எடப்பாடி பழனிசாமி தூக்கிய பகடைக்காய்.. பதவி இழக்கும் முன்னாள்கள் யார்? எஸ்பி வேலுமணிக்கும் சிக்கலா

  • சென்னை: எடப்பாடி பழனிசாமி அடுத்த அதிரடிக்கு ரெடியாகிவிட்டார்.. இதனால் எஸ்பி வேலுமணி உள்ளிட்ட மூத்த தலைவர்களின் பதவியையும் பறிக்க அதிமுக பொதுச்செயலாளர் முடிவெடுத்து விடுவாரோ? என்ற அதிர்ச்சி கலக்கம் தொண்டர்களிடம் சூழ்ந்துள்ளது.. அதிமுகவில் எப்போதுமே அமைதிக்கு பின்னால் ஒரு பெரிய புயல் மையம் கொண்டிருப்பது வாடிக்கையான ஒன்றுதான் என்றாலும், அந்த புயல் இப்போது வீச ஆரம்பித்து விட்டது என்றே சொல்லலாம்.
    கட்சிக்குள் இருக்கும் உட்கட்சிப் பூசல்கள், அதிருப்திகள் ஒருபுறம் புகைய... இன்னொரு புறம் எடப்பாடி பழனிசாமி எடுத்திருக்கும் அந்த அதிரடி முடிவுதான் இப்போது தமிழக அரசியலின் ஹாட் டாப்பிக்!

    Advertisement

    பொதுவாகவே இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் வருடத்துக்கு ஒருமுறை பொதுக்குழுவையும், 2 முறை செயற்குழுவையும் கட்டாயம் கூட்ட வேண்டும்.

    Advertisement

    அதிமுகவில் பரபரப்பு

    அந்தவகையில் அதிமுகவை பொறுத்தவரை ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதத்தில்தான் இந்த செயற்குழு, பொதுக்குழு ஆட்டம் களைகட்டும். ஆனால், இந்த முறை வழக்கமான பாணியை உடைத்து, ஆகஸ்ட் மாதமே செயற்குழுவைக் கூட்ட எடப்பாடி பழனிசாமி ஆயத்தமாகி வருவதாக கூறப்படுகிறது.. இதற்கு பின்னணியில் இருக்கும் அரசியல் கணக்குகளும் மலைப்பை தருகின்றன.

    கடந்த ஜூன் 13ம் தேதி முதல் ஜூலை 25 வரை, அதிமுகவின் 85 மாவட்ட நிர்வாகிகளையும் அழைத்து எடப்பாடி பழனிசாமி தனித்தனியாக ஆலோசனை நடத்தினார். சட்டப்பேரவை தேர்தல் தோல்விக்கான காரணங்கள், கள நிலவரம் எனப் பல விஷயங்கள் இதில் அலசப்பட்டன. ஆனால் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சில சம்பவங்கள் எடப்பாடியை அப்செட் செய்து விட்டதாக தெரிகிறது.

    Advertisement

    எஸ்பி வேலுமணி பதவி பறிப்பு?

    முக்கியமாக, முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், சி.வி.சண்முகம், பி.தங்கமணி போன்ற மூத்த தலைவர்களும், அருண்மொழி தேவன், சுகுமார், ராகேஷ் போன்ற எம்.எல்.ஏ-க்களும் இந்த கூட்டங்களில் பங்கேற்காமல் தவிர்த்தது அதிமுக வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்தக் கூட்டத்திற்கு யார் யார் வரவில்லை என்ற லிஸ்ட்டை எடப்பாடி பழனிசாமி தனியாக குறித்து வைத்துள்ளாராம்.

    எனவே கூட்டத்தை புறக்கணித்த நிர்வாகிகள் மீது அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்க போகிறது? என்ற கேள்வியும் எழுந்து வருகிறது.. கூட்டத்துக்கு வராத நிர்வாகிகளிடம் விளக்கம் கேட்கவும், அதிருப்தியில் இருப்பவர்களிடம் முதற்கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தவும் தலைமை முடிவு செய்துள்ளதாம்..

    Advertisement

    செயற்குழு கூட்டம் எப்போது

    ஒருவேளை பேச்சுவார்த்தைக்கு உடன்படாத பட்சத்தில், அவர்களை கட்சியிலிருந்து தூக்கி எறியவும் எடப்பாடி பழனிசாமி தயங்கப்போவதில்லை என்ற தகவலும் கசிகிறது. காலியாகும் பதவிகளுக்கு உடனடியாக புதிய நிர்வாகிகளை நியமித்து, கட்சியை தன் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதே எடப்பாடியின் திட்டம்.

    அதுமட்டுமல்ல, தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் வரப்போகிறது.. உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களைக் கைப்பற்றி மீண்டும் தனது பலத்தை நிரூபித்தாக வேண்டிய கட்டாயத்தில் அதிமுக இருக்கிறது... அதனால்தான் முக்கிய நிர்வாகிகள் பலரும் இந்த தேர்தலில் நேரடியாகக் களம் இறங்க வேண்டும் என்று எடப்பாடி ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளார்.

    Advertisement

    உள்ளாட்சி தேர்தல்

    இதையெல்லாம் மனதில் வைத்துதான், வரும் ஆகஸ்ட் அதிமுக செயற்குழுவை கூட்ட போவதாக தெரிகிறது.. அந்த செயற்குழுவில், உட்கட்சிப் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதோடு, உள்ளாட்சித் தேர்தலுக்கான வியூகங்களும் இறுதி செய்யப்படவுள்ளன.

    உட்கட்சிப் பூசல்களை துடைத்தெறிந்துவிட்டு எடப்பாடி பழனிசாமி நினைத்த இலக்கை அடைவாரா அல்லது இந்த அதிரடி நடவடிக்கைகள் மேலும் புயலைக் கிளப்புமா? என்றெல்லாம் தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்...!!

    English Summary

    Edappadi Palaniswami's Big Move.. Which AIADMK Leaders Could Lose Their Posts? Is SP Velumani at Risk?