சென்னை: சென்னை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் சட்டவிரோதமாக பாலியல் தொழில் நடந்து வந்த வீடுகள் மற்றும் லாட்ஜ்களில் காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தியிருக்கிறார்கள்.. வெளியூர் பயணிகளின் எண்களை சேகரித்து வாட்ஸ் அப்பில் ரகசியமாக நடந்த அந்த அதிர்ச்சி ஆட்டம், இப்போது போலீசாரின் அதிரடி வேட்டையில் அம்பலமாகியுள்ளது!
தமிழகத்தில் வாடகைக்கு வீடு எடுத்தும், லாட்ஜ்களிலும் பாலியல் தொழில் நடத்தி வருபவர்களை போலீசார் தொடர்ந்து கைது செய்து வருகிறார்கள்.. காவல்துறை அதிகாரிகள் இதற்கெனவே அதிரடியான சோதனைகளை மேற்கொண்டும் வருகிறார்கள்.
2 நாட்களுக்கு முன்புகூட, திருச்சி கே.கே. நகர் பகுதியில் உள்ள அன்பழகன் நகரில், ஒரு அதிரடியை போலீசார் மேற்கொண்டனர்.. அங்குள்ள ஒரு வீட்டில் சட்டவிரோதமான முறையில் பாலியல் தொழில் நடைபெற்று வருவதாக கே.கே.நகர் காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.. இந்த தகவலின் நம்பகத்தன்மையை உறுதி செய்த காவல் ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீசார், உடனடியாக குறிப்பிட்ட வீட்டிற்குள் நுழைந்து அதிரடி சோதனையை மேற்கொண்டனர். அப்போது அந்த வீட்டில் பாலியல் தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 3 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் என மொத்தம் 5 பேரை போலீசார் கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.5,500 ரொக்கப் பணம் மற்றும் சட்டவிரோதத் தொடர்புகளுக்குப் பயன்படுத்தப்பட்ட 6 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய, சோதனையின்போது 2 பேர் தப்பி ஓடிவிட்டதால், அவர்களை பிடிக்கவும் தேடுதல் வேட்டையை முடுக்கிவிட்டுள்ளனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் அடுத்த பரபரப்பு சென்னையில் நடந்துள்ளது.. சென்னை எழும்பூர் தமிழ் சாலையில் உள்ள ஒரு தனியார் லாட்ஜில் வெளிமாநில ஆட்கள் வந்து தங்குவது வழக்கம். அப்படி தங்குபவர்கள் தங்களின் செல்போன் எண்ணை லாட்ஜில் கொடுப்பார்கள். அந்த நம்பர்களை எடுத்துக்கொண்டு, வாட்ஸ் அப் மூலம் அவர்களுக்கு இளம் பெண்களின் போட்டோக்களை அனுப்பி ஒரு கும்பல் விபச்சாரம் நடத்தி வந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து விபச்சார தடுப்பு பிரிவு உதவி கமிஷனர் ராஜலட்சுமிக்கு ரகசிய புகார் கிடைத்தது. அந்த புகாரின் மீது விசாரணை நடத்த விபசார தடுப்பு பிரிவு-1 இன்ஸ்பெக்டர் சிவகுமாருக்கு உதவி கமிஷனர் உத்தரவிட்டார். அதன்படி இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையிலான போலீசார் குழுவினர் சம்பந்தப்பட்ட லாட்ஜில் நேற்று முன்தினம் அதிரடி சோதனை நடத்தினார்கள்.. அப்போது லாட்ஜின் முதல் மாடியிலிருந்த அறையில் 2 இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்த ராஜா அண்ணாமலைபுரத்தை சேர்ந்த பாலியல் புரோக்கர் டேவிட் ஜெயகுமார் (39) என்பவர் 2 இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்தது உறுதியானது.. உடனடியாக டேவிட் ஜெயகுமாரை போலீசார் கைது செய்தனர். அத்துடன் அவர்கள் பயன்படுத்திய 3 செல்போன்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 2 இளம்பெண்கள் பத்திரமாக மீட்கப்பட்டு, அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட புரோக்கரை, போலீசார் சைதாப்பேட்டை 23வது எம்எம் நீதிமன்ற நீதிபதி பத்மகுமாரி உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர். திருச்சியிலும் சென்னையிலும் ஒரே நேரத்தில் அடுத்தடுத்து நடந்துள்ள இந்த போலீஸ் வேட்டை பரபரப்பை தந்து வருகிறது.. பொதுமக்கள் விழிப்புடன் இருந்து தகவல்களை தெரிவித்தால் மட்டுமே, இதுபோன்ற சட்டவிரோதக் குற்றங்களை சமுதாயத்தில் இருந்து முற்றுப்புள்ளியாக அழிக்க முடியும்...!!!திருச்சி கேகே நகர்
மீட்கப்பட்ட 2 பெண்கள்
சென்னை எழும்பூர் லாட்ஜ்
முதல்மாடியில் 2 பெண்கள் மீட்பு