விஜய் ஆட்சிக்கு வந்ததும் லியோ தாஸ்ஆக நினைக்கும் குற்றவாளிகள்.. எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

  • சென்னை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு, சமூக நீதி சந்தி சிரிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். மேலும் தமிழ்நாட்டில் தற்போது நடக்கும் கொலைகளை எல்லாம் பார்க்கும் போது, முதல்வர் விஜய் ஆட்சிக்கு வந்ததும் குற்றவாளிகள் எல்லாம் தங்களை 'லியோ தாஸ்'ஆக நினைத்துக் கொண்டு வலம் வருகின்றனரோ? என்று சந்தேகிக்க தான் தோன்றுவதாக அவர் கூறியுள்ளார்.

    Advertisement

    தமிழகத்தில் தவெக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே சட்டம் ஒழுங்கு சரியில்லை என்ற குற்றச்சாட்டு நிலவி வருகிறது. கொலைகள், கொள்ளைகள் நடப்பதாகவும், பெண்கள், குழந்தைகளுக்கே பாதுகாப்பு இல்லை என்று நினைக்கும் அளவுக்கு தவெக ஆட்சி இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர்.

    Advertisement

    எடப்பாடி விமர்சனம்

    இப்படி இருக்கையில் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வீடு புகுந்து தாயை கொன்று மகளை ஒருவர் கடத்தி சென்ற சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில நாட்களில் மட்டும் நடந்த நிகழ்வுகளை சுட்டிக்காட்டி தவெக அரசை விமசித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

    சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக்கிறது

    தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கும் சமூக நீதியும் சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது என்பதையே சமீபத்திய செய்திகள் உணர்த்துகின்றன. சாத்தான்குளம் அருகே பெண் ஒருவரை வீடு புகுந்து மர்மநபர் வெட்டிக் கொலை செய்துள்ளதாகவும், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே Lift கேட்டு சென்ற சிறுவன் மாயமானதாகவும், கோவையில் அரசு உதவி பெறும் பள்ளியில் ஜாதிய பாகுபாட்டால் மாணவன் உயிரை மாய்த்துக் கொண்டதாகவும் வருகின்ற செய்திகள் மிகுந்த அதிர்ச்சி அளிக்கின்றன.

    Advertisement
    எடப்பாடி பழனிசாமி கிட்ட 3 எழுத்து பிரபலம் இணைகிறாரா? அப்போ விஜய் ஓட்டு உடைகிறதா?

    லியோ தாஸாக நினைத்து..

    தமிழ்நாட்டில் நடக்கும் கொலைகளை எல்லாம் பார்த்தால், முதல்வர் விஜய் ஆட்சிக்கு வந்ததும் குற்றவாளிகள் எல்லாம் தங்களை "#LeoDas"-ஆக நினைத்துக் கொண்டு வலம் வருகின்றனரோ என்று தான் சந்தேகிக்கத் தோன்றுகிறது. கொள்கை (?), கூட்டணி என எல்லாவற்றிலும் "சமூகநீதி" என்று பெயர் வைக்கும் இந்த ரீல்ஸ் முதல்வரின் ஆட்சியில் ஜாதிய பாகுபாட்டால் ஒரு மாணவன் உயிரிழந்து இருப்பதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? மேடைகளில் பேசும் டயலாக் எல்லாம் இப்போது எங்கே போனது?

    Advertisement

    முதல்வருக்கு கொஞ்சமாவது புரியுமா?

    ஸ்ரீபெரும்புதூர், செஞ்சி சிறுமிகளைத் தொடர்ந்து, ஊத்தங்கரை சிறுவனைக் காணவில்லை. ஸ்ரீபெரும்புதூர் சிறுமி மீட்கப்பட்ட நிலையில், செஞ்சி சிறுமியை இன்னும் இந்த அரசு கண்டுபிடிக்கவில்லை. தொடர்ந்து சிறுவர்கள் காணாமல் போவது பெற்றோர்களை என்ன வேதனைக்கு உள்ளாக்கும் என்பதெல்லாம் இந்த முதல்வருக்கு கொஞ்சமாவது புரியுமா?

    எடப்பாடியே திருமாவளவனை முதல்வராக்க முயற்சித்தார்.. அதிமுக கேம் என்ன.. டிடிவி தினகரன் பரபரப்பு தகவல்

    இது ஒரு Pattern-ஆக நடப்பது போன்ற சந்தேகம் கூட இந்த அரசுக்கு வரவில்லையா? சாத்தான்குளம் மற்றும் கோவை வழக்குகளில் தொடர்புள்ளோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கவும், மாயமான சிறுவர்களை மீட்டு, இந்த விவகாரத்தை தீவிரமாக அனைத்து கோணங்களிலும் விசாரிக்க வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன். என்று கூறியுள்ளார்.

    English Summary

    Edappadi Palaniswami: AIADMK General Secretary Edappadi K. Palaniswami criticized the Vijay-led Tamil Nadu government, alleging that law and order and social justice have deteriorated in the state. Referring to recent murders, he questioned whether criminals were acting like ‘Leo Das’ since Vijay became Chief Minister.