சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், கவிஞர் வைரமுத்துவும் ஒன்றாக நிகழ்வில் பங்கேற்றனர். இந்த நிகழ்வு பற்றி வைரமுத்து நெகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார்.
திருச்சியில் அதிமுக நிர்வாகி இல்லத் திருமண விழாவில் அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். இந்தத் திருமண நிகழ்வில் கவிஞர் வைரமுத்து, குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் மற்றும் ஏராளமான அதிமுகவினர் பங்கேற்றனர்.
இந்த விழாவில் பேசிய கவிஞர் வைரமுத்து, "தனிப்பட்ட முறையில் எடப்பாடி பழனிசாமியை எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஒரு எளிமையான மனிதர். விவசாய குடும்பத்தில் பிறந்து தனது உழைப்பால் உயர்ந்த இடத்துக்கு வந்தவர் எடப்பாடி பழனிசாமி. நாமெல்லாம் ஒரு குடும்பத்துப் பிள்ளைகள், ஒரு தாயின் ரத்தங்கள்" என நெகிழ்ச்சியோடு பேசினார். இந்த நிகழ்வு தொடர்பாக வைரமுத்து எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மணமக்கள்: மணமகளின் தந்தை சிவகுமார் மணமகனின் தந்தை மணமகள் வீட்டார் சார்பில் வாழ்த்துரையில் சொன்னேன்: "இந்த மணவிழாவில் யாருக்கு மாப்பிள்ளை யாரோ மணமகளாக வரும் தி.மு.க மேடைகளில் மட்டுமே என்று இந்த மேடையில் எடப்பாடி அவர்களைத் ஒரு விவசாயி மணமக்கள்
"முன்னாள் முதலமைச்சர்
எடப்பாடி கே.பழனிசாமி
நிகழ்த்தி வைத்த திருமணத்தில்
நானும் கலந்துகொண்டேன்
தியானேஸ்வரன் - மிருதுளா
அ.இ.அ.தி.மு.க
திருச்சி மாவட்டச் செயலாளர்
மணிகார்த்திக்
வெற்றித் தமிழர் பேரவையின்
தேனி மாவட்டத் தலைவர்
எடப்பாடியார் கலந்துகொண்டார்;
மணமகன் வீட்டார் சார்பில்
நான் கலந்துகொண்டேன்
சிலகனவுகள்
நனவாகியிருக்கின்றன
என்ற மணமகள் வீட்டார் கனவு
மங்கை எவளோ என்ற
மணமகன் வீட்டார் கனவு
பார்த்துப் பழகிய வைரமுத்து
அ.தி.மு.க மேடைகளுக்கு
வரமாட்டாரா என்று
உங்கள் தொண்டர்கள்
பலர் கண்ட கனவு
மூன்று கனவுகள் நனவாகியிருக்கின்றன
தனிப்பட்ட முறையில்
எனக்குப் பிடிக்கும்
முதலமைச்சராக முடியுமென்று
சாதித்துக் காட்டிய
தலைவர் அவர்
தமிழ் அறத்தோடும்
தமிழர்களின் விழுமியங்களோடும்
வாழ்க பல்லாண்டு"
என்று வாழ்த்தினேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.