உங்கள எப்படி நம்புகிறது? எஸ்பி வேலுமணியை நாடிய தவெக.. அதிமுக எம்எல்ஏக்களுடன் நடக்கும் பேச்சுவார்த்தை

  • சென்னை: அதிமுகவின் அதிருப்தி தலைவர்களான எஸ்பி வேலுமணி மற்றும் சிவி சண்முகம் தரப்பு பல்வேறு எம்எல்ஏ-க்களை தங்கள் பக்கம் இழுக்க முயற்சித்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது. குறிப்பாக 3ல் 2 பங்கு எம்எல்ஏ-க்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் இருப்பதால், எடப்பாடி பழனிசாமி தரப்பில் கொஞ்சம் அதிர்ச்சி அடைந்துள்ளது.

    Advertisement

    தமிழ்நாட்டில் 108 இடங்களில் வென்ற தவெக, காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஎம், முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை அமைத்துள்ளது. தற்போது மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதியில் தவெக வென்றிருப்பதால், தவெக எம்எல்ஏ-க்களின் எண்ணிக்கை 109ஆக அதிகரித்துள்ளது. தவெக ஆட்சி அமைத்து நவம்பர் 13ஆம் தேதியுடன் 6 மாதங்கள் நிறைவடைகிறது.

    Advertisement

    இதனால் தவெக மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர திமுக மற்றும் அதிமுக முயற்சிப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றன. இதனிடையே இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெக ஆட்சி மீது கடுமையான அதிருப்தியில் இருக்கின்றன. குறிப்பாக தலைமைச் செயலகம் கட்டும் விவகாரத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் தீவிர போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

    ஒருவேளை இரு கம்யூனிஸ்ட் கட்சிகளின் 4 எம்எல்ஏ-க்களும் தவெகவுக்கு எதிராக வாக்களித்தால், அது ஆட்சிக்கு எதிரான மனநிலையை வெளிப்படுத்திவிடும். அதேபோல் கூட்டணியில் இருக்கும் எந்தக் கட்சியாவது காலை வாரினால் சிக்கல் தான். இதனால் முன்னெச்சரிக்கையாக அதிமுகவின் அதிருப்தி தலைவர்களான சிவி சண்முகம் மற்றும் எஸ்பி வேலுமணி தரப்புடன் தவெக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

    Advertisement

    எஸ்பி வேலுமணி தரப்பு முதலில் கடந்த முறையே உங்களை நம்பி ஆதரவாக வாக்களித்த போதே, நடுத்தெருவில் விட்டு சென்றுவிட்டீர்கள். மீண்டும் எப்படி நம்புவது என்று கேட்டிருக்கிறார். அதற்கு இம்முறை அந்த மாதிரி எதுவும் நடக்காது. தலைமையிடம் பேசிவிட்டோம் என்று கூறியதாக பேச்சுகள் அடிபடுகின்றன.

    இதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியுடன் சமாதான போக்குடன் செயல்படுவதாக எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் காட்டி கொண்டாலும், திரை மறைவில் அதிமுக எம்எல்ஏ-க்களுடன் பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றனர். அதிலும் பொருளாதார சிக்கலில் இருக்கும் அதிமுக எம்எல்ஏ-க்களை குறி வைத்து காய் நகர்த்தி வருகின்றனர்.

    Advertisement

    இந்த விவகாரம் எடப்பாடி பழனிசாமியின் காதுகளுக்கு சென்று இருக்கிறது. இதனால் எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் இருவரையும் கட்சியில் இருந்து நீக்கிவிடலாமா என்று ஆலோசித்திருக்கிறார். ஆனால் அப்படி செய்தால், இருவரும் எம்எல்ஏ பதவியுடன் தவெகவில் இணைந்துவிடுவார்கள். இதனால் எடப்பாடி பழனிசாமியின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

    English Summary

    Edappadi Palaniswami Camp Rattled as Dissident AIADMK Leaders Move to Rally Two-Thirds Majority of MLAs