செங்கல்பட்டு: மதுராந்கம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தவெக, திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட்கள், நாம் தமிழர் என 5 முனை போட்டி நிலவுகிறது. தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் தவெகவை கடுமையாக விமர்சிக்கின்றன. இந்த 2 தொகுதிகளிலும் முன்பு அதிமுக வெற்றி பெற்றிருந்தது. தவெகவை தோற்கடிப்பதை அதிமுக கௌரவ பிரச்சனையாக பார்க்கிறது. இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி எம்ஜிஆர் வீட்டிற்கே வந்ததில்லை என அவரின் பேரன் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.
மதுராந்தகத்தில் நடைபெற்ற தவெக பிரச்சார கூட்டத்தில் எம்ஜிஆர் பேரன் ராமச்சந்திரன் பேசுகையில், "ஒரு குட்டி கதை சொல்கிறேன். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி எங்கு பார்த்தாலும் எம்ஜிஆர் ஐயா பெயரை சொல்லி கொண்டிருக்கிறார். அதில் உள்ள கட்சிக்காரர்களும் எம்ஜிஆர் பெயரையே உச்சரிக்கிறார்கள். பாக்கெட்டில் எம்ஜிஆர், ஜெயலலிதா புகைப்படங்களை வைக்கிறார்கள். ஆனால் எடப்பாடி ஐயா இதுவரை எம்ஜிஆர் வீட்டிற்கு வந்ததில்லை. எடப்பாடியை நாங்கள் சந்திக்க சென்றாலும் பார்க்க முடியாது.
குளிக்கிறார், பாத்ரூமில் இருக்கிறார் என காவலர்கள் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு காரணம் சொல்வார்கள். அமைச்சர்கள் எல்லாம் முதலமைச்சரை ஈஸியாக பார்க்க முடியும் என்பார்கள். அதிமுகவில் அது சாத்தியமில்லை. சாதாரண தொண்டர்களுக்கு மட்டுமல்ல எனக்கே அது சாத்தியமில்லை. எம்ஜிஆர் வீட்டில் இருந்து வரும் உறவினர்களையே அவர் சந்திக்க மாட்டார். இதுதான் உண்மை. நான் அதிமுகவில் மாநில இளைஞரணி இணைச் செயலாளராக இருந்தேன். ஆனால் அந்த கட்சியில் இருந்து வெளியேறும்போது ஒரு ராஜினாமா கடிதம் கொடுத்தேன். அதை நம் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்திடமும் வழங்கியுள்ளேன். அந்த கடிதத்தில் உண்மைகள் நிறைய இருக்கும். மிகவும் ஆக்ரோஷமாக இருக்கும். என்னை அந்தக் கட்சியில் சும்மா தான் வைத்திருந்தனர். எம்ஜிஆர் பேரனுக்கு ஏதாவது செய்ய வேண்டுமென டம்மி பொறுப்பு கொடுத்தனர். அது எதற்குமே பயன்படாது. இப்போது தவெகவுக்கு வந்துள்ளேன். எப்போதுமே அண்ணனுக்கு கீழே வரும்போது அவர் உரிய அங்கீகாரம் கொடுப்பார். அது எல்லாருக்குமே தெரியும். மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமாரவேல் நின்றுள்ளார். இந்த தேர்தலில் இரண்டு கட்சிக்கு இடையே எல்லாம் போட்டி இல்லை. ஒரே கட்சி தான். அது தவெக மட்டும் தான். தேர்தலில் எளிதாக வெற்றி பெறலாம். இந்தமுறையும் நாம் நிரூபிக்கிறோம். தவெக அமைச்சர்கள் எல்லாரும் எம்ஜிஆர் தோட்டத்திற்கு வந்து விருந்து சாப்பிட வேண்டும்" என்றார்.எம்ஜிஆர் உறவினர்களுக்கே
தவெக வெற்றி