காலையிலேயே பரபரத்த சென்னை.. ஒரே நேரத்தில் 2 இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு!

  • சென்னை: சென்னையில் 2 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக எழுந்த புகாரில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    Advertisement

    சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள நசீர் என்பவர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தற்போது சோதனை நடத்தி வருகின்றனர். குளோபல் மார்க்கெட்டிங் நிறுவனத்தை நடத்தி வரும் நசீர் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு நடந்து வருகின்றனர்.

    Advertisement

    மேலும், டிராவல்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஆஸ்மி என்பவர் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலையில் உள்ள ஆஸ்மி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தற்போது சோதனை நடத்தி வருகின்றனர்.

    துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை இந்த 2 இடங்களில் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகிறது. சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக எழுந்த புகாரில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சோதனைக்குப் பிறகே முழுமையான தகவல்கள் தெரியவரும்.

    English Summary

    Enforcement Directorate (ED) officials are conducting raids at two locations in Chennai today. Reports indicate that the raids are being carried out in connection with a complaint regarding illegal money transactions.