எடப்பாடி உருவாக்கிய வார் ரூம்.. கதி கலங்கும் SP வேலுமணி டீம்.. அதிமுக மோதலில் ட்விஸ்ட்

  • சென்னை: தமிழக அரசியல் களம் சட்டமன்ற தேர்தலில் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தவெக பிற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளது. அதிமுகவில் தொடர்ந்து விரிசல் ஏற்பட்டு வருகிறது. எடப்பாடி பழனிசாமி, வேலுமணி அணிக்குள் மோதல் ஏற்பட்டு வருகிறது. பொதுக்குழுவை கூட்டுவதற்கு வேலுமணி முயற்சி செய்து வருகிறார். வேலுமணி அணிக்கு எதிராக எடப்பாடி பிரத்யேக வார் ரூம் அமைத்து எதிர் அரசியலை தீவிரப்படுத்தியுள்ளாராம்.

    Advertisement

    தமிழக அரசியல் களம் சட்டமன்ற தேர்தலில் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. சட்டமன்ற தேர்தலில் அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் உள்ளிட்டோர் திரண்டுள்ளனர். திமுகவுடன் கூட்டணி அமைத்து முதலமைச்சராக எடப்பாடி முயற்சி செய்ததாக வேலுமணி அணி குற்றம் சாட்டியது.

    Advertisement

    அதிமுக மோதல்

    இதனால் வேலுமணி மற்றும் சண்முகம் தலைமையிலான முன்னாள் அமைச்சர்கள் தவெகவுக்கு ஆதரவளித்தனர். எடப்பாடி ஆதரவாளர்கள் இபிஎஸ்ஸை அதிமுக சட்டமன்ற குழு தலைவராகவும், சண்முகம் அணியில் வேலுமணி அதிமுக சட்டமன்ற குழு தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டனர். சட்டமன்றத்தில் தவெக ஆட்சி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி அணி எதிராகவும், வேலுமணி அணி ஆதரவாகவும் வாக்களித்தனர்.

    இந்த மோதல் காரணமாக அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழுவை கூட்டி முக்கிய முடிவு எடுக்க வேண்டும் என்று வேலுமணி தரப்பு கோரியுள்ளனர். இதற்காக அதிமுக நிர்வாகிகளிடம் கையெழுத்து வாங்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். இது எடப்பாடி பழனிசாமிக்கு கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுச்செயலாளர்தான் சட்டமன்ற குழு தலைவரை தேர்வு செய்ய முடியும் என்று கூறியுள்ளார்.

    Advertisement

    எடப்பாடியின் வார் ரூம்

    வேலுமணி உள்பட தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்த எம்எல்ஏக்களின் பதவிகளை பறிப்பதற்காக சட்டப் போராட்டம் நடத்தும் வேலையில் எடப்பாடி இறங்கியுள்ளார். சமூகவலைதளங்களிலும் வேலுமணி டீமுக்கு எதிராக தீவிரமாக களமாட அவர் உத்தரவிட்டுள்ளார். இதற்காக ராஜ்சத்யன் கண்காணிப்பில் பிரத்யேக வார் ரூம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 100க்கும் மேற்பட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

    வேலுமணி மற்றும் சண்முகம் அணியினருக்கு எதிரான கருத்துகளையும், எடப்பாடி பற்றிய பாசிடிவான கருத்துகளை பரப்புவதும் வார் ரூமின் முக்கியமான பணி. எடப்பாடி தான் அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் என்கிற தோற்றத்தை உருவாக்கி, வேலுமணி ஆதரவாளர்களையும் தங்கள் பக்கம் இழுப்பது இதன் முக்கிய நோக்கம் என்கிற அதிமுக வட்டாரம்.

    English Summary

    Edappadi Palanisamy: ADMK Internel politics fight getting big. Edappadi Palanisamy creates war room against SP Velumani team made trouble.