சென்னை: தமிழக மின்சாரத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் அதிமுக, திமுகவை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். சமீபத்தில் அதிமுகவின் சொத்துக்களை கைப்பற்ற பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முயற்சிப்பதாக கூறிய நிலையில் அந்த கருத்தை 7 நாட்களுக்குள் திரும்ப பெற்று மன்னிப்பு கோரவேண்டும். இல்லாவிட்டால் ரூ.1 கோடி கோரி அவதூறு வழக்கு தொடரப்படும் எ ன சிடிஆர் நிர்மல் குமாருக்கு அதிமுக சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் விஜய்யின் அமைச்சரவையில் மின்சாரத்துறை அமைச்சராக சிடிஆர் நிர்மல் குமார் உள்ளார். கடந்த 9ம் தேதி மதுராந்தகம், தாராபுரம் சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகின. இந்த 2 தொகுதிகளிலும் தவெக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். மதுராந்தகத்தில் மரகதம் குமரவேல், தாராபுரத்தில் சத்தியபாமா ஆகியோர் வெற்றி பெற்றனர். இவர்கள் 2 பேரும் கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுகவில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். பிறகு எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்து மறுபடியும் வெற்றி பெற்றுள்ளனர். இதன்மூலம் அதிமுக வசம் இருந்த மதுராந்தகம், தாராபுரம் சட்டசபை தொகுதிகளில் தவெக வசமானது. அதிமுகவின் இந்த தேர்தல் தோல்வியை சிடிஆர் நிர்மல் குமார் விமர்சனம் செய்திருந்தார். குறிப்பாக அதிமுக பொதுச்செயலாளரை சாடியிருந்தார். இதுதொடர்பாக சிடிஆர் நிர்மல் குமார், ''எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக 'லெட்டர் பேடு' கட்சியாக மாறி வருகிறது. எடப்பாடி பழனிச்சாமி அதிமுக சொத்துகளை அபகரிக்க முயற்சித்து வருகிறார்'' என்று கூறியிருந்தார். இது அதிமுகவினரையும் கொந்தளிக்க செய்தது. எடப்பாடி பழனிச்சாமி மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சிடிஆர் நிர்மல் குமார் முன்வைப்பதாக அதிமுக தலைவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் தான் எடப்பாடி பழனிச்சாமி பற்றி அவதூறு பரப்பியதாக கூறி அமைச்சர் நிர்மல்குமாருக்கு அதிமுக கொறடா அக்ரி.கிருஷ்ணமூர்த்தி சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், '' எடப்பாடி பழனிச்சாமி பற்றி கூறிய ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கு பொறுப்பேற்று 7 நாட்களில் பொதுவெளியில மன்னிப்பு கோர வேண்டும். மேலும் இந்த குற்றச்சாட்டை திரும்ப பெற வேண்டும். தவறும்பட்சத்தில் நீதிமன்றத்தில் ரூ.1 கோடி கேட்டு அவதூறு வழக்கு தொடரப்படும்'' என்று கூறப்பட்டுள்ளது. இது சிடிஆர் நிர்மல் குமாருக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.அதிமுகவில் இருந்து 15 எம்எல்ஏக்கள் வருவாங்கன்னு சொன்னேனா? எப்போ?செங்கோட்டையன் கேள்வி
விஜய்யை நான் புகழவில்லை.. செங்கோட்டையன் தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதி விலகல்