மாமானார்கிட்ட கேளுங்க..மார்ட்டினை இழுத்து விட்ட உதயநிதி! அடுத்த நாளே ஆக்‌ஷனில் இறங்கிய அமலாக்கத்துறை

  • சென்னை: தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில் நேற்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா - எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி இடையே காரசார விவாதம் நடைபெற்றது. திமுக 900 கோடியை லாட்டரி நிறுவனத்திடம் வாங்கியதாக ஆதவ் அர்ஜுனா கூறிய நிலையில், 'உங்க மாமனாரிடம் கேளுங்க' என உதயநிதி பதிலடி கொடுத்தார். இந்த நிலையில் கோவையில் லாட்டரி அதிபர் சாண்டியாகோ மார்ட்டினுக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ள தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது.

    Advertisement

    பரபரப்புகளுக்கும் விறுவிறுப்புகளுக்கும் பஞ்சமில்லாமல் தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. விஜய் அரசின் முதல் பட்ஜெட் என்பதால் மக்களிடையேயும், அரசியல் களத்திலும் பெருத்த எதிர்பார்ப்பு இருந்தது.

    Advertisement

    சட்டசபையில் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு இருக்கும் நிலையில் பட்ஜெட் மீதான பொது விவாதம் நேற்று நடைபெற்றது. அப்போது அமைச்சர் ஆதவ் அர்ஜுனா - எதிர்க் கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

    சட்டசபை விவாதம்

    விவாதத்தில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, மதுவிலக்கு எங்கள் கொள்கை எனவும்.. திமுக எம்எல்ஏக்கள் எம்பிக்கள் சாராய ஆலை நடத்துகிறார்கள் என குற்றம் சாட்டினார். இதனால் கோபமடைந்த திமுக எம்எல்ஏக்கள், லாட்டரி லாட்டரி" என முழக்கமிட்டனர். இதனால் கோபமடைந்த ஆதவ்," லாட்டரி நிறுவனத்திடம் திமுக தலைவர் ஸ்டாலின் 900 கோடி வாங்கியது ஏன்? தைரியம் இருந்தால் சொல்லுங்கள்.. நான் எந்த தொழிலிலும் இல்லை.. எந்த நிறுவனமும் நடத்தவில்லை" என்றார்.

    Advertisement

    உதயநிதி ஸ்டாலின்

    அதற்கு பதிலடி கொடுத்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்," திமுக ஏன் லாட்டரி நிறுவனத்திடம் இருந்து பணம் வாங்கினார்கள் என்று அமைச்சர் கேட்கிறார். அதனை கொடுத்தது அவருடைய மாமனார் தான்.. ஏன் கொடுத்தார்? என்பதை உங்கள் மாமனாரிடம் கேட்டு விளக்கத்தைப் பெற்றுக் கொள்ளலாம்" என கூறினார்.

    ஆதவ் அர்ஜுனா

    அப்போது மீண்டும் பதில் அளித்த ஆதவ் அர்ஜுனா," ஏன் பணம் வாங்கினார் என அவர் அப்பாவுக்கு மட்டும்தான் தெரியும்! அவர் அப்பாவிடம் தான் ஏன் பணம் வாங்கினார்? என கேட்க வேண்டும். எனக்கு எதுவும் தெரியாது. அவங்க அப்பாவை இங்க காணோம். வீட்டுக்கு போய் அப்பாவிடம் கேளுங்க!" என பேசினார். இதனால் சட்டசபையில் பரபரப்பு ஏற்பட்டது.

    Advertisement

    அமலாக்கத்துறை

    இந்த நிலையில் சட்டசபையில் மாட்டின் தொடர்பாக மார்ட்டின் பேசிய அடுத்த நாளை அவருக்கு தொடர்புடைய இடங்களில் கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்திவரும் தகவல் வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில், லாட்டரி தொழிலதிபர் சாண்டியாகோ மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

    லாட்டரி மார்ட்டின்

    பணமோசடி தடுப்புச் சட்டம் கீழ், மார்ட்டினுக்கு சொந்தமான நிறுவனங்கள், அலுவலகங்கள் மற்றும் அவருடன் தொடர்புடைய நபர்களின் இடங்களில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. கோவை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள லாட்டரி மார்ட்டின் தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் அவருடன் தொடர்புடைய சில நபர்களின் வீடுகள், அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன மேலும், அவருடன் தொடர்புடைய அரசியல் கட்சி நிர்வாகிகளின் இடங்களிலும் சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    English Summary

    Enforcement Directorate searches premises linked to lottery businessman Santiago Martin in Coimbatore following a heated Tamil Nadu Assembly exchange.