சென்னை: தமிழக சட்டசபையில் காவல்துறை மற்றும் தீ அணைப்புத்துறை மானிய கோரிக்கை விவாதம் இன்று நடைபெற்றது. இந்த விவாதத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சேலத்தில் உள்ள தனது தோட்டத்தில் போர்வெல்லின் மின் ஒயரை திருடிவிட்டார்கள் என்று என்று கூறினார். எடபபடி பழனிசாமி பேசியதாவது:-
முதியவர்களை குறிவைத்து கடந்த காலத்தில் கொங்கு மண்டலத்தில் அதிகமான கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இப்போதும் நடைபெற்று கொண்டு இருக்கிறது. இதுபோன்ற குற்றங்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் பார்த்துக்கொள்ள் வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். போக்சோ பெண்களுக்கு எதிரான குற்றங்க்ளை தடுப்பதில் காவல்துறை கவனமுடன் சிறப்பாக செயல்பட வேண்டும்.
பெண்கள் வன்கொடுமைக்கு ஆளாவது தொடர் கதையாகி வருவது வேதனை அளிக்கிறது. சிங்கப்பெண் என்ற அதிரடிப்படை தவெக அரசு ஆரம்பித்துள்ளது. ஆனால், இந்த படைக்கு முழுமையான அதிகாரம் வழங்கப்படவில்லை. அவர்களுக்கு அதிகாரம் வழங்கினால்தான் உடனுக்கு உடன் நடவடிக்கை எடுக்க முடியும். குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டுபிடித்தால் கூட அவர்களை கைது செய்ய முடியாத சூழல் உள்ளது. எனவே அவர்களுக்கு தகுந்த அதிகாரம் வழங்கப்படவேண்டும். பாலியல் வன்கொடுமை அதிகரித்துள்ளது. குற்ற செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு தக்க தண்டனையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். இன்று விவசாயிகள் பம்பு செட் வைத்து இருக்கிறார்கள். பம்புசெட்டை திருடிவிட்டு போய்விடுகிறார்கள். காப்பர் வயர் திருடப்பட்டு வருகிறது. ஆடு மாடு போன்ற கால்நடைகளையும் திருடிச்செலும் சூழல் ஏற்பட்டு இருக்கிறது. இதுக்கெல்லாம் காரணம் போதை ஆசாமிகள்தான். பணம் இல்லையென்றால் இப்படிபட்ட திருட்டு வேலைகளில் ஈடுபடுகிறார்கள். காவல்துறையினர் விவசாயிகள் கொடுக்கும் புகார்களுக்கு வழக்குப்பதிவு செய்யாமல் அலைக்கழித்து வருகிறார்கள். சேலம் மாவட்டம் எடப்பாடி வட்டம் சிலுவலம்பாளையம் கிராமத்தில் உள்ள என்னுடைய தோட்டத்தில் இரண்டு நாளைக்கு முன்பு, போர்வெல்லுக்கு அமைக்கப்பட்டு இருந்த மின் வயர்களை அறுத்து எடுத்துவிட்டு போய்விட்டார்கள். இதை நான் பேரவை தலைவரிடம் காட்டியிருக்கிறோம். எனக்கே இப்படிப்பட்ட நிலை என்றால் மக்களுக்கு எப்படிப்பட்ட நிலை இருக்கும்" என்றார்.முழுமையான அதிகாரம் வழங்கப்படவில்லை
எனக்கே இப்படிப்பட்ட நிலை