பல கோடி வங்கி மோசடி.. சென்னையில் 5+ இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை!

  • சென்னை: சென்னையில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை அயனாவரம் மற்றும் திருமங்கலத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் குழுவினர் இன்று (மே 19) காலையிலேயே சோதனையை தொடங்கியுள்ளனர். பழைய கார் வாங்கி விற்கும் ஃபைனான்சியர் இல்லத்தில் சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    Advertisement

    பல கோடி ரூபாய் வங்கி கடன் மோசடி, சட்டவிரோத பணப்பரிவர்த்தனை உள்ளிட்ட புகார்களின் அடிப்படையில் பழைய கார் வாங்கி விற்கும் பைனான்சியர் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    Advertisement

    சென்னையில் 5க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் அயனாவரம், திருமங்கலம் பகுதிகளில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. பழைய கார்களை வாங்கி விற்கும் பைனான்சியர் வீட்டிலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

    பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) சுமார் ரூ.300 கோடிக்கும் மேல் போலி ஆவணங்கள் மூலம் கடன் பெற்று பெருமளவில் நிதி மோசடி செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், சென்னையில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் இறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    Advertisement

    சென்னை அயனாவரத்தில் குல்னாஸ் பேகம் என்ற பைனான்சியர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதேபோல திருமங்கலம் பிள்ளையார் கோவில் தெரு பகுதியில் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பு வளாகத்தில் லட்சுமணசாமி என்பவர் வீட்டிலும் அவரது மைத்துனர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வீட்டிலும் அமலாக்கத்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.

    English Summary

    Reports have emerged that Enforcement Directorate officials are conducting raids at more than five locations across Chennai. Teams of ED officials commenced these raids early this morning (May 19) in the Ayanavaram and Thirumangalam areas of Chennai.