காலை உணவு திட்டம்.. புதிய பெயர் பலகைக்கு நிதி கொடுக்காத கல்வித்துறை.. கவலையில் தலைமை ஆசிரியர்கள்!

  • சென்னை: தமிழ்நாட்டில் காமராஜர் காலை உணவு திட்டம் தொடர்பாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில் புதிய "பெயர் பலகை" வைக்க உத்தரவிட்டுள்ள கல்வித்துறை, அதற்கான நிதியை ஒதுக்காதது தெரிய வந்துள்ளது. பள்ளிகள் காலை உணவு திட்டம் தொடர்பாக பெயர் பலகையை வைத்து, அதனை புகைப்படம் எடுத்து அனுப்ப தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    Advertisement

    திமுக ஆட்சியின் போது அப்போதைய முதல்வர் ஸ்டாலின் முதல்வர் காலை உணவு திட்டத்தை உருவாக்கினார். 1 முதல் 5 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் மொத்தமாக 37,447 பள்ளிகளில் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டம் பல்வேறு மாநிலங்களிலும் செயல்படுத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

    Advertisement

    தற்போது தவெக ஆட்சி அமைத்துள்ள சூழலில் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளதோடு, பெயர் மாற்றமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. காமராஜர் காலை உணவு திட்டம் என்று பெயர் மாற்றம் செய்து அறிவித்துள்ள தவெக அரசு, 8ஆம் வகுப்பு வரை காலை உணவு திட்டத்தை விரிவாக்கம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.

    செப்டம்பர் 17ஆம் தேதி காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. வெளிநாட்டு பயணத்தை முடித்துவிட்டு திரும்பும் முதல்வர், செப்டம்பர் 17ல் விருதுநகரில் காமராஜர் படித்த பள்ளியில் காலை உணவு திட்டத்தின் விரிவாக்கத்தை விஜய் தொடங்கி வைக்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    Advertisement

    இந்த நிலையில் புதிய திட்டத்திற்காக பெயர் பலகை வைக்க கல்வித்துறை தரப்பில் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே 37,447 பள்ளிகளில் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படும் சூழலில், தற்போது புதிதாக 15,454 பள்ளிகளுக்கு விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதனால் சுமார் 52 ஆயிரம் பள்ளிகளுக்கு காலை உணவு திட்டம் தொடர்பாக புதிய பெயர் பலகை வைக்க வேண்டிய சூழல் உள்ளது.

    ஒரு பள்ளிக்கு பெயர் பலகை வைக்க ரூ.2 ஆயிரம் வரை செலவாகும் என்று பார்க்கப்படுகிறது. ஆனால் கல்வித்துறை தரப்பில் பெயர் பலகை வைப்பதற்கு எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை. திமுக ஆட்சியின் போது பெயர் பலகை வைப்பதற்கான செலவை உள்ளாட்சி அமைப்புகள் ஏற்றுக் கொண்டன. ஆனால் இப்போது அந்த செலவை யார் ஏற்பது என்ற கேள்வி எழுந்துள்ளது.

    Advertisement

    ஆனால் பெயர் பலகை கட்டாயம் புதிதாக வைத்துவிட்டு, அதன் புகைப்படங்களை அனுப்ப வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் அந்த செலவை தங்கள் தலையில் கட்டிவிடுவார்களோ என்று தலைமை ஆசிரியர்கள் கவலையில் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

    English Summary

    Education Department Directs 50,000 Schools to Install Kamarajar Breakfast Scheme nameboards Without Allocating Funds