சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே நாளை மின்சார ரயில்கள் ரத்து.. 8 ரயில்களின் விவரம்

  • சென்னை: சென்னை எழும்பூர் - விழுப்புரம் வழித்தடத்தில் கூடுவாஞ்சேரி பணிமனையில் நாளை(வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே, நாளை இந்த வழித்தடத்தில் 8 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. அதன்படி, சென்னை கடற்கரையில் இருந்து காலை 11.28, மதியம் 12.02, 12.30, 1.45 ஆகிய நேரங்களில் செங்கல்பட்டுக்கு புறப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

    Advertisement

    சென்னையை பொறுத்தவரை பிரதான மின்சார ரயில் வழித்தடம் என்றால் சென்னை கடற்கரை-செங்கல்பட்டு வழித்தடம் தான். இந்த வழித்தடத்தில் ரயில்கள் ஒரு நாள் ஓடவில்லை என்றாலும், மொத்த சென்னையும் ஸ்தம்பித்துவிடும். செங்கல்பட்டு, தாம்பரம், காட்டாங்குளத்தூர், பொத்தேரி, கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், சிங்க பெருமாள் கோவில், பரனூர் என சுற்றுவட்டாரத்தில் உள்ள அத்தனை பேருந்து நிலையங்களிலும் கூட்டம் அலைமோதும். சென்னையில் கடற்கரை முதல் தாம்பரம் வரை நான்கு வழித்தடங்கள் உள்ளன. அதனால் பெரும்பாலும் ரயில் போக்குவரத்தில் சிக்கல் ஏற்படுவது இல்லை.. ஆனால் தாம்பரம் செங்கல்பட்டு இடையே 3 வழித்தடங்கள் தான் உள்ளன. இதனால் இந்த வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொண்டால், கணிசமான அளவு ரயில்களை ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது.

    Advertisement

    குறிப்பாக கூடுவாஞ்சேரி, காட்டாங்குளத்தூர் பகுதிகளில் அடிக்கடி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த பணிகள் பகலில் நடந்தால் ரயில்களை ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்படும். அப்படியான சூழல் தான் நாளை ஏற்பட்டுள்ளது.. கூடுவாஞ்சேரி பணிமனையில் நாளை பராமரிப்பு பணிகள் நடப்பதால் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில் கூறுகையில், "சென்னை எழும்பூர் - விழுப்புரம் வழித்தடத்தில் கூடுவாஞ்சேரி பணிமனையில் நாளை(வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே, நாளை இந்த வழித்தடத்தில் 8 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. அதன்படி, சென்னை கடற்கரையில் இருந்து காலை 11.28, மதியம் 12.02, 12.30, 1.45 ஆகிய நேரங்களில் செங்கல்பட்டுக்கு புறப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

    Advertisement

    மறுமார்க்கமாக செங்கல்பட்டில் இருந்து மதியம் 1.35, 2.15, 3 மணி, 4.25 ஆகிய நேரங்களில் கடற்கரை செல்லும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படும். பயணிகளின் வசதிக்காக கடற்கரையில் இருந்து தாம்பரம் ரத்துக்கு காலை 11.28, மதியம் 12.02, 12.30, 1.45 ஆகிய நேரத்திலும், தாம்பரத்தில் இருந்து கடற்கரைக்கு மதியம் 2.30, 3.15, 4 மணி, 5.24 ஆகிய நேரத்திலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    English Summary

    Electric train services between Chennai Beach and Chengalpattu cancelled tomorrow; details of 8 trains