விஜய் ஆட்சியில் போலீஸ் உயிருக்கே உத்தரவாதம் இல்லை.. திறமையற்ற அரசாங்கம்! எடப்பாடி சரமாரி அட்டாக்

  • சென்னை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டு போய்விட்டது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கூறியுள்ளார். நேற்று தீபாவளி நாளி 8 கொலைகள் நடந்துள்ளதாகவும் போதைப்பொருள் புழக்கத்தை இந்த அரசு தடுக்க நேரிட்டதால் தான் இப்படி நடக்கிறது எனவும், விஜய் ஆட்சியில் காவல்துறை அதிகாரிகளால் தங்கள் கடமையை கூட செய்ய முடியவில்லை. கடமையை செய்ய முற்பட்டால் அவர் உயிருக்கு உத்தரவாதம் இல்லை எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.

    Advertisement

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமடைந்து உள்ளதாகவும், காவல்துறை மீது ரவுடிகள், சமூக விரோதிகளுக்கு பயம் இல்லாத அளவுக்கு தான் ஆட்சி நடந்து வருவதாகவும் எதிர்க்கட்சிகளும், பொதுமக்களும் தொடர் குற்றச்சாட்டுகளை வைத்து வரும் நிலையில், நேற்று தீபாவளி நாள் அதுவுமாக 11 கொலைகள் அரங்கேறி இருப்பதாக கூறப்படுகிறது. இது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

    இந்நிலையில் முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, விஜய் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்கெட்டுவிட்டதாகவும், காவல்துறை அதிகாரிகளால் தங்கள் கடமையை கூட செய்ய முடியவில்லை எனவும் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் நேற்று ஒரே நாளில் 8 கொலைகள் அரங்கேறி இருப்பதற்கு போதைப்பொருள் நடமாட்டம் அதிகம் இருப்பதே காரணம் எனவும் கூறியுள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பின் போது எடப்பாடி கூறியதாவது:-

    சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டு போய்விட்டது. தமிழகத்தில் நேற்று மட்டும் 8 கொலைகள் நடந்து இருக்கிறது. தொலைக்காட்சிகளில் வந்த செய்தி, நேற்று ஒரே நாளில் மட்டும் 8 கொலைகள் அரங்கேறி இருக்கின்றன. இந்த ஆட்சி அமைந்த பிறகு 100-க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்து இருக்கின்றன. இதற்கு காரணம் போதைப்பொருள் விற்பனை அதிகரித்து இருக்கிறது.

    Advertisement

    போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துவிட்டது

    போதைப்பொருள் பரவலை தடுக்க இந்த ஆட்சிக்கு திராணி இல்லை, இவரது கட்சியை சேர்ந்தவர்கள் பலரே போதைப்பொருளை விற்பனை செய்து வருகிறார்கள். போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு இருக்கிறார்கள். ஒரு கட்டுப்பாடு இல்லாத அரசாங்கம், ஒரு திறமையற்ற அரசாங்கம் தான் நடந்து வருகிறது. சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டு போய்விட்டது.

    இந்த போதைப்பொருள் பழக்கம் அதிகரித்ததால் தான், குறிப்பாக கஞ்சா போதைப்பொருள் அதிகரித்ததன் காரணமாகத் தான் சிறுவர்கள், மாணவர்கள், பொதுமக்கள் அடியோடு பாதிக்கப்படுகின்றார்கள். இந்த போதைப்பொருள் பயன்பாட்டால் அதில் இருந்து மீட்டெடுக்க முடியவில்லை. எல்லாரும் இந்த போதைக்கு அடிமையாகிவிட்டார்கள். அதனால் தான் கொலை, கொள்ளை, திருட்டு எல்லாம் அதிகமாக நடக்குது இந்த ஆட்சியில்.

    Advertisement

    பத்திரிகையாளரை சந்திக்க ஏன் தயக்கம்?

    எந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலும் சரி பத்திரிகையாளர் சந்திப்பே கிடையாது. பத்திரிகையாளர்களை சந்தித்தால் தானே அவர்கள் பல்வேறு கேள்விகள் எழுப்புவார்கள். மக்களுடைய அடிப்படை பிரச்சினையை சொல்வதில் ஊடகத்தின் பங்கு நிறைந்தது. அதற்கு கூட பத்திரிகையாளரை சந்திக்க அவருக்கு ஏன் தயக்கம். அப்படி பேசும்போது தான் நாட்டு நிலவரம் என்ன என்று தெரியும். அவர்கள் கேட்கின்ற கேள்விக்கு, என்ன மாதிரியான பதிலை அவர் சொல்கிறார் என்பதை வைத்து மக்கள் இந்த ஆட்சி எப்படி செயல்படுகிறது என தெரிந்துகொள்வார்கள்.

    காவல்துறையினரால் கடமையை செய்ய முடியவில்லை

    ஆனால் ஊடகத்தையும், பத்திரிகையும் சந்தித்ததாக தகவல் இல்லை. இந்த ஆட்சியில் போலீஸ்க்கு பாதுகாப்பு இல்லை. உங்கள் பத்திரிகையாளருக்கும் பாதுகாப்பு இல்லை. உங்களுக்கே தெரியும். முக்கிய செய்தியை எடுத்து வெளியிட்டால் போதும் உடனே மிரட்டல் வருகிறது. கைது செய்யும் அளவுக்கு கூட போய்விடுவார்கள். நிருபர்கள் உண்மை செய்தி வெளியிட்டால் உடனே மிரட்டல் வருகிறது. காவல்துறை அதிகாரிகளால் தங்கள் கடமையை கூட செய்ய முடியவில்லை. அப்படி அதை மீறி கடமையை செய்ய முற்பட்டால் அவர் உயிருக்கு உத்தரவாதம் இல்லை இந்த ஆட்சியில்.. என்று பேசினார்.

    English Summary

    Edappadi Palaniswami, AIADMK General Secretary has stated that law and order in Tamil Nadu has completely collapsed. He alleged that eight murders took place yesterday, on the day of Deepavali, and attributed this to the government's failure to curb the circulation of narcotics. He further claimed that under the current administration, police officers are unable to perform their duties, adding that if an officer attempts to carry out their responsibilities, their very life is at risk.