சூரியனுக்கு போடணும்னு சொன்னேன்.. விசிலுக்கு அழுத்த சொல்றாங்க.. தேர்தல் அலுவலர் மீது மூதாட்டி புகார்!

  • திருப்பூர்: தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் விசில் சின்னத்திற்கு வாக்களிக்க தேர்தல் அலுவலர் கட்டாயப்படுத்தியதாக மூதாட்டி ஒருவர் பரபரப்பு புகார் அளித்துள்ளார். திமுகவின் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க விரும்புவதாக மூதாட்டி கூறியதாகவும், அதற்கு விரலில் மை வைக்கும் அலுவலர், தவெகவின் விசில் சின்ன பட்டனை அழுத்த சொன்னதாகவும் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மதியம் 1 மணி நிலவரப்படி மதுராந்தகம் தொகுதியில் 55.18% வாக்குகள் பதிவாகி இருக்கிறது. அதேபோல் தாராபுரம் தொகுதியில் 56% வாக்குகள் பதிவாகி ருக்கிறது. இரு தொகுதிகளிலும் மக்கள் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர்.

    Advertisement

    இந்த நிலையில் தாராபுரம் தொகுதியில் விசில் சின்னத்திற்கு வாக்களிக்க தேர்தல் அலுவலர் கட்டாயப்படுத்தியதாக மூதாட்டி ஒருவர் பரபரப்பு புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக மூதாட்டி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், வாக்களிக்க வாக்குச்சாவடிக்கு வந்த போது விரலில் மை வைப்பவர் அப்படியே என் பக்கமாக வந்தார்.

    எந்த சின்னத்தில் வாக்களிக்க போகிறீர்கள் என்றார். நான் சூரியனுக்கு என்றேன்.. அவங்க விசில் சின்னத்தை காட்டி, இதுக்கு அழுத்துங்கள் என்றார்கள். நான் அதை அழுத்தவில்லை என்று கூறி சூரியன் சின்னத்தை அழுத்திவிட்டு வந்தேன். உடனே அவர் சரி போங்கள் என்றார். நான் அவரை அழைக்கவே இல்லை. ஆனால் தேர்தல் அலுவலரான அந்த அம்மாவே வந்தாங்க..

    Advertisement
    உளறி கொட்டிய சத்தியபாமா.. தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்.. சிக்கலில் தவெக

    அந்த அம்மா என்னை விசில் சின்னத்திற்கு வாக்களிக்க சொன்னார்கள். ஆனால் நான் சூரியனுக்கு போட்டேன்.. என்னை கட்டாயப்படுத்தியதற்காக புகார் அளித்தேன். இங்கு பேசியதை தான் அதிகாரிகளிடமும் கூறினேன் என்று தெரிவித்துள்ளார். மூதாட்டியின் இந்த பேட்டி திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கட்சித் துண்டுடன் வாக்குச்சாவடி பகுதிக்குள் கூட யாரையும் காவல்துறையினர் அனுமதிக்க மாட்டார்கள். ஆனால் தேர்தல் அலுவலரே தவெகவுக்கு வாக்களிக்க மூதாட்டியை கட்டாயப்படுத்தி இருப்பது விவாதமாகி இருக்கிறது. இதனால் கட்சியினர் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும் அறுவுறுத்தல்கள் தொடங்கி இருக்கிறது.

    English Summary

    Elderly Voter Accuses Poll Official of Forcing Her to Vote for Whistle Symbol in Dharapuram By election 2026