தாராபுரம், பெருந்துறை.. 2 தொகுதியிலும் இரட்டை இலை வெல்லும்.. நம்பிக்கையோடு இருக்கும் எடப்பாடி!

  • சென்னை: சட்டசபைத் தேர்தலில் பெருந்துறை மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளிலும் அதிமுக கட்டாயம் வெற்றி பெறும் என்று எடப்பாடி பழனிசாமி நம்பிக்கையுடன் பேசி வருவதாக தெரிய வந்துள்ளது. இந்த 2 தொகுதிகளில் மீண்டும் வெல்வதன் மூலமாக லோக்சபா தேர்தலில் எளிதாக அதிமுக தலைமையில் மீண்டும் அதே கூட்டணியை உருவாக்க முடியும் என்றும் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

    Advertisement

    அதிமுகவில் இருந்து சிட்டிங் எம்எல்ஏ-க்கள், முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் சாரை சாரையாக தவெக பக்கம் நகர்ந்து வருகின்றனர். இதனால் நகரங்களில் மட்டுமல்லாமல் கிராமப்புறங்களிலும் அதிமுகவின் கட்டமைப்பு காலியாகி வருவதாக அக்கட்சியினர் புலம்பத் தொடங்கியுள்ளனர். இதனால் மாவட்ட வாரியாக எடப்பாடி பழனிசாமி ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகிறார்.

    Advertisement

    இந்த ஆலோசனை கூட்டங்களில் நிர்வாகிகள் விலகல் தொடர்பாகவே அதிகம் பேசப்பட்டு வருகிறது. அதேபோல் அதிருப்தியில் இருக்கும் எஸ்பி வேலுமணி, கேபி அன்பழகன், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோரை அழைத்து பேசி பொறுப்பை மீண்டும் கொடுங்கள் என்றும் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    அதேபோல் டெல்டா மாவட்ட நிர்வாகிகள் டிடிவி தினகரனை கட்சியில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இன்னொரு பக்கம் இடைத்தேர்தல் தொடர்பாகவும் சில கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டிருக்கிறது. அதிமுகவின் 6 சிட்டிங் எம்எல்ஏ-க்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் ஐக்கியமாகிவிட்டனர்.

    Advertisement

    இதனால் விராலிமலை, கரூர், பெருந்துறை, தாராபுரம், அம்பாசமுத்திரம், மதுராந்தகம் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதியில் இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. இந்த இடைத்தேர்தலில் அதிமுக மீண்டும் 4 தொகுதிகளையாவது தக்க வைக்க வேண்டும் என்பதே அக்கட்சி நிர்வாகிகளின் பேச்சாக உள்ளது. அதேபோல் எடப்பாடி பழனிசாமியும் இடைத்தேர்தலில் ஒரு கண் வைத்திருப்பதாக தெரிகிறது.

    விராலிமலை மற்றும் கரூர் ஆகிய தொகுதிகளில் அதிமுக மீண்டும் வெல்வது கடினம். அதேபோல் அம்பாசமுத்திரத்தில் திமுக தீவிரமாக பணியாற்ற தொடங்கிவிட்டது. இதனால் எடப்பாடி பழனிசாமி தாராபுரம் மற்றும் பெருந்துறை ஆகிய 2 தொகுதிகளில் கண் வைத்துள்ளார். இந்த 2 தொகுதிகளிலும் அதிமுக சுமார் 9 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றது.

    Advertisement

    இரண்டுமே ஈரோடு மாவட்டத்தில் வருவதால், சமூக ரீதியிலான செல்வாக்கு அதிமுகவுக்கு அதிகம். இதனால் எடப்பாடி பழனிசாமி நிச்சயமாக இந்த 2 தொகுதிகளிலும் அதிமுக வெல்லும் என்று எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களிடம் நம்பிக்கையாக கூறி வருகிறார். இதில் வென்றாலே, லோக்சபா தேர்தலின் போது பாஜக மூலமாக சட்டசபைத் தேர்தல் கூட்டணியை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று நம்புகிறாராம்.

    English Summary

    Edappadi Palaniswami: Edappadi Palaniswami confidently saying Perundurai and Dharapuram are Guaranteed Wins for AIADMK to the cadres