்களை திரும்ப பெற கடைசி நாள்
    • அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல்
    • அக்டோபர் 9ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை

    தமிழகத்தில் திருச்சி கிழக்கு, மதுராந்தகம், தாராபுரம், பெருந்தறை, அம்பாசமுத்திரம், கரூர், விராலிமலை ஆகிய 7 தொகுதிகள் காலியாக உள்ளன. இதில் திருச்சி கிழக்கு, பெரம்பூரில் விஜய் வென்றதால் ஒரு தொகுதியை ராஜினாமா செய்தார்.

    Advertisement

    அது போல் அதிமுக சார்பில் போட்டியிட்ட மரகதம் குமரவேல், சத்தியபாமா, ஜெயக்குமார், இசக்கி சுப்பையா, எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர் ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ததால் இந்த 6 தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டது.

    திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதிக்கக் கோரி நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்த வழக்கறிஞரும் பாஜக நிர்வாகியுமான வெங்கடாஜலபதி பொது நல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி, நீதிபதி அருள் முருகன் ஆகியோர் அமர்வு 5 தொகுதிகளுக்கும் இடைதேர்தல் அறிவிக்க தடை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தடை வரும் செப்டம்பர் 24 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த தடையை நீக்கக் கோரி கரூர், விராலிமலை எம்.ஆர். விஜயபாஸ்கரும், சி.விஜயபாஸ்கரும் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனு மீது வரும் 24 ஆம் தேதி விசாரணை நடத்தப்படுகிறது. இந்த நிலையில் தற்போது இரு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படுகிறது.

    English Summary

    Election Commission announces byelection for Maduranthakam and Tharapuram on Oct 6 and vote counting on October 9.