சென்னை: தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு அலுவலர்களுக்கு ஒரு மாத அடிப்படை சம்பளத்தை சிறப்பு ஊதியமாக வழங்க தமிழக அரசு உத்தரவிட்டு ரூ. 198 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
அதன்படி தேர்தல் நடத்தும் மாவட்டத் தேர்தல் அலுவலர்கள், பிற அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு அதிகபட்சமாக ரூ. 45,000 வரை சிறப்பு ஊதியம் வழங்கப்பட உள்ளது.
மாவட்டத் தேர்தல் அலுவலர்கள், சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட ஆட்சியர்களின் நேர்முக உதவியாளர் மற்றும் சிறப்பு வட்டாட்சியர்கள் ஆகியோருக்கு, ஒரு மாத அடிப்படை ஊதியம் அல்லது அதிகபட்சம் ரூ. 45,000 வரை வழங்கப்படும். இதில் எது குறைவோ அது வழங்கப்படும். அதேபோல, மாவட்ட தேர்தல் அலுவலக பிரிவில் பணியாற்றிய அலுவலர்கள், ஊழியர்கள், மாவட்ட வருவாய் அலுவலர்கள், வருவாய் கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள், மாநகராட்சி / நகராட்சி ஆணையர்கள். - பறக்கும் படை / வீடியோ கண்காணிப்பு குழு, கணக்கு குழு, நடத்தை விதிமுறை குழு, உதவி செலவின பார்வையாளர்கள், கண்காணிப்பு குழு, மண்டல உதவியாளர்கள் ஆகியோருக்கு ஒரு மாத அடிப்படை ஊதியம் அதிகபட்சமாக ரூ. 30,000 வழங்கப்படும். மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள், நோடல் அதிகாரிகள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், ஆட்சியர் அலுவலக வருவாய் பிரிவில் தேர்தல் பணியாற்றிய பிற பிரிவினருக்கு அரை மாத அடிப்படை ஊதியம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும். அதிகபட்சமாக ரூ. 20,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். மற்ற பணியாளர்கள்: 1.5.2026 அன்றைய அடிப்படை சம்பளத்தை வைத்து கணக்கிடப்படும். இதற்காக ரூ. 198 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
சீனியர் புரோகிராமர்கள் / புரோகிராமர்கள் / IT ஊழியர்கள்:
ரூ.20,000. தேர்தல் டேட்டா ஆபரேட்டர்கள்: ரூ.10,000. பிரிவு எழுத்தர்கள் (Section Writers): ரூ.7,500 சிறப்பு ஊதியமாக வழங்கப்படும்.
தேர்தல் பணியில் முழுமையாக பணியாற்றியிருக்க வேண்டும், முறையான நியமன ஆணை இருக்க வேண்டும்.
ஏற்கனவே ஊதியம் பெற்ற மண்டல அலுவலர்களுக்கு, அந்த தொகை கழித்து மீதி வழங்கப்படும்.
ஒருவர் இரண்டு பிரிவில் தகுதி பெற்றாலும், ஏதேனும் ஒரு தலைப்பில் மட்டுமே பெற முடியும்.
மாவட்ட தேர்தல் அதிகாரிகளே ECS மூலம் பணத்தை நேரடியாக வழங்குவார்கள். ஒரு மாதத்திற்குள் அரசுக்கு விரிவான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.