காவிரி நீர் பிரச்சனையில் தவெக அரசுக்கு அனுபவம் இல்லை.. எடப்பாடி பழனிசாமி சாடல்

  • சென்னை: காவிரி மற்றும் மேகதாது விவகாரத்தில் தவெக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட நடத்தாதது வேதனை அளிப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

    Advertisement

    சென்னை கிண்டியில் வைக்கப்பட்டுள்ள தீரன் சின்னமலை உருவப் படத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினா். அதைத்தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    Advertisement

    தீரன் சின்னமலையின் நினைவு நாளில் அவரது வீரத்தையும், தியாகத்தையும் போற்றி வணங்குகிறேன். காவிரி நதி நீரைப் பெறுவதற்கு தவெக அரசாங்கம் என்ன நடவடிக்கை இதுவரை எடுத்தது என்று தெரியவில்லை. அதிமுகவில் இருந்து பல அரசியல் கட்சித் தலைவர்கள் காவிரி நதி நீர்ப் பிரச்சனை மற்றும் மேகதாது அணை கட்டுவது குறித்து கர்நாடக அரசு எழுப்பும் பிரச்சனைகளுக்கு குரல் எழுப்பியுள்ளனர்.

    தமிழகத்தின் நிலைமையை அரசியல் கட்சித் தலைவர்களையும் அழைத்துப் பேசி கருத்துகள் கேட்கப்பட்டுள்ளன. அதோடு டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு முக்கிய விவசாயப் பிரதிநிதிகளின் கருத்துகளைக் கேட்டு அதற்குப் பிறகு மூத்த சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை கேட்டு, அதிமுக சார்பில் ஏற்கனவே நான் ஊடகம், பத்திரிகை வாயிலாக அறிக்கை வெளியிட்டேன்.

    Advertisement

    தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் பெரும்பாலனோர் அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர். அனைத்து விவசாயப் பெருமக்களையும் அழைத்து கருத்துகளைக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். ஆனால், தவெக அரசு எதைப் பற்றியும் சிந்திக்கவும் இல்லை. கவலைப்படவும் இல்லை. அதனை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவும் இல்லை என்பது வேதனையை அளிக்கிறது.

    காவிரி பிரச்சனை, மேகதாது பிரச்சனை வரும்போது அதிமுக ஆட்சியிலும், திமுக ஆட்சியிலும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தினர், விவசாயப் பெருமக்களின் கருத்துகளைக் கேட்டு, சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து சட்ட ரீதியாக உச்சநீதிமன்றத்தில் சந்தித்து காவிரி நதி நீர் பிரச்சனைக்கு ஒரு நிரந்த தீர்வை அதிமுக பெற்றோம். அந்த தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசாக இந்த தவெக அரசு இருப்பது வேதனை அளிக்கிறது.

    Advertisement

    கர்நாடக அரசாங்கம் அங்குள்ள அரசியல் கட்சித் தலைவர்களையும், விவசாயிகளையும் மதிக்கின்றது. ஆனால், தமிழக அரசு செயல்படுகிறதா என்ற கேள்விக்குறியாக இருக்கிறது. தவெக அரசாங்கத்திற்கு எந்த அனுபவமும் கிடையாது. கட்சி ஆரம்பித்தே இரண்டே கால் வருடம் தான் ஆகிறது. காவிரி நதி நீர்ப் பிரச்சனை குறித்து அவர்களுக்கு முழுமையாகத் தெரியாது என்று கூறினார்.

    English Summary

    AIADMK General Secretary Edappadi Palaniswami accused the TVK government of failing to take effective steps on the Cauvery and Mekedatu issues.