இறங்கி வந்துட்டாரு எடப்பாடி.. ஒன்று சேரும் ரத்தத்தின் ரத்தங்கள்! மீண்டும் பலம் பெறும் அதிமுக! பரபர!

  • சென்னை: பிரிந்து சென்றவர்களை ஒன்று சேர்க்கவும், தன் மீது அதிருப்தியில் இருப்பவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் எடப்பாடி பழனிச்சாமி தயாராகி வருகிறார் என்ற தகவல் அதிமுகவில் புதிய பரபரப்பை கிளப்பி இருக்கிறது. உள்ளாட்சித் தேர்தலில் ஓரளவு வெற்றியை பெற வேண்டும் என்றால் அதிமுக ஒன்றிணை வேண்டியது அவசியம் என ஒரு சில சீனியர்கள் எடப்பாடி பழனிச்சாமிடம் வலியுறுத்தியதாகவும் இதையடுத்தே அவர் இந்த முடிவுக்கு வந்திருப்பதாக சொல்கின்றார்.

    Advertisement

    2026 தமிழக சட்டசபை தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்திருக்கிறது. காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

    Advertisement

    இது ஒருபுறம் இருக்க அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமியே தோல்விக்கு காரணம் என கைகாட்டி விட்டு பலரும் தற்போது தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளனர். மரகதம் குமரவேல், இசக்கி சுப்பையா, எம் ஆர் விஜயபாஸ்கர், சி விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜு, வெள்ளமண்டி நடராஜன் என முக்கிய முகங்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருக்கின்றனர்.

    அதிமுக

    இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சர்கள் ஆகிவிடலாம் என்ற ஆசையில் தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளனர் சிலர். அதில் மரகதம் குமரவேல், விஜயபாஸ்கர்களுக்கு பதவி வழங்கியிருக்கிறார். தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான விஜய் விரைவில் நீதிமன்றத்தில் இடைத்தேர்தலுக்கு அனுமதி பெற்று தேர்தலை சந்திக்க அந்த மாஜிக்கள் தயாராகி வருவதாக சொல்லப்படுகிறது.

    Advertisement

    எஸ்.பி.வேலுமணி

    இது ஒரு புறம் இருக்க வழக்கமான பரபரப்புடன் தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. வழக்கமாக பட்ஜெட் கூட்டத் தொடர் நடக்கும்போது அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த முறை கூட்டத்தை கூட்டவில்லை. எஸ்.பி வேலுமணி தரப்புக்கு 20 எம்எல்ஏக்கள் வரை ஆதரவாக செயல்படும் நிலையில் கூட்டத்தை கூட்டினால் அவர்கள் வரமாட்டார்கள்.

    எடப்பாடி பழனிச்சாமி

    இதனால் அதிமுக பிளவுபட்டது வெட்ட வெளிச்சமாக தெரிந்துவிடும் என்பதால்தான் எடப்பாடி பழனிச்சாமி கூட்டத்தை கூட்டவில்லை என்கின்றனர். அதே நேரத்தில் செல்போன் மூலம் எம்எல்ஏக்களை தொடர்பு கொண்டு எப்படி பேச வேண்டும் என அறிவுறுத்தியதாக சொல்லப்படுகிறது. தற்போதைய பட்ஜெட் கூட்டத்தொடரில் சிவி சண்முகம் எஸ்பி வேலுமணி போன்றோர் தமிழக வெற்றிக்கழக அரசுக்கு ஆதரவாகவே பேசி வருகின்றனர்.

    Advertisement

    அதிமுக ஒன்றிணைப்பு

    மேலும் சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமியை கண்டு கொள்வதில்லை. இந்த நிலையில் இந்த நிலை தொடர்ந்தால் அவர்களை கட்சியை விட்டு நீக்கலாமா என்ற ஆலோசனையையும் எம்எல்ஏக்களிடம் எடப்பாடி பழனிச்சாமி கேட்டதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையே அதிமுக வட்டாரங்களில் இன்னொரு தகவல் உலாவுகிறது. அது அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைப்பது.

    சசிகலா

    ஏற்கனவே டிடிவி தினகரன் தென் மாவட்ட நிர்வாகிகளுடன் பேசி வரும் நிலையில் அக்கட்சி பலவீனமடையும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் சசிகலா உள்ளிட்டோரையும் ஒதுங்கி இருக்கும், கேசி பழனிச்சாமி உள்ளிட்டோரை கட்சிக்குள் அழைத்து வரவேண்டும் என்பது தான் கட்சிக்கு வல் சேர்க்கும் என சில சீனியர்கள் எடப்பாடி பழனிச்சாமி இடம் பேசி இருக்கின்றனர்.

    Advertisement

    எஸ்பி வேலுமணி

    மேலும் விழுப்புரத்தில் சண்முகம், கோவையில் எஸ்பி வேலுமணி உள்ளிட்ட வலுவான தலைவர்கள் அதிருப்தியுடன் செயல்படுவது அல்லது வேறு கட்சிக்கு சென்றால் அது அதிமுகவுக்கு பாதகமான சூழலை உருவாக்கும். இது உள்ளாட்சித் தேர்தலில் மிகப்பெரிய பிரச்சினையை ஏற்படுத்தும் என்பதால் அவர்களை சமாதானம் செய்யலாம் என பேசினார்களாம்.

    செயற்குழு பொதுக்குழு

    இதை அடுத்து பிரிந்து சென்றவர்களையும் அதிருப்தியில் இருப்பவர்களையும் அழைத்து பேச எடப்பாடி பழனிச்சாமி தயாராக இருக்கிறார் என்கின்றனர். அதற்குப் பிறகு செயற்குழு பொதுக்குழு உள்ளிட்ட விவகாரங்களை கவனித்துக் கொள்ளலாம் எனவும் ,இப்போதைக்கு கட்சியை வலுப்படுத்துவதே முக்கியம் என்பது தான் எடப்பாடியின் பிளான் என்கின்றனர்.

    English Summary

    Edappadi Palaniswami is reportedly preparing talks with disgruntled leaders and expelled groups to strengthen AIADMK ahead of local body elections.